குறுந்தொகை
[ ஆலங்குடி வங்கனார் மருதத்திணையில் காதற்பரத்தைக்
கூற்றாக எழுதிய குறுந்தொகையின் எட்டாவது பாடலானது, அதன் குறியீட்டுத் தன்மைக்காகத் தொடர்ந்து
சுட்டப்படுகிறது. பறிப்பதற்கு ஆளில்லாமல் கனிந்து தானே விழும்
பழமும், அதனைக் கவ்விக்கொள்ளும் வாளைமீனும், காதற்தலைவனின் வளமான ஊரினைக் குறிக்கும் குறியீடாகவே புரிந்து கொள்ளப்பட்டு, காலகாலமாக படிக்கப்பட்டும் வருகிறது. மாறாக, இங்கு ’குறியீடானது ஒரு கருத்தை வெளிப்படுத்த பயன்படுகிறது. இக்கருத்து மறைமுகமானது ( hidden) / நனவிலி , அல்லது Reserved ; மேலும் அதன் மூலம் ஒடுக்குதல் பற்றி புரிந்துகொள்ளமுடியும்’ என்கிற எர்னஸ்ட் ஜோன்சின் விளக்கத்தின் வழியாக, வழமையான இப்பாடலின் பொருளினைக் கட்டுடைத்து அப்பாடலின் குறியீட்டினையும் அதன் நுணுக்கமான செயற்பாட்டினையும் விளங்கிக்கொள்வதற்கான ஒரு எளிய முயற்சி. …… விநாயகம் ]
பரத்தையின் தன்னிலை தன்னின் அந்நியமாதலையும், சமூகத்திற்குப் பயந்து தன் காதலன் தன்னை “ மனுஷியாக ” ( இப்போதுள்ள நிலை Sexual Object மட்டுமே ) அங்கீகரிக்க மறுப்பதையும் நனவிலி ஆசையாக ‘ அங்கீகரிப்பின் ’ கோரிக்கையாகவும் வெளிப்படுகிறது.. இப்பாடலின் காலம் தெரியவில்லை. ஆனால் பெண்மையின் சமூக அங்கீகர்ரம் தனிமனித நிலை சார்ந்தது இல்லை. அது சமூக , கலாச்சாரத்தால் நனவிலியாக காலம் காலமாக தொடருவதை அவதானிக்கலாம்.
பாடல் : -
கழனி மரத்து விளைந்துகு தீம்பழம்
பழன
வாளை கதூஉ மூரன்
எம்மிற்
பெருமொழி கூறித் தம்மில்
கையுங்
காலுந் தூக்கத் தூக்கும்
ஆடிப்
பாவை போல
மேவன
செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
-ஆலங்குடி வங்கனார்.
பாடலின் துறை - ‘ கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள்
எனக்கேட்ட காதற்பரத்தை,
அவட்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது ’; அதாவது, தன் காதலனுடைய மனைவி தன்னைப் பற்றி தவறாக பழித்துக் கூறினாள் எனக்
கேள்விப்பட்ட காதற் பரத்தை, மனைவிக்கு நெருக்கமாக உள்ளோரின் காதில் விழும்படி அவளை
( மனைவியை ) பழித்துக் கூறியது.
பாடலின் பொருள் -
வயல்வெளியில் உள்ள மரத்தில் விளைந்து பறிப்பதற்கு ஆளில்லாமல், கனிந்து
தானே விழுகின்ற பழங்களை, அவ்வயல்வெளி நீரில் உலவித் திரியும் வாளைமீன்கள் கவ்விக் கொள்ளும் இடமாகிய ஊரை உடைய தலைவன், என்னுடைய வீட்டில் என்னை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று, அவனுடைய இல்லத்திலோ அவன் மனைவி கையைத் தூக்கினால் தானும்
கையைத்தூக்கும், அவள் காலினைத் தூக்கினால் தானும் காலினைத்தூக்கும் கண்ணாடிப் பாவை போல் அவள் விரும்பினவற்றைச்
செய்பவனாக உள்ளான். [ ஆதாரம் : குறுந்தொகை – உ.வே.சா. பதிப்பு ]
1) “ வயல்வெளியில் உள்ள மரத்தில் விளைந்து பறிப்பதற்கு ஆளில்லாமல்
அப்பழங்கள் கனிந்து தானே விழும். அதனை.......” என்பது Erotic Object.
