2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் தமிழகத்தை ஒரு கை பார்த்துவிட்டது. இதைச் செய்ய மேலதிக மழையைப் பயன்படுத்திக்கொண்டது.[ முன்பு சுனாமிக்கு கடல் ]. நாளைக்கு....?
கடலூர் , தென்மாவட்டங்களில்
சில, வட மாவட்டங்கள் ; ஏறக்குறைய சில தென் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்கள்
அனைத்தும் ; அழிவையும் , பேரழிவையும் சந்தித்துள்ளன.
இதை ஊடகங்கள்
அம்பலப்படுத்தின. காட்சிப் பொருளாக்கியும் விட்டனர். மேலும் ஊடகங்கள் தங்களின்
மனச்சார்புக்குகந்து உதவி , சீரமைப்புப் பணியில் பணியாற்றிய கட்சிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்தன ; சில ஊடகங்கள் கட்சியின் அங்கமாகவே செயல்பட்டன. இதுபோக ,
தன்னார்வக் குழுக்களும் , தன்னார்வலர்களும் ; தன்னெழுச்சியாக மாணவர்கள் , இளைஞர்கள்
பங்கேற்பும் அங்கங்கே நடந்தது வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஊடகங்கள் இவர்கள்பால்
இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் அவர்களின் மிதவாதிகள் கூட மகிழ்ச்சியும்
உற்சாகமும் அடைந்திருப்பர். கட்சிகள் இதைத் தேர்தல் களமாகவே கவனித்துக்கொண்டனர் [
ஆனால் வாய்மொழியோ இதை அரசியலாக்க வேண்டாம் என்பது ].
சென்னை தலைநகர் அந்தஸ்து
பெற்றதால் மேலோங்கிய குரலும் ; மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கடலூரின் குரல்
ஈனஸ்வரத்திலும் ஒலித்தது.
சென்னையைக் காப்போம் ! சென்னையை மீட்போம் !!.
அடேங்கப்பா ! இதைப் பொருத்திருந்து பார்ப்போம் . குடிசைவாழ் , கூவம் வாழ் மக்களின்
வீடுகள் , குடிசைகள் எப்படி என்று தெரியவில்லை ; தெரிந்தபின்தான் மற்றவை.
இவர்களில் பலரும் ,
நடுத்தர மக்களில் சிலரும் , பிழைப்பு அரசியல் தரகர்களுக்கும் அரசு நிலத்தை
ஆக்கிரமிப்பது சமூக விரோதச் செயலாகக்கூடத் தோன்றாமல்,நெஞ்சுயர்த்தி கட்டிடங்களும்,
குடிசைகளும் நிரவிக்கிடக்கின்றன.
இந்த ஆக்கிரமிப்புகள்
இருக்கும்வரை அபாயம் தொடரத்தானே செய்யும்.
சென்னை தினசரி , வார
இதழ்களின் தலைப்புகளின் கருத்துக்கள் கவனத்திற்குரியது.
ஆனந்த விகடன்
: நிலம்...நீர்...நதி !
Front
Line : AFTER THE DELUGE.
தினமலர் : ஆவேசம் . எம்.பி ; எம் . எல். ஏ ; கவுன்சிலர்
மீது 4 மாவட்டங்களில்
ஜூவி : சென்னை மூழ்க மழையின்
தவறு அல்ல மனிதனின்
தவறு !
ஜூவி கழுகார் :“அதிகாரம் இல்லாத
அமைச்சர்கள் அடக்கிவாசிக்கும்
அதிகாரிகள்
இடையில்
சிக்கித் தவிக்கிறது தமிழ்நாடு “.
இன்னும் பல இதழ்களில் பலவாறாக வெளிப்பாடு உள்ளது . விமர்சனங்களாகவும்
, ஆலோசனைகளாகவும் வந்துள்ளன.
மற்றமையின் கேள்வி ,
எழுந்த விமர்சனங்கள், ஆலோசனைகள் மட்டும் பரிசீலனைக்குப் போதாது.
மனிதர்களின் கருத்து பேசுபவர்களின் ஆசை , மனஎழுச்சிகளும் சேர்ந்து
மொழியாகி , பேசப்படுகிறது.
கைநிறைய தரவுகள் ( Data ) உண்டு. காரணங்களும் கூறப்படுகிறது ,
கேட்கப்படுகிறது.
ஆனால், சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்களின் மனம் , உட்கிடக்கை என்னவாக
இருந்தது, இருக்கிறது? இது தெரியவேண்டும்.
