30 Mar 2012

“என்னைக் கொன்றவன் (perpetrator) என்னை அங்கீகரிக்காதபோது, நான் அதை மறப்பது எப்படி? அவனை மன்னிப்பது எப்படி?” ;-இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானமும் இந்திய அரசும். - ஒரு மன அலசல் (psychoanalysis).

மனித உரிமை மீறல்..!   அவ்வளவுதானே ?
அப்படியென்றால் ஜெர்மானிய வெள்ளை [ஆரிய இனம் (race)] இனவாதம், யூத இனமக்களை, இலட்சக்கணக்கில் கொன்றது, கொட்டடியில் அடைத்தது, Gas Chamber (விஷவாயு கூண்டுக்குள்) வைத்துக் கொன்றது, ரசாயன மருத்துவக் கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கு யூதர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்தியது கூட... மனித உரிமை மீறல் அப்படித்தானே!
இரண்டாம் உலக யுத்தத்தில், ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசி, லட்சக்கணக்கில், நொடிப்பொழுதில் பொசுக்கியது, பாரம்பரிய கதிர்வீச்சை (Radiation) ஏற்படுத்தியது, மனித உரிமை மீறல் மட்டுமே அப்படித்தானே!

மீண்டும் சிறிது நேரம் கழித்துப் பேசலாம். இப்போது, மாநிலங்களவை நேரம்.  மார்ச் 13ல் எழுந்த சொல்லாடல்களில் சில.

“ இலங்கைப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது.  அது தொடர்பான தீர்மானத்தை ஆதரிப்பது நமது தார்மீகக் கடமையாகும் ”.

“ மத்திய அரசு இதுவரை இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாடும் எடுக்கப்படாமல் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த வேண்டும்”.[எவ்வளவு சாமர்த்தியமாய் தன் / கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைத் கூறாமல் எதிரியை மடக்க கூர் அரிவாளோடு பதுங்கியுள்ள சாமர்த்தியம் ]. 
“ Support the Resolutions on war crimes in SriLanka “. 

“ இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில், அந்நாட்டில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கவேண்டும், என்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது ”.
 
 “இலங்கைப் போர்க்குற்றம் தமிழக எம்.பி.க்கள் அமளி” – தினமணி – மார்ச் 13.
‘இலங்கையில் உள்நாட்டுப் போர்’ என்று முதலாளிய வலதுசாரிகளால் நாமகரணம் சூட்டப்பட்ட (இந்திய அரசியல்வானில் அது மேலாண்மைக் கருத்துணர்வு) பெரும் தேசிய இனவாதத்தால், சிறுபான்மை தேசிய இனம், கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டு, எஞ்சியவர்களின் வாழ்வுரிமைக்கு வானம்பார்த்த விழிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 3-ம் ஆண்டு ஆயிற்று.

[நடந்த யுத்தம் யாரால் துவக்கப்பட்டு, யார் யாருக்கிடையில் நடந்து முடிந்தது?  நேரடி பங்கேற்பு-இல்லாதவர்களில் (மக்கள்) எத்தனை ஆயிரம் பேர் (லங்கர்கள், தமிழர்கள்) கொல்லப்பட்டனர்?  மீறியது யார்?  குண்டுமழை (சொந்த மக்களாக இருந்தால்?) பொழிந்தது யார்?  பிஞ்சுகளையும், மொட்டுகளையும் சுட்டுப் பொசுக்கியது இனவாதமா?  அல்லது இரு (பிரிவுகளுக்கு) party களுக்கிடையிலான யுத்தத்தாலா?  இதுவா மனித உரிமை மீறல்? ]
     
இப்போது மனித உரிமை மீறலுக்கான காட்சிகள், உண்மைகள் கிடைக்க; அதிலும் ஒரு பிரதிக்கு (text) இன்றும் சந்தேகம்.  இலங்கை தமிழ் எம்.பி.க்கள்/ விசாரணை / மனித உரிமை மீறல் / மீறியவர்களை / அந்த நாட்டு அரசால் கண்டிக்க  வேண்டும்.
     
தினமணி வெளியிட்ட மேற்கூறிய பிரதிகளைக் (text) கொண்டு அவர்கள் யார் என்று  அடையாளம்  கண்டுவிட முடியுமா?
     
கட்சிகள் எழுப்பிய போர்க்குரல் (தினமணி அமளி என்கிறது) அந்தக் கட்சிகளின் சக தலைவர்களையும் தொண்டர்களையும் புதுக்க, மற்றொரு அடையாளத்தை அணிந்து கொள்ள உதவிற்று.
     
