நீங்கள்
பார்க்கும் படங்களின் பெயர் என்ன?
இவற்றிற்குப்
பொருத்தமான சுந்தரமுகங்களைப் பொருத்துங்கள்... போன்றவற்றைச் சொல்வதற்கான எழுத்தல்ல
இது.
படங்களின்
பெயர்களைத் தொப்பி,தலைப்பா,etc என்று கூறக்கூடும்.அது ஒரு வகையில் சரிதான் .இதற்கான முகங்களைக் கூட
அடையாளம் கண்டிருக்கக் கூடும்.
அவைகளைக் காட்சி
ஊடகங்கள் கவர்ச்சிகாட்டி ஈர்க்க எல்லா மொழிகளிலும் பரப்பியது எல்லோரும் அறிந்தது.
முதலில்
தொப்பி/தலைப்பா,இப்போது அதன் Role கவர்ச்சிக்கானது என்ற மற்றொரு பரிமாணம் கிடைக்கிறது.
இவைகளின் தயாரிப்புக்காக எந்தப் பன்னாட்டுக் கம்பெனியும்
முன்வராது இப்போதைக்கு; ஏனென்றால் ” அவைகள்” இன்னும் popular நுகர்வுப் பொருளாக ஆகவில்லை.
நுகர்வுக் கலாச்சாரமும் அதன் இயங்கு நுட்பமும் அந்தத் திசையைப் பார்க்கவில்லை.
ஆனால்,இந்தத்
தலைப்பா/தொப்பிக்கான வரலாறு உண்டு.
ஒரிஜினல்
உரிமையாளர்கள் உண்டு.அவர்களின் பெயர்கள்”பூர்வீகர்கள்”.
இந்தப்
பூர்வீகர்களின் வரலாற்றுடன் தொடர்புடையதுதான் இந்தத் தொப்பிகள்.எப்படி?
பூர்வீகர்கள் ஒரே
மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் இல்லை.
மாறாக,கிட்டத்தட்ட ஒவ்வொரு தொப்பிக்கும் உரிய பூர்வீகர்கள்
வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள்.எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு உண்டு மாதிரி
காந்தி குல்லாய்க்கும் விலக்கு உண்டு.
காந்தி
குல்லாயின் நவீனம் ஆம் ஆத்மி.இது பல மொழி,பல இனத்தவரின் விருப்பத்தேர்வு.
இவர்களின் ஆசைப்படுபொருள் லஞ்சஒழிப்பு என்பர். சிலப் பல
ஆண்டுகளுக்குப் பின் தெரியவரும்.அப்போது இது ஆசையின்(ஒரு வடிவம்) demand
ஆ? அதாவது ஒரு பாதுகாப்பு(need) கருதியா? நிஜமான வர்ணம் பின்னர் தெரியக்கூடும்.
போகட்டும்;மீண்டும் mainstream-க்குவருவோம்.முதலில்
தொப்பிக்குள் இருக்கும் முகங்களைக் காட்சிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது அந்தப் popular முகங்கள்
எப்போதும் இந்தத் தொப்பியுடன் காட்சியளிக்கிறார்களா என்றால் இல்லை என்பது
பதில்.இது “பண்டிகைக்” காலம்.ஹோலிப் பண்டிகை என்று கூடச் சொல்லலாம்.
ஆனால், இந்த
ஹோலிப் பண்டிகை எந்த மதச் சொல்லாடலாலும் தீர்மானிக்கப் பட்டதல்ல; மாறாக பாராளுமன்றச் சொல்லாடல்
சார்ந்தது.
பொதுவாக ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை “ஹோலி” என்பார்கள்.சில நேரங்களில்
திடீரென பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 2,3 ஆண்டுகளில் கூட ஹோலிப்பண்டிகை என்பார்கள்.
பாராளுமன்றத் தேர்தலை ஹோலிப்பண்டிகை என்று உருமாற்றியதற்கான
காரணம் இதுதான். பொதுவாகப் பண்டிகை என்றாலே
ஒப்புநோக்கிய சுதந்திரமுண்டு.ஆனால் “ஹோலிப் பண்டிகை” என்பது ஆண்/பெண்களின் கொண்டாட்டத்திற்கானது. அந்தப்
பண்டிகை அடிப்படையில் பல வண்ணங்களின் கலைடாஸ்கோப் எனலாம்.
