24 Sept 2015

கண்ணாடிப் பாவை

குறுந்தொகை
[ ஆலங்குடி வங்கனார் மருதத்திணையில் காதற்பரத்தைக் கூற்றாக எழுதிய குறுந்தொகையின் எட்டாவது பாடலானது, அதன் குறியீட்டுத் தன்மைக்காகத் தொடர்ந்து சுட்டப்படுகிறது. பறிப்பதற்கு ஆளில்லாமல் கனிந்து தானே விழும் பழமும், அதனைக் கவ்விக்கொள்ளும் வாளைமீனும்,  காதற்தலைவனின் வளமான ஊரினைக் குறிக்கும் குறியீடாகவே புரிந்து கொள்ளப்பட்டு, காலகாலமாக படிக்கப்பட்டும் வருகிறது. மாறாக, இங்கு ’குறியீடானது ஒரு கருத்தை வெளிப்படுத்த பயன்படுகிறது. இக்கருத்து மறைமுகமானது ( hidden) / நனவிலி , அல்லது Reserved ; மேலும் அதன் மூலம் ஒடுக்குதல் பற்றி புரிந்துகொள்ளமுடியும்’ என்கிற எர்னஸ்ட் ஜோன்சின் விளக்கத்தின் வழியாக, வழமையான இப்பாடலின் பொருளினைக் கட்டுடைத்து அப்பாடலின் குறியீட்டினையும் அதன் நுணுக்கமான செயற்பாட்டினையும் விளங்கிக்கொள்வதற்கான ஒரு எளிய முயற்சி. …… விநாயகம் ]
பாடல் : -
              கழனி மரத்து விளைந்துகு தீம்பழம்
              பழன வாளை கதூஉ மூரன்
              எம்மிற் பெருமொழி கூறித் தம்மில்
              கையுங் காலுந் தூக்கத் தூக்கும்
              ஆடிப் பாவை போல
              மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
                                                       -ஆலங்குடி வங்கனார்.


பாடலின் துறை - ‘ கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக்கேட்ட காதற்பரத்தை,
அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது ’; அதாவது, தன் காதலனுடைய மனைவி தன்னைப் பற்றி தவறாக பழித்துக் கூறினாள் எனக் கேள்விப்பட்ட காதற் பரத்தை, மனைவிக்கு நெருக்கமாக உள்ளோரின் காதில் விழும்படி அவளை ( மனைவியை ) பழித்துக் கூறியது.