பொது வெளியில், பன்னாட்டுப் பார்வையில் அரசியல் திரட்சிக்கு ஒரு மூலதனம் திரட்டியாயிற்று,
     
இதில், இந்த அமளியில் வட இந்திய மாநிலக் கட்சிகளுக்கு எந்த நிலைப்பாடாவது இருந்திருக்கிறதா?  காஷ்மீர் பிரச்சினை கன்னியாகுமரியிலும் இன்றைக்கும் பேசும்பொருள்தான்.
     
தென்கோடித் தமிழ்-இனத்திற்கான பிரச்சினை வடக்கில், வடகோடியில் ஒரு செய்தியாக, ஒரு டீக்கடைப் பேச்சாக மாற்றப்பட்டுள்ளாதா?
     தமிழக மக்கள் தெற்கத்தியரை, தொப்புள் கொடியாகப் பாவித்தது.  அது ஒரு காலம், நிலாக்காலம்.  ராஜீவின் அரசியல் கொலைக்குப்பின், மத்திய அரசின் பெரும் கதையாடலின் மனப்போக்கில் (attitude) தாய்மை உள்ளதா?
      ஒரு சந்தேகம்தான்

      83 ஜீலைக் கலவரத்தை ஒட்டி..........
      தமிழர்கள் இன்றும் எழுந்தால்...........
      எழுப்பி விட்டால் ...............
எதற்கு இந்தியப் பாராளுமன்றத்தில் “அமளி“?  அந்த மேடையை வேறு நாடகம் / ஊடகக் காட்சிக்கு இடமளித்துவிடலாம்.
     
Mr.Clean-யும் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்வதைத் தொந்திரவு பண்ணாமல் இருந்துவிடலாமில்லையா?
     
போதும்.  இனி மன அலசல் ஆய்வுப்பொருளை எடுக்கலாம்.
     
பிரணாப் முகாஜி, “ குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு ”. 

இன்று புதன் 
Dr. மன்மோகன்சிங் அல்லது பிரதம மந்திரி,   

“ நமது நோக்கம் முன்னோக்குப் பார்வை கொண்டதாக (forward- looking ) இருக்க வேண்டும்.
“... பிரச்சினையில் சம்பந்தமுடைய குழுவினரிடம் பூசலையும் மனக் கசப்பையும் (confrontation and mistrust) ஆழப்படுத்திவிடுவதாக இருக்கக் கூடாது..... Accountability and confrontation போன்ற பிரச்சினைகளில் முன்னோக்குப் பார்வை வேண்டும்...
“இலங்கை வாழ் தமிழ் சமூகத்திற்கான எதிர்காலத்தை உத்திரவாதம் செய்வதே அரசின் குறிக்கோள்...
தமிழர்களுக்கான சமத்துவம், கௌரவம், நீதி, சுயமரியாதையைப் பெற்றுத் தருவதே நோக்கமாகும் ”... The Hindu 12-03-2012
வெளியுறவு மந்திரி கிருஷ்ணா, “ இலங்கையுடன் இந்தியாவின் உறவு, நட்பு உறவு.....“
ஏகபோக ஏகாதிபத்தியத்தின், இனியாகும் உலகளாவிய முதலாளியத்தின் மனித உரிமை மீறல் கோரிக்கை ஒரு நம் ஊர் கட்டப்பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்தார்களை திரட்டுவதுதான் நடந்து வருகிறது.
      ” நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு ”
     
முடிவில் கோழிவாங்கிக் கொள்வதற்கும் ஆஸ்பத்திரி செலவுக்கு, சாராயத்திற்கும் சேர்த்து, ஒரு ஆயிரம் கொடுத்திரு, [எங்களுக்கு (பஞ்சாயத்தாருக்கு) அப்புறமா 2000..... ஆயிரமா கொடுத்திரு] என்கிற மாதிரியிருக்கிறது.
     
இந்தக் கட்டப்பஞ்சாயத்திற்கே இந்தியா வரமறுத்துவிட்டது.
     
இது மன அலசலின்படி Disavowal (மறுத்தல்) ஆகும்.  அமெரிக்கா, தமிழகக் குரல் போன்றவற்றில் ஏதோ குறைபாடு, கைமீறிய கோரிக்கையால் ஏற்பட்டதல்ல.
     
இந்திய அரசின் சுயமோகப் பிணைப்பான (anaclytic relation) ஸ்ரீலங்காவுடனான பிணைப்பிற்கு உறவுக்கு ஊறு வந்து விடுமோ?  என்ற காயடிப்பு அச்சம். Anxiety.
     
மேற்கூறிய உறவைத் தக்க வைக்கும் முயற்சியாக எழுந்ததுதான் இந்த மறுப்பு.  அதாவது, தற்காப்பு.
     