மன அலசல் சுயமோகம் (Narcissism) பிரதானமான நோயாகவும், அது சமூகமயமாக மாறி வருவதாகவும் எச்சரிக்கிறது. ஒவ்வொருவருக்கும் சுய கௌரவம் ( Self Esteem) இருக்கும் ; இருக்கவும் வேண்டும் ஆனால் , இதுவே சுயமோகமானால் ( Narcissism ) , பிறருடனான உறவில் , அது தன்னைத்தானே எப்படி வழி நடத்தும் ? பிறரை எப்படி வழி நடத்தும் , மதிக்கும் , பயன்படுத்தும்? என்று நமக்குத் தெரிவது உதவிகரமாக இருக்கும் . நடந்தது கருத்துப் பிழையா? அல்லது ஆளுமைக் கோளாறா ? என்று தெரிந்துவிடும்.
இங்கு ஏற்கனவே வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சுயமோகக் குறிகள் கொடுக்கப்படுகின்றன. நடந்த பேரிடர் தெரியும் . விமர்சனம் , ஆலோசனை உண்டு. இனி , ஆட்சியாளர், அரசியல்வாதிகளின் உள்ளார்ந்த நடத்தைகளில் எத்தகைய சுயமோகக் கூறுகள் அவர்களை ஆட்சி செலுத்தியது என்று நீங்களே அடையாளம் காணமுடியும்.
Frequency of Narcissistic personality disorder:
Frequency of Narcissistic personality disorder:
1.
“அனைத்து முடிவெடுக்கும்
அதிகாரமும் அவர்களுக்கே.
2.
பிறரது கருத்துக்களுக்கு
காது கொடுப்பதற்கு பொறுமையின்மை அல்லது திறனின்மை.
3.
முறையான அதிகாரம்
எதுவுமின்றி வேலைகளைப் பகிர்வது / பிரதிநிதிகளை அனுப்புவது.
4.
எப்போதும் முன்னுரிமை
பெற்றவர்களாக தங்களை உணர்வது.
5.
பிற திறமையான
ஊழியர்கள், கீழ்மட்ட ஊழியர்களால் அச்சமுறுவது அல்லது பீதியடைவது.”
–
R . Glenn Ball and Darrel Puls.
6.
ஹோஹட் (Kohut) : “ நகைச்சுவையின்மை , பரிவின்மை அல்லது இணக்கமின்மை.
7.
காரணங்கூறமுடியாத
பொய்யுரைத்தல் குணாம்சமாகவே உள்ளது.
8.
மற்றவர்களைச்
சிறுமைப்படுத்துதல், ஆரோக்கியமான நகைச்சுவைக்குப் பதிலாக சுடுசொற்களைப் பயன்படுத்துவது ”.
Diagnostic And Statistical Manual Amendment V
9.
“ அடையாளம் (Identity ) , சுய
வரையறுப்பிற்கும் ; சுய கௌரவ ஒழுங்குபடுத்தலுக்கும் தேவைக்கதிகமாகப் பிறரைச்
சார்ந்திருப்பது ; மிகைப்படுத்தப்பட்ட சுய மதிப்பீடுகள் .
10. பரிவு ( Empathy ) : இதரர்களின்
உணர்வுகளை / தேவைகளை அங்கீகரிக்கக்கூடிய அல்லது அடையாளம் காணக்கூடிய திறனின்மை.
11. நெருக்கம் ( Intimacy ) : உறவுகள் பெரும்பாலும் மேலோட்டமானவையாகவே இருக்கும் ; கறாரான
சுயகௌரவ வரையறுப்பிற்கு எற்பவே நிலவும். இதரர்களின்
( others ) உணர்வுகள் மீது உண்மையான அக்கறை இல்லாததாலும் , தன் நலனுக்கான தேவை
மேலோங்கியிருப்பதாலும் பரஸ்பர உறவானது இயல்பானதாக இருக்காது.
12. பெருமித உணர்வால் ( grandiosity ) குணாம்சப்படுத்தப்படும்
பகை முரண்பாடு : சீரான அல்லது மறைமுகமான முன்னுரிமை பெற்றுள்ள உணர்வு ;
தன்னலப்போக்கு (self-centeredness ) ;
ஒருவர் ( தான் ) மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர் என்ற நம்பிக்கையை
விடாப்பிடியாகக் கொண்டிருப்பது ; பிறரிடம் கர்வமாக நடப்பது .
13. ( சிலர் ) பிறர் கவனம் ஈர்ப்பது (Attention
seeking ) : மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதற்கும் , மற்றவர்களின் கவனத்திற்குரியவராக இருப்பதற்கும் கடுமையாக முயற்சிப்பது
; தனக்கான மதிப்பைத் தொடர்ந்து தேடுபவராக இருப்பது ” .
