20 Aug 2014

“போனால்!...போகட்டும் போடா ”

ராபின் வில்லியம்ஸ் மறைவிற்கு…..
கமல்ஹாசனின் புகழஞ்சலி.
            திரையில் ஆண் அழுகைக்கு கண்ணியம் தந்தவர்.  ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் என்று அவருக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
            ராபின் வில்லியம்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் இன்று வெளியிட்ட செய்தியில், நகைச்சுவையாளர்கள் அனைவருமே சமூக விமர்சகர்கள்தான். தங்களது கோபத்தை நகைச்சுவை என்ற முகமூடியை வைத்து மறைத்துக் கொள்கின்றனர்.  ஆனால் தொடர்ந்து அப்படியான வேடிக்கை முகத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தால், அது மன அழுத்தத்தில் முடியும்.
            நடிகர் ராபின் வில்லியம்ஸின் உண்மையான இயல்பு, எளிதாக அழுவதே. இதை அவரது திரைப்படங்களில் நீங்கள் பார்க்கலாம்.  60-களில் அவரால் அமெரிக்க சினிமாவில் நாயகனாக
பரிமளித்திருக்க முடியாது.  ஏனென்றால், அந்தக் காலத்தின் நாயகர்கள் யாரும் திரையில் அழுவதற்கு துணிந்ததில்லை.  வியட்நாம் போர்தான் அமெரிக்காவின் இந்த மனோபாவத்தை மாற்றியது.
            திரையில் கூச்சலிட்டும், பீதியில் அழுவதையும் செய்த முதல் ஆக்‌ஷன் ஹீரோ ராம்போ .  ஆனால், ராபின் வில்லியம்ஸ் திரையில் ஆண்கள் அழுவதற்கு ஒரு கண்ணியத்தை எடுத்து வந்தார்.  அவரது திறமைக்காக நான் அவரை ரசித்தேன்.
            ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மையென தெரியவந்தால், தனது வாழ்நாள் முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதற்காக அதற்காக நான் அவரை வெறுக்கிறேன்.
            இப்படி வாழ்க்கையிடமிருந்து தப்பிக்கும் குணம், கலைஞர்களிடமிருந்து நான் எதிர்பார்க்காத ஒன்று.  எனது இந்திய ஆதர்ச படைப்பாளி குரு தத்-துக்கும் இது பொருந்தும்என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
            நடிகர் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகிக்கு தூண்டுகோலாக அமைந்தது, ராபின் வில்லியம்ஸின் மிசஸ் டவுட் ஃபயர் என்பதும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-சின் அசலான முன்னாபாய் எம்.பி.பி.எஸ் படத்தின் மூலக்கதைக்கு துணை புரிந்தது.  ராபின் வில்லியம்ஸின் “பேட்ச் ஆடம்ஸ்என்பதும் குறிப்பிடத்தக்கது.                     (-http// tamil. the hindu.com 12-8-2014)
            ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸின் மறைவிற்கு கமல்ஹாசன் நீண்ட இரங்கல் செய்தியை வாசித்தவுடன் ஒரு ஆச்சரிய / புதிரான எண்ணம் தோன்றியது.
            யாருக்கு இரங்கல் செய்தியைச் சொன்னாரோ..... அவரையே “நான் அவரை வெறுக்கிறேன்“ என்று அந்தச் செய்தியிலேயே கூறியிருக்கிறார்.
            இரங்கல் செய்தியின் துவக்கத்தில் வேண்டிய அளவு இறந்தவரை பாராட்டியும் இருக்கிறார்.
            பின்னர்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் ...... என்று (ஒரு condition வைத்து ) சொல்லிவிட்டு வெறுக்கிறேன் என்கிறார்.