பாரம்பரிய உறவில் பிளவு, காயம்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம்.
     
வெறும் நட்பு நாடல்ல.  இந்திய அரசு, வருங்கால வல்லரசுக் கனவின் பிணைப்பு உறவு (anaclysis).
     
தமிழ் எம்.பி.க்கள், அமெரிக்காவின் கோரிக்கை போன்ற அனைத்தும், இந்திய சுயமோகத்தில் ஏற்படுத்திய காயம் (trauma).
     
இந்திய அரசின் ஏகாதிபத்திய கனவின் நீக்க முடியாத பங்காளி உறவு.  ”என்ன பங்காளி” என்ற குரலை நிறுத்த முடியாது.
     
மற்றும் ஒன்று உள்ளது.  LTTE-ன் அரசியல் கொலையை (பெரிய இடத்து இழவு) மறக்கவோ, மன்னிக்கவோ தயாராகயில்லாத காங்கிரஸ், அரசாங்கம் (government) இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி.
     
LTTE என்ற பகுதி (part) யாழ்பாணத் தமிழர்கள் (முழுமை) என்றாகி, நடந்தேறிய பேரின இனவாதத்தின் அழித்தொழிப்புச் செயல் Big Brother உடன் இணைந்து வெற்றிகரமாய் நடந்தேறியிருக்கிறது.
     
இந்த வெற்றிக் கூட்டணி தொடரத்தான் செய்யும் எப்போதும்.
     
ஆக, ஏகபோக (unipolar) நட்சத்திரமான அமெரிக்கா தன் உலகமயமாகிவரும் அரசியல் ஏகபோக பொருளாதாரத்திற்கான கோரிக்கைகளையே (demand) உள்ளூரிலும், வெளிநாட்டிலும் அரசியல், பொருளாதார கலாச்சாரம் என்று அறைகூவும்.

      ஏனெனில் தமிழர்களின் குரலுக்கு, தற்காப்பாக / மறுப்பு, எழுந்தது நான் உணர்விலிருந்து (Ego) அல்ல. மாறாக, பேரகனிலிலிருந்து (Super Ego) தற்காப்பு (defence) வெளிப்பட்டிருக்கிறது-அதாவது, பாரம்பரியம், நட்பு நாடு, என்ற விழுமியத்தை அவர்கள் மீறமுடியாது.
     
ஆகையால், இந்திய அரசும், இந்திரா காங்கிரசும் தங்கள் வெற்றிக் கூட்டணிக்கு எதிராக துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள்.
     
[ இதை எழுதிக் கொண்டிருந்த பொழுது, மற்றொரு முக்கிய நிகழ்வாக திடீர் மகிழ்ச்சி வெடித்தது.  அதாவது, இந்தியப் பாராளுமன்றம் அமெரிக்க அறிக்கையை ஆதரிக்க விருப்பம் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது.]
      அது பற்றிய கருத்தைப் பார்க்கலாம்.  உண்மையில் யார் அறிக்கை?  ஸ்ரீலங்கா அல்லது அமெரிக்கா?
(இரண்டின் நனவிலி ஆசையும் எத்திசையில் செல்கிறது என்பதுவே அரசியல்)
      அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளுறைந்து இருப்பது இதுதான்:-
      இலங்கையின் உள்ளுர் கமிட்டி கண்டுபிடித்ததாகவும், எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கை என்றும் சிலவற்றைச் சொல்லியிருக்கிறது.  அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, இலங்கை பேரினவாத அரசின் அனைத்துக் கொடுஞ்செயலையும் மறைத்துவிட அமெரிக்கா முயற்சிக்கிறது. 
அமெரிக்கா, இலங்கை உள்ளுர் கமிட்டி கூறிய ஆலோசனைக்கு உலகளாவிய அந்தஸ்து பெற்றுத்தர உறுதுணையாகிறது.
      அமெரிக்கா, இலங்கையின் உள்ளுர் இராணுவ அரசியலில் தீவிரப் பங்கேற்பு எடுக்கப்பார்க்கிறது.
      அமெரிக்கா, பாதிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் குரல் உலகத்திற்கு எட்டாத ஆழத்தில் அவர்களைத் தள்ள முயற்சிக்கிறது.  இலங்கை பேரினவாத அரசுடன் இணைந்து, அமெரிக்காவும், இந்திய அரசும் சேர்ந்து கூட்டாக நடத்தும் நாடகம்போல தெரிகிறது.
      இந்தியப் பாராளுமன்றம் முதல்நாள் மறுப்பு, மறுநாள் ஆமோதிப்பு !!
     