ஆனால்,பாராளுமன்ற
ஹோலிக்கு வேடிக்கைகள்,கேலி/கிண்டல்/கோபம் etc. நவரசம் ததும்பும்.
ஆனால்
பங்கேற்பாளர்கள் மக்களல்ல.மக்கள் பார்வையாளர்கள்;கண்டுகளிக்க உரிமையுண்டு.
இதில் எண்ணிக்கையற்ற விதங்களில் மேடைகள் உண்டு.மேடைகளின்
தகுதிக்கேற்ப “தில்லானாக்கள்” வானத்திலும்;ஹெலிகாப்டரும் கூட வேடிக்கை,விநோத காட்சிக்கான
காணும் பொருளாக்கப்படும். காட்சிக்கான,நவரசத்திற்கான காட்சிப்பொருள் உண்டு.
கவர்ச்சிப் பொருளைக் கண்டு களிக்க தலைக்கு ஒன்றுக்கு
வயிறுமுட்ட பிரியாணி,கையில் நூறு ரூபாய்.கூத்து நடக்கு மிடத்திற்கு வாகன வசதி உண்டு.பின்பு என்ன? மக்கள்
லட்சக்கணக்கில்.
காணும் தொப்பிக்காரர்கள் இப்போது ஓரங்க நாடகத்திற்காக
வாடகைக்கு வாங்கிய தொப்பிகள். ஏன் இந்த வாடகைத் தொப்பி.அந்த
ஒவ்வொரு தொப்பியிலும் பூர்வீகர்களின் சரித்திரமுள்ளது.அந்தச் சரித்திர நனவிலி
அடையாளத்துடன் இருக்கும் மக்கள்(வாக்காளர்கள்)எளிதில் நம் தொப்பியுடன் காட்சி
அளிப்பவர் நம்மூர் சரித்திர புருஷர் (legend) என அடையாளம் கண்டு, கொண்டாடி மகிழ்வர். [எம்.ஜி.ஆர்,ரஜினி நினைவுக்கு வரலாம்].
நமது சரித்திர புருஷர் என்ற ஏற்பு அந்த நடிகருக்கு வெற்றிதரும்; வெற்றிதரவேண்டும்.
ஆகவேதான் இந்த
ஹோலிப் பண்டிகை வேஷம்.இதுபற்றி கூட பூர்வீகர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே காட்சிக்கும்
காண்பவனுக்குமான இயங்கியல் உறவை இலக்கணப்படுத்தியுள்ளனர்.அவரின் செல்லப்பெயர்
தொல்காப்பியர்;எழுதிய நூல் தொல்காப்பியம். இந்நூலில் பொருளதிகாரத்தில் [இன்னும்
இரண்டு அதிகாரமுண்டு; எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்] மெய்ப்பாட்டியல்
என்ற அத்யாயம் நமது கூத்திற்கு (படிக்க)
அவசியமாகிறது.
இப்போது காட்சிப் பொருளாக ஹோலிப் பண்டிகையின் நாயகர்கள்
என்றால் காண்பவர்கள் மக்களாகி விடுகிறார்கள்.சரித்திர நாயகர்களின் தொப்பி எதற்குக்
காட்சியாகிறது. அடையாளத்திற்கு. பார்ப்பவர்களின் வரலாற்று நினைவு அடையாளத்தை
இந்தத் தொப்பி பிரதிநிதித்துவப் படுத்துவதால், காண்பவரின் சரித்திர உறவுக்குள்
இப்போதைய நடிகர்கள்,நாயகர்கள் ஆகிவிடுகின்றனர்.எப்படி என்பதை தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்
விளக்குகிறது.
”வாழ்வில்
நம்மை அறியாமல் உணர்ச்சிகள் மிக எளிதாக வெளிப்படும்.
அறிவைச் செலுத்தி ஆராயவேண்டிய அவசியமின்றியே நேராகப் புலப்படும்”.
உரை ஆசிரியர்:தே.ஆண்டியப்பன்.
தொல்காப்பியம்: ”உய்த்துணர்வின்றித்
தலைவரு பொருண்மையின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பாடாகும்”-செய்யுள் 196.
இது செய்யுளுக்காக.அதாவது ஓசைக்காக. ஒலி செய்யும் (மொழி)மாயவித்தையை
அதாவது ”அறிவைச் செலுத்தி ஆராயவேண்டிய
அவசியமின்றியே நேராகப் புலப்படும்”.