            இது முரண்பாடல்ல.  மன அலசல் ஆய்வின்படி,
            இது கமலின் நனவிலியாக  Love & hate    உறவிலிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
            அப்போது கமலின் சித்தத்தில் ஏற்பட்ட இல்லாமை- குழந்தை முதன்முதலாக தாயிடமிருந்ததை இல்லாமையாக உணர்ந்த அந்த ஆதி உணர்வு-(Lack) உணர்வானது சிம்பாலிக்காக / மொழியில் வெளிப்படுத்த முடியாத ஒரு  uneasy- யை, “அந்த ஓடிப்போனவரை (வாழ்க்கையை விட்டுவிட்டு) நோக்கி எழுப்பிய குரல்தான் “வெறுக்கிறேன்”.  இப்போது அது கமலின் personal Trauma  (மனக்காயம்). (சித்த இருப்பின்) அடையாளத்தின் ஓரத்தில் ஒரு பங்கம். ஊனமது. தாங்க முடியாத வலி.
            இறப்பு என்ற எதார்த்தத்தின் மீது அவருக்கு வெறுப்பில்லை.  அத்தோடு மரணத்தை ஏற்க மறுக்கவும் இல்லை.  மாறாக, அவர் “வாழ்நாள் முடியும் முன்பே தன்னை மாய்த்துக் கொண்டதற்காக.... நான் அவரை வெறுக்கிறேன்“.  அதாவது சாவின் பொறுப்பை, தன் உயிர் அழிப்பின் பொறுப்பை மனிதன் வைத்துக் கொள்ளக் கூடாது என்கிறார் எனலாம்.
            தனது மகிழ்வு களவு போய்விட்ட உணர்வு (castrated) அப்போதைய சித்தத்திற்கு,
            அதனால்தான் காலம் கடந்து குருதத்திற்கும் அதை நினைவூட்டுகிறது போலும்.
மேலும் “இப்படி வாழ்க்கையிடமிருந்து தப்பிக்கும் குணம் கலைஞர்களிடமிருந்து நான் எதிர் பார்க்காத ஒன்று“.
            அது கமலைஒரு “ Social  critic ”   காகவும் மாற்றிவிட்டிருக்கிறது எனலாம்.
            கமலின் மனப்பாதிப்பு (affect)
            மன அலசல்படி,
            மேற்கூறியதை, “ குறியீடாக (symbolic -ஆக ) மொழியில் / கலாச்சாரமாக கட்டமைக்கப்பட்டு கைமாற்றப்பட்டிருக்கிறது இங்கு எனலாம்.  மன அலசல் இது பற்றி கூறும்போது மனப்பாதிப்பு குறியீட்டு கட்டமைப்பாக (symbolic construction ) உள்ளது“ என்கிறது.
            “கலாச்சாரம் மன எழுச்சியை (emotion -ஐ) ரத்தமும் சதையுமான குறிப்பானாக்குகிறது (signifier)“.
-           கிரிஷ்ணர்
-          The cultural construct  of affect
            தப்பிக்கும் குணம் என்பது ஒரு வலியிலிருந்து வருவது.
            தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் உரிமையை எப்போது மனிதன் கையிலெடுப்பான் என்பதை எந்த ஆருடமும் கணிக்க முடியாதுதானே!
            இருத்தலின் அத்யாவசியம்- உயிரியாகவும் உயிர்ப்பாகவும் = (existential need)  கேள்விக்குள்ளாகும் பொழுது நேர்கோட்டுப் பிரயாணம் கேள்விக்குள்ளாகிறது.
மகிழ்வற்றதின் மகிழ்வு ( The pleasure of unpleasure “)
“ what is pleasure for one system is (super ego) unpleasure for another one (ego)”.
            இது நனவிலியின் பொதுவான கூற்று.  சித்தத்தின் ஒரு ஏஜென்சிக்கு மகிழ்ச்சியானது (பேரகன்) மற்றொரு ஏஜென்சிக்கு மகிழ்வற்றதாக (ego ) உள்ளது.
            பொதுவாக, மனித சித்தக் கட்டமைப்பு ஏஜென்சிகளான –Id, Ego, Super ego, Ego ideal - இவைகளில் super ego -விற்கு மகிழ்வாக இருப்பது Pain , சுய அழிப்பு - மற்றொரு ஏஜென்சியான Ego-விற்கு மகிழ்வற்றதுதான்.  ஆனாலும் பேரகனின் மகிழ்வு பொதுவான வாழ்க்கை முடிவாக இருக்கிறதே.