இந்திய பாராளுமன்ற கட்சிகள் (பெரியவைகள்) பெரும்பாலும், இச்சதியில் ரகசியப் பங்காளிகளோ என்று தோன்றுகிறது ].
      யாழ்தமிழர்களின் எதிர்காலம் தமிழக மக்கள் கையில்தான்.
     
இலங்கையின் 83 ஜூலைக் கலவரத்தின் எதிரொலி, தமிழகத்தின் கடலுக்கும், மேற்கு மலைக்குமிடையில் எதிரொலித்தது......மீண்டும் பேரொலியாக, அதிரவேண்டும், அதிரவைக்க வேண்டும்.  அது வெறும் உணர்ச்சி மேலீட்டால் எழுந்தால், லங்கன் தமிழுக்கு பேருதவியாய் இருக்காது.
     
இப்போது இன அழிப்பு முடிந்து 3 ஆண்டு, இனப்போராட்டம் ஆரம்பித்து பல பத்தாண்டுகளாயிற்று.
     
“ இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்திற்கான எதிர்காலத்தை உத்திரவாதம் செய்வதே அரசின் குறிக்கோளாக உள்ளது ” – பிரதமர்.
     
அரசு பஞ்சாயத்தாரராக மட்டும் செயல்படப்போவது தெரிகிறது.

      தமிழர்களின் ‘ தொப்புள் கொடி ’ என இங்குள்ள அரசியல்வாதிகள் சொல்லிக் கொள்ளலாம்.  அது ஒரு அரசியல் கோஷம் என்றளவில்தான் நடுவண் அரசால் பார்க்கப்படுவது போல் தோன்றுகிறது.
     
நடுவண் அரசைப் பொருத்து, ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையில், லங்காத் தமிழர்களுக்கு பாதிப்பென்ன என்கிற அடிப்படையில், மனப்பாங்கில்தான் (attitude) ஆய்வும், தீர்வும் செல்லும்.
     
இப்பிரச்சினைக்கு சற்று முன்னே உள்ள வரலாறை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
மன அலசல் ஆய்வுக்கான களமாக முன்னாள் யுகோஸ்லாவியா, அருசா, ரவண்டா (Rwanda)-வில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.  அது பற்றி “ உண்மை அறியும் குழுவின் நோக்கம் சட்ட பூர்வமானதாக அதை நிலைநாட்டுவதாக மட்டும் இருக்கக்கூடாது “ என்கிறார் ஆய்வாளர் Nina K Thomas.
     
மேலும் அவர் கூறுகையில் பேரழிவிற்குப் பின்னர் நடத்தப்படும் ஆய்வில், தீர்வில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய, அடிப்படையானவைகள் என்று சிலவற்றைக் கூறுகின்றார்.  பாதிக்கப்பட்ட, காயம்பட்ட மனம் “என்னைக் கொன்றவன் (perpetrator) என்னை அங்கீகரிக்காதபோது / ஏற்காதபோது நான் அதை மறப்பது எப்படி?  அவனை மன்னிப்பது எப்படி?”
     
ஆகவே, பேரழிவுக்கு முன் பேரினவாதிகளால் விலக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் / கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு “ மறுக்கப்பட்ட வரலாறு மீட்டெடுக்கப்பட்டாக வேண்டும் ”.  
     
இலங்கையின், இலங்கை அரசின் பேரினவாத மனப்போக்கின், குணத்தின் விளைவால் தொடர்ந்து அங்குள்ள தமிழர்கள் அழிக்கப்பட்டு,LTTE.-க்கு எதிரான யுத்தம் எனும் பெயரில் சாதாரண மக்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது, ஆணையும், பெண்ணையும் நிர்வாணமாக்கி, கைகளைக் கட்டி கொன்றொழித்தது யுத்தத்திற்கு அவசியமா என்ன?
அது, அந்த இனத்தின் மீது, மாறாத, மீறாத, ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட பயங்கரவாதம்; பேரினவாதத்தின் பயங்கரவாதம்.
     
இதை, இதற்கான சாட்சியாக இருந்தது மற்றமைதான் (Other). அதாவது, உலக மக்கள்தான்,  ஊடகங்கள்தான், செய்திகள்தான்.  இந்த நேரத்தில் LTTE-ன் அரசியல் கொலையாலும், நுகர்வியல் கலாச்சாரத்தாலும், பிழைப்புவாத அரசியலின் பிற்போக்காலும் தமிழ் மனம், கூட்டுமனம் காயடிக்கப்பட்டிருந்ததால்.......,
     
.......பேரினவாத, பாசிச மகிந்த ராஜபக்சேக்கு தமிழகத்தில் எந்தவித எதிர்ப்புக் குரலும் இல்லாததும், நடுவண் அரசின், நேரடியான மறைமுக ஆதரவும் அவர்கள் குளிர்காய வசதியாக ஆயிற்று.

