கல்புர்கி போய்வாருங்கள்.. இனியாகும் சமூகத்திற்கு வித்தாக வாருங்கள்.
B J P அரசு கொலையாளிகளான இந்துத்துவா
காவலர்களை கண்டுபிடிக்கட்டும், அல்லது கண்துடைப்பு நாடகத்தை நடத்திக்காட்டி
நுகர்வு கலாச்சார பிடியிலுள்ள மக்களுக்கு மகிழ்வூட்டட்டும். அது இங்கு பிரச்சனை
இல்லை.
“ சாகித்ய
அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி ( 77 ) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது
இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்துத்துவா
அடிப்படைவாதிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்……
.....மறைந்த ஞானபீட விருது பெற்ற
எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் நண்பரான கல்புர்கி தொடர்ந்து
மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வந்தார். இது மட்டுமில்லாமல்
கர்நாடகாவில் மூடநம்பிக்கைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என
தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்….
………..இதனால் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட
இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார்வாட்
மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின்
வீட்டின் முன்பாக திரண்ட இந்துத்துவா அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதல்
நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர் ”. – தி
இந்து. 31-8-2015
இந்துத்துவா அமைப்பு 74 வயதான கல்புர்கிக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்
விட்டிருக்கின்றனர். யாருக்கு? சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர், ஹம்பி
பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், முற்போக்காளருக்கு . இந்த மிரட்டலை
பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள், அப்பகுதி மக்கள் pro அரசியல்வாதிகள், இந்துத்துவாதிகளை
இந்த Evil (கொடிய) எண்ணப்போக்கு, மனித
நாகரீகத்திற்கு தீங்கானதுதானே என்று அந்த கொடிய பேச்சிற்கு செவிப்பறையை – மக்கள் கிழித்திருந்தால்.....?
இன்று
கல்புர்கி இருந்திருப்பார்தானே ! எவ்வளவு எளிதாக இந்துத்துவா போலீஸ் (காவலர்கள்)
அவரை கொன்றுவிட்டனர். அவமானம் ! அவமானம் ! !
இந்துத்துவாவோ, அதன் போலீஸ்காரர்களோ ஏன்
இவ்வளவு அதீத உணர்ச்சிக்கு ஆட்பட்டு கொலை மிரட்டல், பின் கொலையும் செய்துள்ளனர்.
சிறிதளவாவது பிரக்ஞை
உணர்வு ( conscious ) அப்போது அவர்களுக்கு இருந்திருக்குமாயின் இந்த மிரட்டலும்,
கொலையும் தேவையா? அந்தத் தேவைக்கான புறவயக் காரணம் ஏதேனும் உண்டா ? என்று
நானுணர்வு எண்ணியிருக்கும்.
அவர்களின் தன்னகங்காரம் (
narcissism ) பகுத்தறிவு,
மூடநம்பிக்கைக்கு , ரூப வழிபாட்டிற்கு எதிரான கருத்து
என்றவுடனே...மூர்க்கம் அறிவை மழுங்கடித்து வலுத் தாக்குதலுக்கான ( aggressivity ) உந்தலின் ( drive ) பிடியில் அத்தன்னிலைகள் – அவர்கள் -சிக்குண்டு Evil -ன் பரிமாணத்தை அடைந்து விடுகிறது.
இந்த மூத்த குடிகளின்
கொலை தெரிவிப்பதென்ன ? அதாவது மற்றமைக்கு / மக்களுக்கு , கலாச்சாரத்துக்கு ,
மொழிக்கு .
தனிமனித சுதந்திரத்திற்கு
இந்திய பீனல்கோடு ஒருபுறம் உத்தரவாதம் கொடுக்கிறது. யதார்த்தத்தில் அது....?
“ சுதந்திரம், சுதந்திரமான தேர்வு என்பது (real ) சாத்யமற்றதாக உள்ளது ” . - லெக்கான் 1970
தனிமனித சுதந்திரம்
சாத்யமற்றதாக இருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டுதான் ‘ கல்புர்கியின் ‘
கொலை.
ஆக,
இப்போது தனிமனிதர்களுக்கிடையிலான கிரிமினல் வழக்கல்ல இது. அடிப்படை உரிமை பற்றியது
- மனித மாண்பு பற்றியது,
ஆக , இது ஜனநாயகத்திற்கு எதிரான , அமைப்பு ரீதியான , மதவாத , தீய வெறிச்
செயல் என்று புலனாகிறது.
இப்போக்கை ஜனநாயகப்
பாதையிலிருந்து அகற்றுவதுதான் உண்மையான ஜனநாயக அரசியல் போராட்டமாகும். இதை
பகுத்தறிவாதத்திற்கு எதிரானது என்று குறுக்கிவிட முடியாது.
லெக்கான்
மொழியில் சொன்னால் :
(
அந்த பெரியவர் ) “
நீ தப்பான தேர்வை மேற்கொண்டால் ( தால்) நீ தேர்வு சுதந்திரத்தையே
இழந்துவிடுவாய் ” என்கின்றனர். இங்கு கல்புர்கி தன்
சுதந்திரத்திற்காக தன் உயிரையும் கொடுத்துவிட்டார்,
( அவர் இனியாகும் சமூகத்திற்கு Ego Ideal )
இப்போக்கு
இந்தியா முழுவதும் ( உலகம் முழுவதும் கூட ) ஏதோ ஒருவகையில், மத அரசியல் போலீஸ் ,
சாதி அரசியல் போலீஸ் , இப்படி பலரகம். இதன் விளைவு , “ ஒரு தன்னிலையானது தன் சொந்த தேர்வுமுறையைச்
சாராமல், அத்தன்னிலை அந்த சமூகம் அங்கீகரிக்கும் சுதந்திரத்தையே சுதந்திரமாக
தேர்வு செய்ய வேண்டும் என்கிற உண்மையில் தான் ( formal
freedom) திணிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான சூழல் உள்ளது.