-           லேப்லாஞ்சி
-          Life & Death in Psycho analysis .
[இதைத்தான் விதி முடிஞ்சுருச்சுன்னு கிராமத்தில சொல்றாங்களோ]
க.செ.

7 Aug 2014

உ.பி.யில் இப்போது இருப்பது மன்னராட்சியா?



                                                                               
மற்றமையின் ஆய்விதழின் துணை அங்கமாக  mattramai blogspot.com   என்ற வலைப்பூவில் தேர்தலுக்கு முன் 8.4.2014-ல் வெங்காயத்தை உரித்தால் என்ற கட்டுரை வந்திருக்கிறது.  அதில் பாராளுமன்ற அரசியல் கட்சிகளுக்கான சில கோரிக்கைகள் (Demands) வைக்கப்பட்டிருந்தன.
அதில் ஒன்றில்,
இனி, பெண் என்பதை ஆசைப்பொருளாகப் பார்க்கும் எண்ணத்தைக் (attitude  ) களைய என்ன மந்திரச்சொல் வைத்திருக்கிறீர்கள் ; பலாத்காரத்தை (aggressivity) என்ன செய்யப் போகிறீர்கள்?  ஒரு வேளை மனிதவள மேம்பாட்டுத் துறையை இப்படிப்பட்ட வேலைகளுக்கான துறைகளாக மாற்றுவீர்களா?  அந்தநாள் எப்போது வரும் ?
அந்த நாள் எப்போது வரும் என்று தெரியவில்லை?  ஆனால், நேர்மாறான செய்தி தேர்தலுக்குப்பின் வந்திருக்கிறது.
அதுவும் யாதவர்கள் அதிகாரத்திற்குட்பட்ட நாடான உத்திரப்பிரதேசத்தில்.  (நாடு என்று போட்டதற்கான காரணம் வெளிப்படை).
இப்படித் தலைப்பிட்டது விருப்பால் அல்ல.  காரணம் தி இந்து (தமிழ்).
பாலியல் வன்முறைகளையெல்லாம் பெரிய குற்றமாகக் கருதப்பட்டிராத பழங்காலத்தின் நீட்சிதான் முலாயம்சிங், அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோரின் அணுகுமுறை. - தி இந்து 2.6.14
மன்னர் அதிகாரத்தின் நீட்சியாக யாதவ தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பதுதானே!
இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இந்தத் தினசரி வைப்பதேன்?
திருதுராஷ்டிர குருட்டுத்தனத்தால் அவள் “மானம்“ பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தபோது கிருஷ்ணை என்று பெயர் பெற்ற அவளுக்கு சேலை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணனை சொந்தம் கொண்டாடுவது ஒரு புறம் .
பையன்கள் தவறு செய்வது (அதாவது பாலியல் வன்முறையில் ஈடுபடுவது) சகஜம்.  அதற்காக அவர்களைத் தூக்கில் போடமுடியுமா?  என்பது மறுபுறம்.  இந்தக் கூற்றைச் சற்று கூர்ந்து கேட்க, பார்க்க வேண்டும்.
பையன்கள் என்று இங்கு குறிப்பிடப்படுவது யாரை?  குற்றவாளிகளை.  பையன்கள் என்று செல்லமாக யாரையெல்லாம் அழைப்பார்கள்?  ராணுவத்தில், விளையாட்டுத் துறையில், தன் அணி சார்ந்தவர்களை அழைப்பார்கள்.  தலைவர்கள், கேப்டன்கள் (‘Boys’ ) பையன்கள் என்ற குறிப்பான்கள் மூலம் தங்களின் பிணைப்பை, நெருக்கத்தை தெரிவிக்கச் செய்வார்கள்.