துன்பத்தை அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்.....
     
இறுதியாக, ஆய்வாளர் Nina k Thomas -ன் கூற்றின்படி, உண்மையை வெளிக்கொணரும் நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமில்லாமல், எதிர்காலம் எனும் பெயரால் உண்மையை அடகுவைக்காமல் இருக்கவேண்டும்.  அச்சமூகத்திற்கு, எதிர்காலச் சமூகத்திற்கு கசப்பான உண்மையை உணர்த்தவேண்டும்.
     
“ உண்மையையும், மனநலப்படுத்துவதையும் (truth and healing) மன்னிப்பதையும் சமாதானப்படுத்துவதையும் (forgiving and reconciliation) ஒன்றாக்கிவிடக்கூடாது ”.
     
“ இரு குழுவினரையும், ஒருவரையொருவர் மனிதர்களாக மதிப்பதும் அங்கீகரிப்பதுமாக மாற்றப்பட வேண்டும் ”.
     
இந்திய அரசு அல்லது வேறு முன்வரைவுகள் அரசியல், சட்டம் கலந்த முன்வரைவுகளை மட்டும் முன்னிறுத்தி, ஆதரிக்கக்கூடாது.
     
உயிர்பிழைத்துள்ளவர்களுக்கு தேவைப்படுவது என்னென்ன என்பது அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஒருவரையொருவர் மேலாண்மை (அடக்கியாள்வதற்கு) செலுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.
தாமஸ் கூறியபடி, சிங்கள இனத்தவரும் தமிழரும் ஒருவரையொருவர் மனிதர்களாக அங்கீகரிப்பதை சாத்தியப்படுத்த வேண்டும்.
பெரும் தேசிய இனவாதத்தின் சொல்லாடல்கள் முற்றிலும், சமூக, அரசியல் வெளியிலிருந்து அகற்றப்பட வேண்டும். 
இது ஒரு விவாதத்திற்கானது தான், பொது வெளியில் முன்வரைவுகள் பற்றிய ஆய்வு நடந்தால் ஆரோக்கியம் தான்.
     
எந்த முன்வரைவானாலும்,                                  
             சமூக உளவியல்தன்மை அல்லாது
            இருந்தால் எதிர்காலம்  கேள்விக்குறிதான்.
இன்றைய நிலையில் ஸ்ரீலங்கன் தமிழர்கள் அகதிகளாக இல்லாத ஐரோப்பிய நாடே இருக்காது போல் உள்ளது.  இவர்கள் தாயகம் திரும்பவும் வேண்டுமல்லவா?  அதற்கான சூழலும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இது ஒரு நீண்ட பயணம்தான்.
ஊடகங்களின் (media) பங்களிப்பு மிக மிக முக்கியம்.  பக்கச் சாய்வு (அரசியல்) துன்பப்பட்டவர்களுக்கு உதவாது.

கவனம் கடந்த காலத்திலிருந்து பெறப்பட..............
     
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் யூத இனத்தின் மீதான வெறுப்பும், அடக்கு முறையும், யூதர்களை ஐரோப்பா முழுவதும் நாடோடிகளாய் திரியவைத்தது.
     
பின்னர் பாசிச ஹிட்லர் லட்சக்கணக்கில் பயங்கரவாதத்தை (உலகயுத்தம் என்னும் சாக்கில்) அவர்கள் மேல் நிலைநாட்டினான்.
     
இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின், மா ரஷ்யாவின் பிளவிற்குப் பின் நடந்த மதபயங்கரவாதம் மற்றும் ரவண்டா (Rwanda) போன்ற இனவாத அழிப்பும், இன்னும் ரத்தமும் சதையுமான சாட்சியாக உள்ளது. 
 மேற்கூறிய உதாரணங்களிலிருந்து படிப்பினை அவசியமாக உள்ளது. 

இறுதியாக, பேரினவாதம் லங்கன் தமிழ் இனத்தின் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான அழித்தொழிப்புச் செயல், மற்றும் செயல்முறையானது தமிழினத்தை dehumanizing பண்ணியதாகும். இதைக் குறிப்பாக உணரவேண்டிய தருணமிது.


******* 


ஜனவரி 2012 தமிழில் வெளியான 'மற்றமை' (Other) பயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் - 1 பற்றிய மு. சிவகுருநாதனின் அறிமுக பதிவு இங்கே.

15 Feb 2012

வேட்டையாடு ! விளையாடு! ! (உமாமகேஸ்வரி மிஸ்ஸின் மரணம்)

                                                        அன்றொரு நாள் !


“ ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக! ”
- தைத்திரீய உபநிஷதம்.