பரத்தை தன் Being -யை உருவகம் மூலம் கட்டமைக்கிறார் (constitute) . எப்போது?
2) “ என்னுடைய வீட்டில் என்னை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்
” கூறி....
அது
தொடரவில்லை. ஆனால் முற்றுப்பெறுவது அவன் மனைவியிடத்தில் கண்ணாடிப் பாவை குணாம்சம்
உள்ளவனாக இருக்கிறான்.
அதாவது பரத்தையிடம் பெருமொழிகள் கூறி “ அவளின் ’எதிர்பார்ப்பை ” , அவளின் அங்கீரிப்பிற்கான ஆசையை Symbolic castration பண்ணிவிடுகிறான்.
மொழியாய் / பொய்யாய் ஏமாற்றி விடுகிறான்.
இங்கு பெருமொழி என்பது “ Exchange is communication , itself of words, the
gift of speech “.
இது மொழியியல் பரிமாணம்.
பரத்தையின் எதிர்ப்பார்ப்பை / ஏற்பு ஆசையை
காயடிக்கிறான். ஏனெனில் Symbolic order என்பது
சமூக விதிகளாலானது. அது Kinship Relation - யும் பரிவர்த்தனையையும் ஒழுங்குபடுத்துகிறது. இதில் மொழி, கலாச்சாரம்
அடங்கும். அதற்குப் பயந்து , உறவில் திளைத்து
வாய்மொழியால் அவளைக் காயடித்து விட்டான் எனலாம்.
பழம் என்பது குறிப்பான் / பரத்தையாகும்.
இப்போது , மேலே கண்ட கட்டுடைப்பிற்கு
காரணமாக இருந்த எர்னஸ்ட் ஜோன்சின் Theory of symbolism -ல் “ குறியீட்டியல் ( Symbolism ) ஒரு கருத்தை வெளிப்படுத்த
பயன்படுகிறது. இக்கருத்து மறைமுகமானது ( hidden ) ரகசியமானது, அல்லது Reserved ; மேலும் அதன்மூலம் ஒடுக்குதல் பற்றி
புரிந்து கொள்ள முடியும்
“ என்கிறார்
( Gerard
Amiel )
ஜோன்ஸ், குறியீட்டின் பொதுத்தன்மையில்
முக்கியத்துவம் கொடுப்பது Substitution ( பதிலி ) என்பதைத்தான். மேலும் அவர் கூறுகையில் “ பதிலியை
( substitution) மனிதச்செயல்பாடுகளின் மையத்தில்
இருத்துகிறார் ”
[ உருவகம் குறிப்பான்களின் பதிலியாக (substitution) இருக்கிறது என்பது கவனத்திற்குரியது. ]
. இங்கு, “ மரத்தில் தொங்கும் பழம் ” பரத்தைக்கு ( குறிப்பான் ) பதிலியாக வருகிறது.
பரத்தையின் இந்த உருவப்பாட்டானது
மற்றமையால் வந்தது
மற்றமை என்றால்
பரத்தையின் மாற்றத்திற்கு காரணம் ( The Other’s effect )
இதரரின் விளைவு
“ தன் காதலனின் மனைவி தன்னைப் பற்றி தவறாக பழித்துக் கூறினாள் எனக்
கேள்விப்பட்ட பரத்தை….. ‘effect-’க்கு உள்ளாகிறாள்.
மனஎழுச்சித்
தடை ( Affective Inhibition ) ஏற்படுகிறது.
இந்தத் தடை “ உளவியலாக , இயல்பூக்கம் ( instinct ) பிரக்ஞையாக வெளிப்படுத்துவதற்கான தடை
( Inhibition )
அதன் உச்சத்தில் இருக்கும்பொழுது அங்கு குறியீடாக்கம் ( Symbolism )
அதன் மிகக்
குறிப்பான் வடிவத்தில் ( in its most typical form) உருவாகிறது ” – Ernest Jones
இங்கு இக்கட்டுரைக்குத் தேவையான அளவே அவரின் கோட்பாடு
கையாளப்படுகிறது.
ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
குறியீடாக்கத்தின்
இரண்டு அடிப்படைப் பண்புகளாக உள்ளவை ;
1) குறியீடாக்கம் முற்றிலும் நனவிலியானதாகும்.
பரத்தையின் இயலாமை குறித்த ப்ராய்டின் அர்த்தத்தில் இந்த வார்த்தை
பயன்படுத்தப்படுகிறது ( அவ்வளவே )
இது பற்றி ஜோன்ஸ் கூறுகையில் “ What
Lacan calls a symbolic Identification
with an Ideal Ego“ என்கிறார்
. ( அதே கட்டுரை )
பரத்தை இப்பாடலில் தன்னை “
மரத்தில் பறிப்பதற்கு ஆளில்லாமல்
பழுத்த பழமாக “ ( மொழியில் ) குறியீட்டு அடையாளப்படுத்திக் கொள்கிறாள்.
இதுபற்றி ஜோன்ஸின் கோட்பாடு கூறுவது ......”
குறியீட்டு அடையாளப்படுத்- துதல் (Symbolic
identification)
என்பது எப்போதும் ( ஒரு அடையாளப் படுத்தலாகும் ). சமூக-தன்னிலைகளுக்கிடையிலான தளத்தை (social- inter subjectivity space)
அடையாளப்படுத்துதல் ஆகும். இத்தளத்திற்குள் ஒரு தன்னிலை அதன் நிரந்தரமான கற்பனை அடையாளங்களை
ஏற்க முடியும் “ ( அதேநூல் ).
இங்கு பரத்தையின் நிரந்தரமான கற்பனை அடையாளமாக “ பறிப்பதற்கு ஆளில்லாத பழங்களாகும் ”
இங்கு ‘ பழம் ’ என்ற வார்த்தை மனஅலசல்படி குறிப்பீடாகாது.
அதுகுறிப்பான்
(Signifier metaphor) உருவகமாகும்.
அந்த உருவகம் அந்தப் பரத்தைக்கான ‘
பதிலி ’
யாகும்.
ஜோன்ஸ் பதிலியை ( substitution
) மனிதச் செயல்பாடுகளின் மையத்தில்
இருத்துகிறார்.
“ உருவகம் ( Metaphor ) பதிலியாக (
substitution of signifier ) குறிப்பிடாமல் இருக்க முடியாது என்கிறார்.” - Gerard
Amiel ( On Ernest Jone’s Theory of Symbolism) இறுதியாக
“
குறியீட்டியல் ஒரு கருத்தை
வெளிப்படுத்த பயன்படுகிறது. இக்கருத்து மறைமுகமானது ( hidden ) / நனவிலி , அல்லது Reserved ;
மேலும் அதன் மூலம் ஒடுக்குதல் பற்றி புரிந்துகொள்ளமுடியும்” என்கிறார்.
பரத்தையின் தன்னிலை தன்னின் அந்நியமாதலையும், சமூகத்திற்குப் பயந்து தன் காதலன் தன்னை “ மனுஷியாக ” ( இப்போதுள்ள நிலை Sexual Object மட்டுமே ) அங்கீகரிக்க மறுப்பதையும் நனவிலி ஆசையாக ‘ அங்கீகரிப்பின் ’ கோரிக்கையாகவும் வெளிப்படுகிறது.. இப்பாடலின் காலம் தெரியவில்லை. ஆனால் பெண்மையின் சமூக அங்கீகர்ரம் தனிமனித நிலை சார்ந்தது இல்லை. அது சமூக , கலாச்சாரத்தால் நனவிலியாக காலம் காலமாக தொடருவதை அவதானிக்கலாம்.
மேலும், சமூகம்
, பரத்தையின் பயன்பாடு இருப்பதால்தான் அவளை புறத்தில் சேர்ந்து வாழ
அனுமதிக்கிறது . அதேபோழ்தில் அவளை ஒரு எல்லையில் - அவள் உரிமையை - நிப்பாட்ட புறனுரைப்பை
மற்றமை பயன்படுத்துகிறது எனலாம்.
க.செ
21-9-2015