இங்கே பையன்கள்என்று கூறி நெருக்கத்தைத் தெரிவிப்பவர் முலாயம்சிங் யாதவர்; முன்னாள் உ.பி. முதல்வர்; இந்தியப் பிரதமருக்கான பிரதிநிதி என்ற பேச்செல்லாம் அடிபட்டது.  அவர்தான் இவர்.  அரசு அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதி (M.P) என்ற அந்தஸ்து வேறு.

    பேச்சுச் சூழலில் பேச்சினூடாக
தற்செயலாக ஒன்றிணைந்து வார்த்தைகளாக வெளிப்படும்  அந்தக் குறிப்பிட்ட பகுதியில்தான் நனவிலியைப் பிடிக்கமுடிகிறது-லெக்கான்.
இப்படிப்பட்ட மா யாதவர் தலைவர் வாயிலிருந்து வந்த கூற்றுதான்  பையன்கள் தவறு சகஜம் என்பது.  இந்தக் கூற்றை மனஅலசல் ஆய்வுப் பொருளாக ஏற்றால் பையன்கள் என்பது உருவகம். அதாவது, குற்றவாளிகள் என்று இருப்பதற்குப் பதிலாக  பையன்கள் என்ற உருவகம் வந்து விழுந்தது தற்செயல் அல்ல.  அது , நனவிலியால் சொல்ல வைக்கப்பட்ட குறிப்பான் அது.  அதாவது அரசு அதிகார பிரதிநிதியாய் பிரக்ஞையுடன் பேசியிருந்தால் symbolic -ஆக சட்டம், விதிகள், கலாச்சாரப் பாதுகாவலனாகப் பேசியிருப்பார்.  சித்தத்தில் ஏற்பட்ட பதட்டமும், அவரின் நனவிலி யாதவ் தன்னிலையின் நிலைப்பாடு குற்றவாளிகளுக்கு செல்லப்பெயர் (pet ) கொடுக்க வைத்துவிட்டது.  முலாயம் யாதவின் பதட்டத்திற்குக் காரணம் அவருடைய Modern State -ல் (நவீன அரசு) இருந்து வந்ததல்ல, மாறாக, யாதவ மன்னர் குலத்திலிருந்து வந்துவிட்டது.
அந்தக் குற்றவாளிப் பட்டியலை நவீன அரசு வெளியிட்டதில். . . . . .
(1)    பப்பு யாதவ்
(2)    அவதேஷ் யாதவ்
(3)    சர்வேஷ் யாதவ் – போலீஸ்
(4)    சத்ரபால் யாதவ் – போலீஸ்
(5)    உர்வேஷ் யாதவ்
       துயரம் நடந்த இடம் – உத்திரப்பிரதேசம், பதான் மாவட்டம் (Badaun), கத்ரா (Katra) கிராமம்.
       நாள் - 28.05.2014
       பாதிக்கப்பட்ட, தூக்கில் தொங்கும் பெண்கள் – இரண்டு சகோதரிகள்
       வயது - 14; மற்றொருவருக்கு 15
       தலித் வகுப்பைச் சார்ந்தவர்கள்.                            -Times of India
       யாதவர்களைப் பொருத்து இவர்கள் இதரர் (other); அங்கீகரிக்கப்படாதவர்கள்.
       ஆக, குற்றவாளிகள் யாதவர் என்றவுடன் மனப்பதட்டம். .. மா தலைவரின் தன்னிலை சாதிப்பாசத்தில் கட்டுண்டு, அது மொழியில்  பையன்கள் என்ற உருவகமாகிவிட்டது.  இந்தச் சொல்லாடலில்  பையன்கள் என்ற நிலைப்பாடு எடுத்தது பழைய முதல்வர் முலாயம்சிங் அல்ல.  யாதவ சாதியின் ஏஜெண்டாயிருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார் தலைவர் யாதவர்.
       முதல்வராக, M.P யாக நின்று இருந்தால் குற்றவாளிகளுக்கான தண்டனையை நிர்வாகத்திடம் விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட அந்தச் சகோதரிகளை, அவர்களின் உறவினர்களையும் தன் அங்கமாக்கியிருப்பார் (Anaclysis ).