13.2.2012. இன்று அந்தப் பள்ளி திறக்கும் நாள்.
இன்று ‘உமாமகேஸ்வரி மிஸ்’ மட்டும் பள்ளிக்கு வரமாட்டார்.

இன்று, மேலே கூறிய உபநிஷத கால இறைவணக்கம் கூறா விட்டாலும் நவீனகால இறைவணக்கம் பாடியிருப்பார். ஆனால், அது (இறைவணக்கம்) மாணவர்களுடனான ஒருவருக்கொருவருடனான (Inter Personal) உறவை முன்னிலைப்படுத்தாது.
                                   
அதுதான்,உமாமகேஸ்வரி மிஸ்சைக் கொன்று விட்டது.
அப்படி என்ன செய்து விட்டார் ' உமாமகேஸ்வரி மிஸ்' ? பெரும்பாலோர் செய்யும் தவறுதான் அது.

இன்றுள்ள தனியன்களும் நிறுவனங்களும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சுதந்திர வணிகமயமாதல் போன்றவற்றின் கட்டமைப்புகள்; அத்தோடு வணிகமயமான கல்வியானது விரிவுபடுத்தப்பட்ட மறு உற்பத்திக்கான (Extended reproduction) மூலப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆகையால், கல்விக்கூடம் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை உற்பத்திபண்ணும் தொழிலகம். இப்போது கல்வி! ‘Object!’
[கல்வி எதற்காக பெற்றோர்களால் வாங்கப்படுகிறது? அவர்களின் Fantasy (புனைவுரு) ஆன அதீத சம்பளம், வசதி, மகிழ்விற்கானதாக உள்ள உயர்கல்விக்கான எதிர்காலம், இதை அடையவே கல்வி ].

இப்போது ஆசிரியர் என்பதை உருவகமாக வாசித்தால் கூடுதலாக சில கிடைக்கும். நுகர்வுப் பொருளான இந்தக் கல்வி உயர்கல்விக்கான அடிப்படை. இதைச் சிறப்பாக நுகர்ந்துவிட்டால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பா உன் காலடியில் என்கிறது மற்றமை(Other). அதாவது, கலாச்சாரம் ஆணையிடுகிறது. தாய்/தந்தைமார்கள் (ஈடிபல்) அந்த வாசனைக்கு அடிமையாகி அவற்றை அடையும் இன்பப் பெருக்கத்திற்கு (Jouissance) உந்தப்படுகிறார்கள். இந்த வகைக் கல்விகள் சமூக அந்தஸ்தில் மேலதிகாரம் (Phallus) செலுத்துகிறது. இந்த நிறுவனங்களின் கவனம் கல்விக் கூடமல்ல. காசை அச்சடித்துக் கொண்டிருக்கிறார்கள் (Mint). ஆரம்பக் கல்வி முதல், மேலே, உச்சிவரை இதுதான். இதில் ஆசிரியர்கள் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை (Syllabus) கைமாற்றுபவர்கள். அவ்வளவே.


அவன் மாணவன்/மாணவி அல்ல. நுகர்வோன் / நுகர்வோர். அவ்வளவே. இந்த அடிப்படையில் மாணவன்/மாணவி ஆகியோர் கட்டப்பட்டுள்ளனர்.

இந்த விநாடிகளில், Valentine’s day limited period offer! Enjoy BSNL full talk value..... இது BSNL- ல் sms.

BSNL என்பது அரசு நிறுவனம்; வணிக மயமாதல், தனியார் அமைப்புடன் போட்டி! விளைவு, அவர்களின் மேலாண்மையில் 10 வயது மகன்/மகளிலிருந்து, 70 வயது பாட்டி கையில் இருக்கும் கைபேசியில் காதலர் தினம் offer பதிவு செய்யப்பட்டு, வாசிக்கப்பட்டிருக்கும். Post Modern கலாச்சாரம். இதில் உமாமகேஸ்வரி மிஸ் தன்னை,ஆசிரியையாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டார். அவரிடம் நுகரவந்தவரை மாணவர் என்று தவறாகக் கணித்துவிட்டார். (எல்லோரையும் அப்படித்தான் கணிக்கிறார்கள்). அவர், ஆசிரியர், மாணவர் என்ற உறவில், ஒருவருக்கொருவருடனான உறவிலிருந்து செயல்பட்டார். செயல்படுகிறார்கள்.

நுகர்வோன், தன் நுகர்வுப் பொருளை கைமாற்றுவோரின் விரும்பாத நடவடிக்கையால் - மதிப்பெண்கள், வருகைப்பதிவு - தந்தையிடம் புகார். அதைவிட நுகர்வோனுக்கு நல்உபதேசம்.
இப்போது, நுகர்வோனின் இன்பப்பெருக்கு (Jouissance) காயடிக்கப் பட்டுவிட்டது (castrated ), rejection / denial.