பாடலின் பொருள் -

வயல்வெளியில் உள்ள மரத்தில் விளைந்து பறிப்பதற்கு ஆளில்லாமல், கனிந்து தானே விழுகின்ற பழங்களை, அவ்வயல்வெளி நீரில் உலவித் திரியும் வாளைமீன்கள் கவ்விக் கொள்ளும் இடமாகிய ஊரை உடைய தலைவன், என்னுடைய வீட்டில் என்னை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று, அவனுடைய இல்லத்திலோ அவன் மனைவி கையைத் தூக்கினால் தானும் கையைத்தூக்கும், அவள் காலினைத் தூக்கினால் தானும் காலினைத்தூக்கும் கண்ணாடிப் பாவை போல் அவள் விரும்பினவற்றைச் செய்பவனாக உள்ளான்.  [ ஆதாரம் : குறுந்தொகை – உ.வே.சா. பதிப்பு ]
1)       “ வயல்வெளியில் உள்ள மரத்தில் விளைந்து பறிப்பதற்கு ஆளில்லாமல் அப்பழங்கள் கனிந்து தானே விழும். அதனை.......” என்பது Erotic Object.
பரத்தை தன் Being -யை உருவகம் மூலம் கட்டமைக்கிறார்  (constitute) . எப்போது?
2)       “  என்னுடைய வீட்டில் என்னை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக் ” கூறி....
அது தொடரவில்லை. ஆனால் முற்றுப்பெறுவது அவன் மனைவியிடத்தில் கண்ணாடிப் பாவை குணாம்சம் உள்ளவனாக இருக்கிறான்.
       அதாவது பரத்தையிடம் பெருமொழிகள் கூறி “ அவளின் ’எதிர்பார்ப்பை ” , அவளின் அங்கீரிப்பிற்கான ஆசையை Symbolic castration பண்ணிவிடுகிறான்.
       மொழியாய் / பொய்யாய் ஏமாற்றி விடுகிறான்.               
       இங்கு பெருமொழி என்பது  “  Exchange  is communication , itself of words, the gift of speech “.        
      இது மொழியியல் பரிமாணம்.
       பரத்தையின் எதிர்ப்பார்ப்பை  /  ஏற்பு ஆசையை காயடிக்கிறான். ஏனெனில்       Symbolic order  என்பது சமூக விதிகளாலானது. அது Kinship Relation - யும் பரிவர்த்தனையையும் ஒழுங்குபடுத்துகிறது. இதில் மொழி, கலாச்சாரம் அடங்கும்.             அதற்குப் பயந்து , உறவில் திளைத்து வாய்மொழியால் அவளைக் காயடித்து விட்டான் எனலாம்.
       பழம் என்பது குறிப்பான் / பரத்தையாகும்.
       இப்போது , மேலே கண்ட கட்டுடைப்பிற்கு காரணமாக இருந்த எர்னஸ்ட் ஜோன்சின்  Theory of symbolism -ல்  “ குறியீட்டியல்  ( Symbolism ) ஒரு கருத்தை வெளிப்படுத்த பயன்படுகிறது. இக்கருத்து மறைமுகமானது ( hidden ) ரகசியமானது, அல்லது Reserved ; மேலும் அதன்மூலம் ஒடுக்குதல் பற்றி புரிந்து கொள்ள முடியும்  “ என்கிறார்  ( Gerard Amiel )
       ஜோன்ஸ், குறியீட்டின் பொதுத்தன்மையில் முக்கியத்துவம் கொடுப்பது Substitution ( பதிலி ) என்பதைத்தான். மேலும் அவர் கூறுகையில் “ பதிலியை
( substitution) மனிதச்செயல்பாடுகளின் மையத்தில் இருத்துகிறார் ”
        [ உருவகம் குறிப்பான்களின் பதிலியாக (substitution) இருக்கிறது என்பது கவனத்திற்குரியது. ]
.      இங்கு, “ மரத்தில் தொங்கும் பழம் ” பரத்தைக்கு ( குறிப்பான் ) பதிலியாக வருகிறது.
       பரத்தையின் இந்த உருவப்பாட்டானது மற்றமையால் வந்தது
       மற்றமை என்றால்
       பரத்தையின் மாற்றத்திற்கு காரணம்  ( The Other’s effect )  இதரரின் விளைவு
        “ தன் காதலனின் மனைவி தன்னைப் பற்றி தவறாக பழித்துக் கூறினாள் எனக் கேள்விப்பட்ட பரத்தை….. ‘effect-’க்கு உள்ளாகிறாள்.
மனஎழுச்சித் தடை ( Affective Inhibition ) ஏற்படுகிறது.
       இந்தத் தடை “  உளவியலாக , இயல்பூக்கம் ( instinct ) பிரக்ஞையாக வெளிப்படுத்துவதற்கான தடை ( Inhibition ) அதன் உச்சத்தில் இருக்கும்பொழுது அங்கு குறியீடாக்கம் ( Symbolism )  அதன் மிகக் குறிப்பான் வடிவத்தில் ( in its most typical form) உருவாகிறது ”  – Ernest Jones
                இங்கு  இக்கட்டுரைக்குத் தேவையான அளவே அவரின் கோட்பாடு கையாளப்படுகிறது.
       ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
குறியீடாக்கத்தின் இரண்டு அடிப்படைப் பண்புகளாக உள்ளவை ;
1)       குறியீடாக்கம் முற்றிலும் நனவிலியானதாகும். பரத்தையின் இயலாமை குறித்த ப்ராய்டின் அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது ( அவ்வளவே )
       இது பற்றி ஜோன்ஸ் கூறுகையில் “ What Lacan  calls a symbolic Identification with an Ideal Ego“ என்கிறார் .  ( அதே கட்டுரை )
       பரத்தை இப்பாடலில் தன்னை “ மரத்தில் பறிப்பதற்கு ஆளில்லாமல் பழுத்த பழமாக “ ( மொழியில்  ) குறியீட்டு அடையாளப்படுத்திக் கொள்கிறாள்.
       இதுபற்றி ஜோன்ஸின் கோட்பாடு கூறுவது ......” குறியீட்டு அடையாளப்படுத்- துதல் (Symbolic identification) என்பது எப்போதும் ( ஒரு அடையாளப் படுத்தலாகும் ). சமூக-தன்னிலைகளுக்கிடையிலான தளத்தை (social- inter subjectivity space)   அடையாளப்படுத்துதல் ஆகும். இத்தளத்திற்குள் ஒரு தன்னிலை அதன் நிரந்தரமான கற்பனை அடையாளங்களை ஏற்க முடியும் “  ( அதேநூல் ).
        இங்கு பரத்தையின் நிரந்தரமான கற்பனை அடையாளமாக “ பறிப்பதற்கு ஆளில்லாத பழங்களாகும் ”
       இங்கு ‘ பழம் ’ என்ற வார்த்தை மனஅலசல்படி குறிப்பீடாகாது. அதுகுறிப்பான்
 (Signifier metaphor) உருவகமாகும்.
       அந்த உருவகம் அந்தப் பரத்தைக்கான ‘  பதிலி ’ யாகும்.
       ஜோன்ஸ் பதிலியை ( substitution ) மனிதச் செயல்பாடுகளின் மையத்தில் இருத்துகிறார்.
       “ உருவகம் ( Metaphor ) பதிலியாக (  substitution of signifier ) குறிப்பிடாமல் இருக்க முடியாது என்கிறார்.” - Gerard Amiel ( On Ernest Jone’s Theory of Symbolism)       இறுதியாக “ குறியீட்டியல் ஒரு கருத்தை வெளிப்படுத்த பயன்படுகிறது. இக்கருத்து மறைமுகமானது ( hidden ) / நனவிலி , அல்லது Reserved ; மேலும் அதன் மூலம் ஒடுக்குதல்    பற்றி புரிந்துகொள்ளமுடியும்” என்கிறார்.
      