       மா யாதவர் என்ற தன்னிலை நிலைப்பாடு தன் குடிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற(object of a ) ஆசையே முன்னிலை பெற்றுவிட்டது.
        பையன்கள்  சாதாரண வார்த்தையல்ல.  அது  Metaphor of the cultural tool kit    -WANG
       மா யாதவரின் கூற்று மற்ற தலைவர்களுக்கும், யாதவக் குடிகளுக்கும் என்ன மாதிரியான கருத்துருவத்தைக் கட்டியிருக்கும்?  அவரின் கூற்றை அவர் குடிகள் எப்படி வாசித்திருப்பார்கள்?  எம்மாதிரியான அரசியல் முடிவுக்கு பிரச்சாரக்காரனாக அது விளங்கும்?
       மற்றொருபுறம் முலாயம்   உ.பி. முதல்வர்,   M. P என்ற அடையாளத்தை ஏற்றவர்களுக்கு குற்றவாளிகளை  ‘ Boys என்ற சொல்லாடல் என்னவித நம்பிக்கையைக் கொடுக்கும்.
       பாதிக்கப்பட்ட பெண்கள், தலித்துகளுக்கு நான் உணர்வு இருக்குமா?  பாதுகாப்புணர்வு கேள்விக்குள்ளாகாதா?
       குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் போலீஸ் துறை சார்ந்த யாதவர்கள், பிற மூன்று யாதவர்களுக்கும் குற்ற உணர்வோ, தண்டனைப் பயமோ இருக்குமா?
       தாய் எட்டடி என்றால் குட்டி...? 
இது ஒரு பழமொழி.  முலாயம்சிங் யாதவ்-ன் மகனும்,  உ.பி. யின் தற்போதைய முதல்வருமான அகிலேஷ் யாதவ்.
       தலித் சகோதரிகள் மீதான வன்முறைகளைப் பற்றி பெண் நிருபர்கள் அகிலேஷ் யாதவிடம் கேள்வி கேட்டிருக்கின்றனர்.  யாதவின் பதில் நீங்கள் பத்திரமாகத்தானே இருக்கிறீர்கள்”.   தி இந்து 2.6.14.
இது முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் அதிகார சித்தமா, அல்லது அகிலேஷ் யாதவ்வின் சித்தமா, (ஆண் ஆதிக்கத் திமிரா).  விசயமறிய கேள்வி கேட்ட தன் குடிகளிடம் இவ்வளவு காத்திரமா?
ஏன் என்றால் பெண்கள் கேள்வி, -சித்த மனவிகாரம் (perverse structure)- முன்னிலைக்கு வந்து (நனவிலி) சுயமோக வன்மத்தின் (Narcissistic aggressivity ) ஆட்சிக்கு யாதவ் ஆட்பட்டிருக்க வேண்டும் அப்போது.  அதனால்தான் நான் உணர்வின் (Ego ) கட்டுப்பாடு அற்ற கலாச்சாரக் குறிப்பானை வீசியிருக்கிறார் அப்பெண்கள் மீது.
   உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் பெண் நிருபர்களிடம் வினையாற்றியது அறிவு பூர்வமானதாக இல்லை.  அதீத மனஎரிச்சலின் பிடியில் சின்ன யாதவ் சிக்கிக்கொண்ட மாதிரி தெரிகிறது.  அந்த எரிச்சலை வினையாகக் கொள்ளாமல் எதிர்வினையாக எடுத்துக் கொண்டால் முதல்வர் யாதவை புரிந்து கொண்டுவிடலாம் என்று தோன்றுகிறது.
   பெண் நிருபர்களின் கேள்விகள் யாதவ்விற்கு ஊடுருவலாக (intrusion ) மனதில் பட்டு, அது எரிச்சலை உண்டாக்கியிருக்கலாம்.  அது பெண்களுக்கான /  பெண் நிருபர்களுக்கான எதிர்வினையாற்றியிருக்கலாம்.  நனவிலி ஆதிக்கமது.