ஆசிரியர்/ஆசிரியை அதிகாரத்தை (Phallus) உடையவர்களாக, மாணவனில், அவன் அகத்தில் கட்டப்பட்டிருந்தால்; கலாச்சாரத்தால், இவனைத் தங்களின் நீடிப்பாக மட்டுமே பார்க்கும் சுயமோகப் பெற்றோர்களால் இவனுக்கு மரியாதை, கீழ்படிவு வந்திருக்கும்.
[அரசு கூட, மாணவர்களைக் கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒழுக்கப்படுத்தவும் (சமூகத்திற்காக) ஏற்கனவே இருந்த அதிகாரத்தைப் பறித்துவிட்டது ].

சுயமோகப் பெற்றோருக்கு இன்றைய காலப் பிள்ளைகள் Precious Child. அதாவது ஒரு பிள்ளை அல்லது இரு பிள்ளைகள். ஆகவே, வேட்டையாடு ! விளையாடு ! ஆனால் மதிப்பெண்கள் முக்கியம். சுயமோகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கான Symbolic role-ஐக் (கலாச்சார, மொழி, முன்மாதிரியான பெற்றோரிய நடத்தை)கூடச்செய்யாமல் குழந்தைகளிடம் (கேட்டதெல்லாம் கிடைக்கும், தன்னைப் பற்றி மிகுமதிப்பீடு, அரியவன்/ள் என்ற உள்வாங்கலுக்கான வசதி செய்து கொடுப்பது) அவன்/அவள் தன்னை மாபெரியஆள் ( Grandeur self) என்ற எண்ணம் உருவாகக் காரணமாகி விடுகின்றனர்.

இங்கு பெற்றோருடன் மற்றொரு பெற்றோரின் முக்கியத்துவம் மிக முக்கியம். அதுதான் சின்னப்பெட்டி,TV என்ற தொலைக்காட்சி. இங்கிருந்துதான் தன் Ideal ego-ஐ (லட்சிய அகன்), தன்னை ஐஸ்வர்யாராயாக, விஜய்-யாக, மானாட மயிலாட, உங்களில் ஒரு பிரபுதேவா,நீயா நானா?-கோபியாகவும். இப்படிப் பலவாக, லட்சியப் புருஷி/ புருஷர்களுடன் லட்சிய அகனைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் திருமதிக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை அவரின் ஒழுக்கம், கடமை, நேர்மை என்ற விழுமியங்களால் (Super ego) கட்டப்பட்டவராக இருந்திருக்கக்கூடும். குற்றம்/குறை கண்டவுடன் (பேரகனின்) Super ego-வின் உந்தலானது (drive) Ego -வின் தற்காப்பையும் மீறி செயல்பட்டு, அந்த அவனின் நல்லதற்காக, திருத்த எடுத்த முயற்சியை அவன் இன்பப் பெருக்கு (Jouissance) காயடிக்கப்பட்டதாக, (castrated) காயம்பட்டுவிடுகிறான் (affect). (வேறுமாதிரி அவன் மாணவனாக கட்டப்படவே இல்லை; காசு கொடுத்து வாங்கும் கல்வி, அவன் நுகர்வோனாகவே உருவாக்கப்பட்டவன்). விளைவு ! மோசம்.


“திவசக்குருக்”களான Mass Media –க்களுக்கு தீனி கிடைத்து, கொலை, குற்றவாளி, அப்பா, அம்மா மோசம் ; இத்தியாதி. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு திவசம் முடிந்துவிட்டது. இனி அடுத்த திவசத்திற்குத்தான் எல்லோரும் பங்கேற்பர்.

உலகமயமாதல், கல்வி வணிகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம், தாராளமயமாக்கல், அனைத்தும் வழமைபோல். எல்லோரும், இலவசம், offer-க்காகக் காத்திருப்போம். எத்தனை வாய்தாக்கள்; எத்தனை கோடிகள்; கேட்பாரற்ற கொள்ளை; எல்லாம் ஈஸ்வரன் செயல்.

11 Feb 2012

ஐ.ஐ.டி யின் காப்புரிமைகளும்.. தற்கொலைகளும்.