பரத்தையின் தன்னிலை தன்னின் அந்நியமாதலையும், சமூகத்திற்குப் பயந்து தன் காதலன் தன்னை “ மனுஷியாக ” ( இப்போதுள்ள நிலை Sexual  Object       மட்டுமே ) அங்கீகரிக்க மறுப்பதையும் நனவிலி ஆசையாக ‘ அங்கீகரிப்பின் ’ கோரிக்கையாகவும் வெளிப்படுகிறது.. இப்பாடலின் காலம் தெரியவில்லை. ஆனால் பெண்மையின் சமூக அங்கீகர்ரம் தனிமனித நிலை சார்ந்தது இல்லை. அது சமூக , கலாச்சாரத்தால் நனவிலியாக காலம் காலமாக தொடருவதை அவதானிக்கலாம்.
                மேலும், சமூகம் , பரத்தையின் பயன்பாடு இருப்பதால்தான் அவளை புறத்தில் சேர்ந்து வாழ அனுமதிக்கிறது . அதேபோழ்தில் அவளை ஒரு எல்லையில் - அவள் உரிமையை - நிப்பாட்ட புறனுரைப்பை மற்றமை பயன்படுத்துகிறது எனலாம்.
க.செ
21-9-2015

12 Sept 2015

எங்கே போயிற்று மனிதாபிமானம் ?





Why the Indians are not ready to allow the Syrian Refugees?

    What happened to Humanity?