Anne Manne
14. “ சுயமோக ஆளுமைக் கோளாறு ( narcissistic personality disorder) பரந்தளவிலான பெருமித உணர்வைக் கொண்டதாக உள்ளது. தான் பிறரால்
கவனிக்கப்படவேண்டும் என்கிற தீவிர ஆசை கொண்டதாக , முன்னுரிமை பெற்ற எண்ணம்
கொண்டதாக, பிறரைப் பயன்படுத்திக்கொள்ள ( exploit ) அல்லது பிறரைத்
தவறாக நடத்துவதற்கு விருப்ப முடையவராக இருப்பது , பிறரால் மதிக்கப்படவேண்டும்
என்கிற அதீத விருப்பமும் , பிறரிடம் பரிவு இல்லாமலும் உள்ளார்கள் . ஆனாலும் கூட ,
சுயமோகிகள் எளிதில் மனம் உடைந்து போகக்கூடியவர்களாகவும் , அவமானத்திற்குள்ளான
வெறிக்கு உள்ளாகக் கூடியவர்களாகவும் உள்ளனர்.
15. இந்த சுயமோகிகளின் பெருமித சுய நம்பிக்கைகள் ( grandiose self-belief ) புதைமணல் மேல் கட்டப்பட்டவைகளாக உள்ளன.
16. உச்சபட்ச தனிமனித போக்கு (
individualism ), இன்றைய உலகில் பிறரின் ( தலைவர் / தலைவி
) கவனஈர்ப்புக்கான போட்டி வெற்றி பெற்றவர்களையும் தோல்வி யுற்றவர்களையும்
உருவாக்குகிறது . இவர்களில் மனச்சோர்வு உடையவர்களாக உணர்பவர்கள் புறக்கணிக்கப்பட்டு
விலக்கப்படுகிறார்கள் – விலக்கப்படுதல், ஓரங் கட்டப்படுதல் ஆகியவற்றால் வரக்கூடிய
அவமானத்திற்கான எதிர்வினைகளின் ஒன்றாக பழியெடுப்பை மேற்கொள்கிறது அவர்கள் மனம் .
அதேவேளையில் அநாமதேயமானவர் என்ற உணர்விலிருந்து அவர்களை விடுவிக்கவும் செய்கிறது.
17. Otto Kernberg சொல்லும்போது
, “ புற்று ( நோய் )
சுயமோகமானது ( malignant narcissism ) இவ்வுலகில் நிலவும் பெரும் தீங்கிற்கான தோற்றுவாயாக உள்ளது “ என்கிறார் .யதார்த்தத்தில், சுயமோகமானது , சுயமோகத்தின் அன்பு உள்நோக்கி
திரும்புகிறது ; உன்னதப்படுத்தப்படுகிறது
; போற்றப்படுகிறது ; வியக்கப்படுகிறது ; நியாயப்படுத்தப்படுகிறது ; அது அழிப்பு
உந்தல்களுடன் ஒன்றிணையும்போது சுயமோகம் அபாயகரமான ஒன்றாக ஆகிவிடுகிறது ; அதாவது,
பொய்யுரைத்தல் , பிறரை சூழ்ச்சியாக பின்னிருந்து கையாளுதல் , பயங்கரவாதம் கூட உன்னதமானவையாகவும்
, நேர்மையான நடவடிக்கையாகவும் எண்ணப்படுகிறது. புற்றுநோய் சுயமோகிகள்
பிறரின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதற்கான தன் தாகத்தை தீர்ப்பதற்காக பிறரை கொலை
செய்யவும் கூடும். சுயமோகத்தில் ஊதிப்பெருக்கப்பட்ட பெருமிதமானது
( inflated grandiosity ) சமரசத்திற்கு
இடமளிக்காத யதார்த்தத்தால் மீண்டும் மீண்டும் பாதிப்பிற்குள்ளாகிறது. இப்போது மனச்
சோர்வும் தற்கொலையும் கூட இதற்கான எதிர்வினையாக இருக்க முடியும் ” .
(தமிழாக்கம் : பிட்சு ,
பாரு.)
மன்னிக்கவும் . மிக நீண்ட மருத்துவமனை கோட்பாடுகள்
கொடுக்கப்பட்டுவிட்டது.
மேலே கூறிய சுயமோகக் கோட்பாடுகள் ‘ Tip
of the Iceberg ‘ தான். இதன்மூலம்
தனிமனிதர்களுக்கிடையிலான உறவிலிருந்து ( குடும்பம்
உட்பட ) நட்பு , பள்ளி , கல்லூரி , கட்சி , ஆட்சி நிர்வாகம் வரையும் ; பயங்கரவாதத்தையும்
கூட அடையாளம் காண முடியும். சுயமோகக் காரணங்களால் இயக்கப்படும்போது கருத்து / வாதம்
எல்லாம் ஒரு கானல்தான் . ஆசை மறைந்து கொள்ளும் .
தனிமனிதர்களுக்கிடையிலான
உறவில் அன்பும் நெறிகளுமே ( Ethics ) நல்லுறவிற்கும், நல்லாட்சிக்கும்
அடிப்படையாகும்.
© க.செ.
13-12-2015