இப்போது ! 
ஐ.ஐ.டி-யின் துறைத்தலைவர், Dr. M. கோவர்தன்.
“நீங்கள் ஏன் ஐ.ஐ.டி சென்னை குறித்து எப்போதும் எதிர்மறையான செய்திகளையே வெளியிடுகிறீர்கள். இப்பல்கலைக் கழகத்தில் அதிகமான patent-கள் (காப்புரிமை பெற்ற மாதிரிகள்) உள்ளன. அதுபற்றி செய்தி எதுவும் வெளியிடுவதில்லையே ஏன்?
5000 மாணவர்களில் 3 பேர் இறந்து விட்டால் அதுபற்றி செய்தி வெளியிட விரும்புகிறீர்களே. ஏன்?
புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ”
இந்த மனப்பதட்டம் (anxiety) சுயமோகம், நோய்க்கூறு வகைப்பட்ட சுயமோக அதிர்வுக்குக் காரணம், சென்னை ஐ.ஐ.டி-யில் M.Tech மாணவர் நிதின்குமார் ரெட்டி தற்கொலை பற்றி (தற்கொலை செய்து கொண்ட நாள் 4-5-2011) செய்திகளை வெளியிட்டதுதான். அந்த ஊடகங்களை நோக்கித்தான் பல்கலைக் கழக துறைத்தலைவர் மேற்கூறிய மொழிதலைச் செய்தார்.

அதிக காப்புரிமையும் 3 பேர் தற்கொலையும் என்பது... புள்ளி விபர அடிப்படையில் இந்த எண்ணிக்கை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை. கணக்குத் தெரியாத இந்தத் தன்னிலைக்குக் கூட விளங்க வைத்து விட்டீர்கள். பேராசியரே நன்றி.
ஆனால், உயிர்கள் புள்ளிகளாக, நிகழ்தகவு அடிப்படையில் மாற்றியிருக்கிறீர்களே! எண்களும் உயிர்களும் சமச்சீரற்றதே.

இந்த உங்கள் சமச்சீராக்கம் மனஅலசல் ஆய்வில் ஒரு மனிதனுள் எப்போது நடைபெறும் என்றால் சுயமோகம் (narcissism) தலைவிரிக்கும் கணத்தில் நடைபெறுகிறது நனவிலியாக  (unconscious). 
" The system unconscious selectively treats the converse of any relation as identical to it. It treats logically asymmetrical relations as if they were symmetrical"
…" The process of selectively ignoring certain asymmetrical or difference relations is called symmetrization.” - 'Matte Blanco'.
..." symmetrization suggests a move into greater simplicity. It can thus thought of as a slippage or regression into crudity which can then suggest an evasive or avoidant activity…"
-Unconscious logic, Eric Eayner.
3 உயிர்களை, புள்ளிகளாக மாற்றியதின் மூலம் ஒரு மறுத்தல் (negation) எவ்வளவு எளிதாக நிகழ்கலையாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலையின் ஆளுமை பற்றி அரங்கக் கூட்டம் போட்டு இந்தியாவெங்கும் பேசக் கூடியதுதான் இது.

சுயகொலைக்கு முன் அந்த மாணவர் பட்ட அவஸ்தை, வலி எத்தகையது?  பின் அவரின் உறவினரின் இழப்பு? 

ஐ.ஐ.டி-ன் காப்புரிமையில் (patent right), இந்த (சுயமோக) சமச்சீரற்றதை, சமச்சீராக்கும் வித்தையை (Technic) சீக்கிரம் காப்புரிமை பெற்று  ஐ.ஐ.டி-ன் காப்புரிமை புள்ளிக் கணக்கில் ஒன்றைக் கூட்டுங்கள்.

இப்போது, மற்றொரு சமச் சீராக்கத்தை (symmetrization) யும் பார்க்கலாம்.
அது,  அந்த  மூன்று உயிர்கள் பற்றிய ஊடகங்களின் அக்கறை வெளிப்பாட்டை; அதிக காப்புரிமைகளை விட அந்த உயிர்கள் ( மதிப்புக் கூட்டப்படாததால் ) அற்பம் என்று ஊடகங்களால் சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டது.

அதிக காப்புரிமைகளின் அடியில் ஒளிந்திருப்பது உங்களின்  Imaginary.  சர்வவல்லமை / ஆண்டவர், (omnipotent narcissism).  அதுதான் உயிர் பற்றிப் பேசும்போது காப்புரிமையைப் பேசி உவகை கொள்கிறது உங்கள் சுயமோகம்.

சமச்சீராக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள Clinical finding  ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. (சற்று மனச்சிதைவுக்கு உள்ளான ஒரு நோயாளியின் கூற்று):
"சிறையில் உள்ள ஜன்னல்களுக்கு கம்பிகள் உள்ளன. எனது அறையில் உள்ள ஜன்னல்களிலும் கம்பி உள்ளது, எனது பைஜாமாவில் கோடுகள் (Stripes) உள்ளன..... சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக நான் என் பைஜாமாவைக் கிழித்தெறியப் போகின்றேன்".