உரையாசிரியர் நமக்கு இப்படிப் புரிய வைக்கிறார்:”ஒருத்தி சினம்
கொள்ளுகிறாள்,ஒருவன் சிரிக்கிறான் என்பதை உய்த்துணர்வின்றி எளிதில்
கண்டுகொள்ளமுடியும்”.
டாக்டர் ஹரன்:
”மெய்ப்பாடு-Emotional
Expression.
அறிவைச்
செலுத்தி ஆராய்ச்சி பண்ண வேண்டிய அவசியம் இன்றி நேராகப் புலப்படும், எளிதாக
வெளிப்படும் உணர்ச்சி வெளிப்பாடு.
உய்ப்போன் –நடிகன்,உணர்ச்சியை
வெளிப் படுத்துபவன்; காண்போன் –பார்வையாளன்.
நடிகன்
தன்னுடைய உணர்ச்சிகளை காண்போர் புரிந்துகொள்ளும்படி உடம்பின் மூலமாக வெளிப் படுத்துவது
மெய்ப்பாடாகும்.”
|
இந்த அதிகாரம்
அகம் பற்றியதும்கூட.மேலும்;
“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்
மெய்ப் பாடென்ப மெய்யுணர்ந் தோரே”.
இதை உரை ஆசிரியர்
கூறுகிறார் இப்படி:
”அச்சமுற்றவன் மாட்டு நிகழும்
அச்சம் அவன் மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை
மெய்ப்பாடெனெக் கொள்ளப்படும்”.
ஆக,ஹோலிப்பண்டிகை பாராளுமன்றப் பித்தர்களின் பிதற்றலால் (delusion),அதாவது யதார்த்தத்திற்கு மாறாக அந்தந்த இனக்குழுத்
தலைவர்களின் அடையாளத் தொப்பிகளை அணிந்து மெய்ப்பாடென்று காட்ட எத்தனிப்பது
பித்துவின் பிதற்றலாகத்தான் படுகிறது.
[இப்போது தொப்பி
அணிவது மேடை அலங்காரமெல்லாம் எதற்கு என்று புரிகிறது அல்லவா]
இனி
பூர்வீகர்களிடமிருந்து விடுபட்டு பித்துக்களின் பிதற்றல்களைப் பற்றி ஒரு
சில;
1. தமிழகத்தின் மீனவர்கள் M.P தொகுதிகள் 10க்கு
மேற்பட்டுள்ளன.இவர்கள் பல மதத்தினர்; மொழியால்,செய்யும் தொழிலால் ஒரேவகையினர். இவர்கள் தங்களைத் தாங்களே பிரதிநிதித்துவம் பண்ண
முடியாதவர்கள்.இவர்களது வாழ்வாதாரங்களில் ஒரு பகுதியான கச்சத்தீவை இவர்கள் அனுமதி, ஒப்புதல் இன்றி அண்டை நாட்டிற்குத் தாரைவார்த்து விட்டனர் பார்லிமெண்டேரியன்கள்
அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் சட்டசபையாளர்கள்.இப்போது மீனவர் தொழிலும்,
உயிர், உடைமைகள் அன்னிய நாட்டினரிடம்.வங்கக்
கடலின் கரையில் கிட்டத்தட்ட சரிபாதிக் கரை மீனவர்கள் இன்று சிங்களத்துத் தயவுக்கு
ஏங்கி ஒருபுறம்.மறுபுறம் அவர்களுக்கான தீர்வு எது?என்ன? என்று சொல்லாமலே, மீனவர்
பிரச்சினை தீர்க்கப்படும் என்று ஆசை காட்டுவது மறுபுறம்.
2. ஸ்ரீலங்க ராணுவ பாசிசத்தின் மனித உரிமை மீறல்களை கணம் கூடக்
கண்டிக்க இயலாத சிக்கலில்-பயத்தின் –மாட்டிக்கொண்டுள்ள இந்திய வெளியுறவுக்
கொள்கைகளிலிருந்து எப்படி வெளியேறி யாழ் தமிழர்களின் உயிர்,உடைமைக்கு
உறுதியளிப்பார்களாம் இந்தப் பித்து பிதற்றல்காரர்கள்..நீங்கள் கேட்கும் உரிமையை, எதிர்க்கும் உரிமைகூட யதார்த்தத்தில் மறுக்கப்பட்டிருக்கிறது (foreclosed).பித்தர்கள் அடுத்த வீட்டில் கரண்ட் போட்டால்(மோட்டார்)
வானத்திலிருந்து என்னை யாரோ இழுக்கிறார்கள் அல்லது சீன வானொலி நிலையத்திலிருநது
கூப்பிடுகிறார்கள் என்று பிதற்றுவார்கள்.
