"பாடல்-138.
வழி பல கடந்து வரும் முதிய பாணனே! சிறிய யாழும் கந்தல் உடையுமாகக் காணப் படுவோனே!அவனை எண்ணி வந்த நீ பெரிய எண்ணம் கொண்டவன்.நின் தலைவன்,’பின்னொரு நாள் வா!’ என்று சொல்லாதவன். கருங்கூந்தல் ஆயிழையின் கணவன்.அகன்ற புனத்தில் வாழும் கிளி, மரப்பொந்திலே சேர்த்து வைத்த பெரிய கதிரைப் போன்றவன்.அவனிடம் பரிசில் பெற்று வரும்போது நின்னைப் ’பழைய பாணன்’ என்று எவர்தாம் அறிவர்? அத்துணை வளமுடன் நின் தோற்றமே மாறிவிடுமே!.
பாடியவர் : மருதன் இளநாகனார்; பாடப்பட்டோன் :
ஆய் அண்டிரன்
திணை : பாடாண் துறை : பாணாற்றுப்படை
[பாணனை ஆயிடத்துச்
செல்க எனக் கூறி ஆற்றுப்படுத்தலின் பாணாற்றுப்படை ஆயிற்று. அவன் தப்பாமல் பரிசில்
தருவான் என்பதனை உணர்த்துவார்,'நின் இறை’ என்றனர்.]
ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய,
மீனினம்
கலித்த துறைபல நீந்தி,
உள்ளி வந்த,வள்ளுயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண! 5
நீயே,பேரெண் ணலையே; நின்இறை,
’மாறிவா’ என மொழியலன்
மாதோ;
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி
மரீஇய வியன் புனத்து
மரன்அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே! 10
வழி பல கடந்து வரும் முதிய பாணனே! சிறிய யாழும் கந்தல் உடையுமாகக் காணப் படுவோனே!அவனை எண்ணி வந்த நீ பெரிய எண்ணம் கொண்டவன்.நின் தலைவன்,’பின்னொரு நாள் வா!’ என்று சொல்லாதவன். கருங்கூந்தல் ஆயிழையின் கணவன்.அகன்ற புனத்தில் வாழும் கிளி, மரப்பொந்திலே சேர்த்து வைத்த பெரிய கதிரைப் போன்றவன்.அவனிடம் பரிசில் பெற்று வரும்போது நின்னைப் ’பழைய பாணன்’ என்று எவர்தாம் அறிவர்? அத்துணை வளமுடன் நின் தோற்றமே மாறிவிடுமே!.
-புறநானூறு தெளிவுரை.
-புலியூர்க்கேசிகன்."
நின்னை
அறிந்தவர் யாரோ?
“ஆனினம்
கலித்த அதர்பல கடந்து”
வழி
பல கடந்து வரும் முதியவன் பாணன்.
பாணனை
வரவேற்கும் முறை மிக உயர்வாக உள்ளது. இந்த உயர்வு Desire to love- ல் இருந்து
வரக்கூடியது.
ஏனென்றால்,
வழிகள்
பல கடந்து , அதாவது ராஜபாட்டை அல்ல. ஒற்றையடிப் பாதையாகக் கூட அது இருக்கலாம்.
பாதை இங்கு சிம்பாலிக்காக இருக்கிறது. அதை இப்படிப் பார்க்கலாம். தூரம் ,
பாதுகாப்பு இன்மை, பசி. தூக்கமின்மை , கொடிய விலங்கின் அச்சுறுத்தல்.... பலவற்றைக்
கடந்து வந்தவனே! எனும்போது சொல்லுபவனின் அன்பு காட்சியாகி விடுகிறது.
அத்துடன்
சிறிய யாழ் கையில்; கந்தல் உடை;இது அவனை யார் என்று கூறும் குறி- யாகிறது (sign).
தன்னுடன்
சேர்ந்து வாழும் மானினம், மீனினம் கடந்து வந்தது; வந்தவன் பட்ட துயரம்;என்னைப்
பார்ப்பதற்கு இதைக் கடந்து வந்தாக வேண்டும். அவைகள் பேசுபவனின் ஆசைப்படு பொருள். Discourse of object of desire .
“பின்னொரு நாள் வா” என்று சொல்லாதவன். இது
குறிப்பீடல்ல,குறிப்பான். அதாவது அது சொல்லத் தெரியாதவன். ஈகை என்பது அவனது மூச்சு.
அகன்ற புனத்தில் வாழும் கிளி மரப்பொந்தில்
சேர்த்து வைத்த பெரிய கதிரைப் போன்றவன். இப்படியும் ஒரு உருவகம். கிளி,மரப்பொந்து,சேர்த்துவைத்த
கதிர். இது சிம்பாலிசம்.கிளியும், மரப்பொந்தும்;பெரிய கதிர் ஆகியவை அவனின்
ஈகையை,அவன் பண்பை அடையாளப்படுத்தி இப்பொருள்கள் தங்களின் இரண்டாம் அடையாளத்தைப் பெறுகின்றன.
அவன் வாழ்வுடன் இணைந்த அனைத்தும்,அவனது அனுபவிப்பு,எண்ணம்,மனம்
அனைத்திலும் வாழ்வு பொறிக்கப்பட்டிருக்கிறது
இந்த வரிகள் எழுதுவதற்கு முன்னே.
மக்களைக் கேட்க வைக்கும் அரசாங்கம் எங்கே!
மக்களைப் போராடவைக்கும் பின்நவீனத்துவம்(Post
modernism) எங்கே!!
வருவார் என மரப்பொந்தில் சேர்த்து வைத்த
அந்தப் பண்பாடெங்கே!
புறநானூற்றுக்காரனைப் பார்த்துத்
திரும்பினால்....அவனை நாடி உள் சென்ற பிச்சைக்காரன்கூட செல்வந்தனாகத் திரும்பி
வருவானாம்.
இங்கே! இப்போ...?
இனியும் புறநானூறானை என் மூதாதையர் என்று
கூறி அவனை நான் அசிங்கப்படுத்தமாட்டேன்.
க.செ.
டாக்டர்.ஹரன்.