                பலாத்காரத்திற்கெதிரானது; மனித உரிமைகளுக்கானது அது; ஜனநாயகத்திற்குமானது.  கேள்விகளை ஆதிக்க சாதி மனோபாவத்தில் அவர் எதிர் கொண்டாரோ?  என்னவோ!
       ஊடகங்கள் மீது அவருக்குக் கோபம்.  நியாயமிருக்கும்.  இந்திய ஊடகங்கள், சட்டசபை  / பாராளுமன்றக் கட்சிகள் பெரும்பாலும்  BC -க்களின் அதிகாரத்தில் /  ஆதிக்க சாதிகளின் கையில் இருப்பது போலவே ஊடகங்கள் பிராமணாள் செல்வாக்கில் உள்ளதை மறுக்க முடியாது.
அன்று சொன்னது இன்று நடக்கிறது.
         இப்போது சில அரசியல்வாதிகள் பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்துகின்றனர்.  அது பையன்கள் செய்கிற சிறு தவறுதான் என்றும், சம்பந்தப்பட்ட பெண்ணும் இதற்கு உடந்தையாகத்தான் இருக்கிறாள் என்றும் பேசுகின்றனர்.  கற்பழிப்பவர்களை தூக்கில் போட்டால், அந்தப் பெண்ணையும் சேர்த்து தூக்கில் போடுங்கள் என்கிறார் ஒருவர்.  அதாவது, ஒரு கேடுகெட்ட செயலை நியாயப்படுத்துகிறது இன்றைய அரசியல் உலகம்.
         இதை பைபிள் அன்றே சுட்டிக்காட்டியது.  தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ ன்று (ஏசா 5: 20) ஒரு வசனம் வருகிறது.
         ஆம்.... தீமையை நன்மையாக்க முயற்சிக்கும் இந்தப் போக்கிற்கு யாரும் அடிபணிந்துவிடக் கூடாது.              தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து.

                                                                       - தினமலர       ஜூன் 10, 2014.


       Mr. C.M யாதவ் , தமிழகத்தில் ஒரு ஆச்சாரியார் கூறியதை நினைவிலிருந்து,  SC -க்களின் குடிசைகளுக்கு தீவைப்பது யார்? SC  பெண்களை பலாத்காரமாக கடத்துவது யார்?    BC க்கள் தானே.  எந்த பிராமணனாவது இதைச் செய்திருக்கிறானா?  இது போன்று பேசியது ஞாபகத்திற்கு வருகிறது.
       இதற்கு BC  அரசியல் / ஆதிக்க சாதிகளின் தலைமைகளிடம் பதில் இருக்கிறதா?
       பிராமணாள் (ideologues) சாதியக் கருத்துருவாக்கம் செய்தார்கள், செய்வார்கள் அவர்கள்; பத்திரிக்கைகளில் தாம் நவீனவாதிகள் என்ற அடையாளத்திற்காக, சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் இடம் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
       செய்திகள்,  photo -க்களின் தேர்வு,  Placement ஆகியவற்றில் தங்களின் சார்பை நாசுக்காக அவாள் செய்யத்தான் செய்வார்கள்.
       பிராமணனை எதிரியாக்கி, முன்னிலைப்படுத்தி ஆதிக்க அதிகாரத்தைப் பெற்றபின்பும் பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி எறியுங்கள்.
       ஆதிக்கப்புத்தியை விட்டு ஜனநாயகத்தைக் கைப்பிடியுங்கள்.  அப்புறம் பிராமண ஊடகங்கள் என்ன சொல்லமுடியும் உங்களை.
       ஆதிக்க சாதிகளுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் இதரர் அல்ல.
       உங்களைப் போன்றே மண்ணின் மைந்தர்கள்.
                கிருஷ்ணா. . . !  என்று சரணடைந்தவர்களுக்கெல்லாம்   யதுகுல இளவரசன் கண்ணன் உதவிக்கரம் நீட்டினான்.
       யாதவகுல இளவரசன் . . .?
                                                                           க.செ.