இந்தப் பிதற்றல் கோரிக்கைகள் (ஆசை) பாராளுமன்ற
மந்திரி அதிகாரம்;அதை மக்கள் வாயிலாகத்தான் பெறமுடியும்.ஆகவேதான் நடிகைகளும்
நடிகர்களும் மக்களிடையே வருகிறார்கள்.
[எப்பவாவது
ஆடம்பரமற்ற மனிதர்கள் வருவதுண்டு].பித்துக்குளிகள் திட்டங்கள்,தீர்மானங்கள்
என்பார்கள்.பின்னர் “செய்வீர்களா” என்றும் ”செய்தீர்களா”
என்றும்(Rhetoric-ஆக)வெற்றுச் சொல்லாடல்கள்தான் “என்னாங்க”;’நொன்னாங்க’;”டீ அடித்தேன்,இனியும் டீ
அடிப்பேன்” எனும் போக்கு;
பாட்டாளிச் சிந்தனையோ,மனமோ இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து
பாட்டாளிகளே என்றழைத்தால் பாட்டாளிகள் தங்களுக்குப் பின் யாரோ வருவதுமாதிரி
திரும்பிப் பார்க்கிறார்கள்.
விவசாயிகள் கூட சினிமா,நுகர்வில் திளைத்துள்ளனர்.இதில் யார்
கைவைப்பது? சமூகரீதியில் கவனிக்க வேண்டியதில் பலகட்சிகள் மெளனம் சாதிக்கின்றன.
உதாரணமாக,
மலைவாழ் மக்களுடன் ஐந்து,ஆறு மாநிலங்களில் கைகோர்த்து
போராடிக்கொண்டிருக்கும் மாவோயிஸ்ட்டுகளின் போரட்டத்திற்கான ஜனநாயகத் தீர்வென்ன? துப்பாக்கிக்கெதிராக துப்பாக்கியா?
இதுதான் ஜனநாயக வழியா?மக்களின் கருத்தென்ன?வெளிப்படையாய்
இப்போது கட்சிகள் இதுபற்றிய திட்டத்தை அந்தந்த மாநில மக்கள்முன் வைப்பதற்கென்ன?
வைக்கமாட்டீர்கள். ஆய்வுக்கான கருவி ஏதும் உங்களிடமில்லை;ஆசை மட்டுமே உண்டு.எளிமையான
முன்முடிவுகள்(prejudices) உண்டு.அது சட்டம்,ஒழுங்குப் பிரச்சினை என்று ராணுவத்தின் பக்கம்(armed forces) திரும்பிக்கொள்ளலாம்.
ராமர் பாலம்.
என்ன செய்யப்போவதாகச்
சொல்லுகிறார்கள்?பழைய பாதையில் தொடருவோம்;பாலம் வேண்டும், ராமரும் வேண்டும் என்கின்றனர்.எத்தனை ஆயிரம் கோடிகள் கடலில்
கரைக்கப் பட்டிருக்கிறது இதுவரை? இதற்கு யார் பொறுப்பு?.
இத்துனை ஆயிரம் கோடிகள் யார் அப்பன்/தாத்தன்
வீட்டுச்சொத்து;இனிவேறு பாதை என்றால்,அது எந்தத் தாத்தன் சொத்து?
வீணாக்குவது அரசு
மேலான சதிவழக்காகாதா?இது கிரிமினல் குற்றமாகாதா?
இனி இளம்பருவக்
கோளாறு களைய இப்படி அரசு கூறுகிறது;
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான
பாடப் புத்தகங்களில் “தீண்டாமை
மனித நேயமற்ற செயலும்-பெருங்குற்றமுமாகும்”.
[குறிப்பு:இந்த ICSE எனும் பாடத்திட்டத்தில்
இயங்கும் பள்ளிகளின் பாட நூல்களில் ’தீண்டாமை
குற்றமாகும்’ என்று அச்சிடுவதில்லையாமே? உண்மையா?]
பாராட்டுகள்.ஆனால் பிரச்சினைகள் இத்துடன்
முடியவில்லையாக்கும்.இந்தச் சாதியம்/
தீண்டாமை வாழையடி
வாழையாய் எப்படித் தளைக்கிறது.இதை யார்
யார் வாடவிடாமல் பாதுகாத்து
வருகிறார்கள்?