அதாவது , அவள் , அவனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதையே தேர்வு செய்ய வேண்டும் “
என்கிறார் லெக்கான்.
(
மேற்கண்ட லெக்கானிய கோட்பாடு எவ்வளவு பாந்தமாக, அணிகலனாக இந்திய மாதாவிற்கு
பொருந்துகிறது பாருங்கள் )
கல்புர்கி
போன்றவர்கள் ஏன் பகுத்தறிவாளர்களாக, மூடநம்பிக்கைக்கு எதிராக இருக்கிறார்கள் ? மூட
நம்பிக்கை சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குலைக்கிறது ; மக்களை மதரீதியாக /
சாதிரீதியாக பிளவுபடுத்துகிறது . அது சமூகத்தின் கொள்ளை நோய் என்று
பகுத்தறிவாளர்கள் கருதுகின்றனர். ஆகவே, நோயற்ற சமூகத்திற்கான முன்னணியினர்தான்
கல்புர்கி போன்றோர்.
ஆனால்
கொள்ளை பரப்பாளர்கள் , தேசீயம் என்றும், ‘ ஆதி ’ எல்லாம் பூரணத்துவம் என்றும், அவைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது
என்ற கற்பனை பிம்பத்தால் ( imaginary
image )
கட்டப்பட்டுள்ளனர். கவர்ச்சியின் மூலம் தடம் புரண்டதாக ‘
அது ‘
உள்ளது.
இந்துத்துவா / சாதீயம் போன்றவைகளின் தன்நோக்கு
சிந்தனை ( subjectivity )
பற்றி அறிய லெக்கானின் துணை வேண்டும்.
அதாவது , ‘ ஆதி ’ , தங்களின் சொந்த கருதுகோளை / பார்வையை இவர்கள் “ thing -ன் (impossible – real ) ‘ மேன்மையான ‘ பிற என்ற தரத்திற்கு உயர்த்திக் கொண்ட பிறவாகும்”
(அவர்களின் கோட்பாடு /
லட்சியம் )
இந்த மேன்மையான பிற என்பது
லெக்கானின் படி, “
மேன்மையானது ( sublime ) , (inner- ideology ) அகஉலகம் சார்ந்தது . புலனுணர்வு ( sensuous ) சார்ந்த பிறவைக்கும் , தத்துவம் கடந்த ( transcendent ) நிகழ்வியல் ( phenomenal
) கடந்த , அடைய முடியாத
(
unattainable ) ஒன்றாக
உள்ள Thing-in-itself - க்கும் உள்ள உறவை குறிப்பதாகும் ” என்கிறார்.
சுருக்கமாகக்
கூறினால், எந்தக் கேள்விக்கும் , அறியலுக்கும் , அறிவுக்கும் அப்பாற்பட்டது அது ,
என்பதாகும்.
அதை
நோக்கினாலே - கேள்வி கேட்டாலே - வலுத்தாக்கலுக்கான Metro Goldwyn Meyer
சிங்கத்தின் உறுமல் செவிப்பறையை அடைக்கும்.
ஆக,
இம்மாதிரியான மேன்மைக் கவர்ச்சிக்கு உட்பட்டவர்களும் மேன்மையானவர்கள்தான் என்ற அடையாளத்தால்
கட்டுண்டவர்கள் ; சுயசிந்தனை ‘ பாவம் ’ என்று கட்டப்பட்டவர்கள். அவர்கள்
உணர்ந்தது , தெரிந்தது வழிபாடு மட்டுமே.
ஆகையால் பகுத்தறிவுக் குரல் அவர்களின் எலும்பு
மஜ்ஜயை உருக்கிவிடுகிறது. காயடிப்பு அச்சத்தால் , இந்துத்துவாவை காப்பாற்ற (
மக்களுக்கான என்ற சுய மயக்கத்துடன் ) வக்கிரம் எந்த சிந்திப்பிற்கும் இடமில்லாமல்,
Evil ஆக
மாறி அழித்தொழிப்பு செயலை கருமமாக எண்ணி செயலாற்றுகிறது.
இறுதியாக,
இவர்கள் அநியாயத்தின் பின்புலமாக இருப்பது மற்றமையே ! அதாவது கலாச்சாரம் / மக்களின் மறைமுக ஆதரவும் இத்தீச்செயலுக்கு
உரம் போடுகிறது. இந்நிலை தொடரும்வரை போராட்டம் ஓயாது......கல்புர்கிகள்
ஓயமாட்டார்கள். அவர்கள் சமூகத்தின் நல்வித்துக்கள்.
க.செ
4-8-2015
Emergency போன்ற அரச பயங்கரவாதத்தின் சுவடுகளை சுமப்பதாகச்சொல்லித்திரியும் ”மிசா மாவீரர்”களின் Sponsored Emergency ஒவ்வொரு தனியனின் இருப்பையும் அச்சுறுத்தும் நச்சுச் சூழலை, Evil Agenda -க்களை தோலுரிக்கிறது மற்றமை...
ReplyDeleteஇளைய புள்ளிக்காரன்...
Well written
ReplyDelete