நீர் ஊற்றி,ரசாயன உரமிட்டு வளர்ப்பது எந்தெந்தக் கலாச்சார
நிறுவனங்கள்,சமூக/அரசியல் நிறுவனங்கள்,பத்திரிக்கைகள்?
இதெல்லாம்
எப்போது ஆய்வாகிப் பாடநூலாகும்?இதை ஒழிப்பதற்கான ஒவ்வொரு கட்சிகளின்
தீர்மானம்/திட்டத்தை மக்கள்முன் எந்தப் பாரளுமன்ற/சட்டசபைத் தேர்தலில்
வைக்கப்படும்?
இனி,பெண் என்பதை
ஆசைப் பொருளாகப் பார்க்கும் எண்ணத்தை
(attitude) களைய என்ன மந்திரச்சொல் வைத்திருக்கிறீர்கள் ;பலாத்காரத்தை (aggressivity) என்ன
செய்யப்போகிறீர்கள்? ஒருவேளை மனிதவள
மேம்பாட்டுத்துறையை இப்படிப்பட்ட வேலைகளுக்கான துறைகளாய் மாற்றுவீர்களா? அந்த நாள்
எப்போது வரும்?
பிதற்றல் (delusion)அரசியல் சொல்லாடல்களில் வரும் திட்டங்கள் எல்லாவற்றிலும்
அவர்களுக்கு share (பங்கு) வருகிற மாதிரிதான் உள்ளது.
இந்தியத் தொழில்துறை மையமாதல் ஒருபுறம்;மற்றொருபுறம்
பரவலாக்கல்; இரண்டுமே நடைபெறுகிறது.
குவிமையமாதலில்
பன்னாட்டு நிறுவனங்களின்கோரப்பிடியில்[சில்லறை வர்த்தகங்களை (retail shop) போண்டியாக்கும் முயற்சி,பெட்ரோல்,எரிவாயுவை monopoly ஆக்கும் முயற்சி etc ].
இறுதியாக 60% விவசாயிகளை என்ன செய்யப்போகிறீர்கள் வருங்காலப் பிரதம மந்திரி அவர்களே? தேர்தலுக்கு
முன்னர் சொன்னாத்தானே ”சொன்னதைச் செய்தவர்”அல்லது “செய்ததை சொன்னவர்”அல்லது
’செய்வீர்களா’ என்று கேட்டதெற்கெல்லாம்
நியாயம் என்று நினைக்கத் தோன்றும்.
மக்கள் “விழிப்பு”என்ற நிலையை
எட்டாவிட்டால்......’அரசியல்
பிரதி’என்ற தன்னிலை நிலைப்பாடு
ஒவ்வொருவருக்கும் எல்லாம்வல்ல (omnipotent)
கற்பனையை (imaginary)கொடுக்கிறது.
அரசியல்வாதிகளின் ஆசை(அதைத்தான் கட்சியின் திட்டம் என்ற
மந்திரமாக்குவர்) மற்றமைமேல் (Otherமேல்)உள்ள ஆசையே.[மற்றமை அவர்களை நேசிக்கவேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற ஆசை].அதைத்
தந்தை அதிகாரத்தால்-சிறந்த சட்டம்/நிர்வாகம்/விதிகள்-ஒழுங்குபடுத்தப்படாத வரையும்,மக்கள் விழிப்புணர்வு
பெறாதவரையில்;இந்த அரசியல் தன்னிலைகளின் (m)Other-ன் மேல் கொண்ட ஆசை தொடரத்தான் செய்யும்.நீடிக்கத்தான் செய்யும்.இவைகளை எதிர்த்து ஒரு
விடாப்பிடியான மக்கள்திரள் போராட்டம்தான் இதற்கான பதிலாகும்.
குறிப்பு: விடுபட்டவைகளையும் கோரிக்கைகளையும் (Needs and
Demands)சேர்த்துக்கொண்டால்
பூர்த்தியாகும்.
[வெங்காயத்தைத்
தொலித் தொலியாய் உரித்தால் இறுதியில் என்ன இருக்கும்].
கொசுறு: [ஒரு
வழக்கிற்கு வாய்தா வாங்குவதற்கு உச்சவரம்பு உண்டா,இல்லையா?].
க.செ
No comments:
Post a Comment