-Mattramai

11-9-2015




Not  a Christian or Jew or Muslim, not Hindu, Buddhist, Sufi or Zen, Not any religion... first, last, outer, inner, only that breath breathing human being.
-  Persian  poet  Rumi



5 Sept 2015

கல்புர்கி போய்வாருங்கள்..

கல்புர்கி போய்வாருங்கள்..  இனியாகும் சமூகத்திற்கு வித்தாக வாருங்கள்.
                “  சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி ( 77 ) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
       இந்தச் சம்பவம் தொடர்பாக இந்துத்துவா அடிப்படைவாதிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்……     
       .....மறைந்த ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் நண்பரான கல்புர்கி தொடர்ந்து மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களைப் பேசி வந்தார். இது மட்டுமில்லாமல் கர்நாடகாவில் மூடநம்பிக்கைக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்….


………..இதனால் பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. தார்வாட் மாவட்டம் கல்யாண் நகரில் உள்ள கல்புர்கியின்  வீட்டின் முன்பாக திரண்ட இந்துத்துவா அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர் ”. – தி இந்து. 31-8-2015
       இந்துத்துவா அமைப்பு 74 வயதான கல்புர்கிக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விட்டிருக்கின்றனர். யாருக்கு? சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர், ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், முற்போக்காளருக்கு . இந்த மிரட்டலை பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள், அப்பகுதி மக்கள்  pro  அரசியல்வாதிகள், இந்துத்துவாதிகளை இந்த Evil   (கொடிய) எண்ணப்போக்கு, மனித நாகரீகத்திற்கு தீங்கானதுதானே  என்று அந்த கொடிய பேச்சிற்கு செவிப்பறையை – மக்கள் கிழித்திருந்தால்.....?
        இன்று கல்புர்கி இருந்திருப்பார்தானே !   எவ்வளவு எளிதாக இந்துத்துவா போலீஸ் (காவலர்கள்) அவரை கொன்றுவிட்டனர். அவமானம் ! அவமானம் ! !
        
B J P  அரசு கொலையாளிகளான இந்துத்துவா காவலர்களை கண்டுபிடிக்கட்டும், அல்லது கண்துடைப்பு நாடகத்தை நடத்திக்காட்டி நுகர்வு கலாச்சார பிடியிலுள்ள மக்களுக்கு மகிழ்வூட்டட்டும். அது இங்கு பிரச்சனை இல்லை.
       இந்துத்துவாவோ, அதன் போலீஸ்காரர்களோ ஏன் இவ்வளவு அதீத உணர்ச்சிக்கு ஆட்பட்டு கொலை மிரட்டல், பின் கொலையும் செய்துள்ளனர்.
       சிறிதளவாவது பிரக்ஞை உணர்வு ( conscious ) அப்போது அவர்களுக்கு இருந்திருக்குமாயின் இந்த மிரட்டலும், கொலையும் தேவையா? அந்தத் தேவைக்கான புறவயக் காரணம் ஏதேனும் உண்டா ? என்று நானுணர்வு எண்ணியிருக்கும்.
       அவர்களின் தன்னகங்காரம் ( narcissism  ) பகுத்தறிவு, மூடநம்பிக்கைக்கு , ரூப வழிபாட்டிற்கு எதிரான கருத்து என்றவுடனே...மூர்க்கம் அறிவை மழுங்கடித்து வலுத் தாக்குதலுக்கான ( aggressivity ) உந்தலின் ( drive ) பிடியில் அத்தன்னிலைகள் – அவர்கள் -சிக்குண்டு Evil -ன் பரிமாணத்தை அடைந்து விடுகிறது.
       இந்த மூத்த குடிகளின் கொலை தெரிவிப்பதென்ன ? அதாவது மற்றமைக்கு / மக்களுக்கு , கலாச்சாரத்துக்கு , மொழிக்கு .
       தனிமனித சுதந்திரத்திற்கு இந்திய பீனல்கோடு ஒருபுறம் உத்தரவாதம் கொடுக்கிறது. யதார்த்தத்தில் அது....?
       “ சுதந்திரம், சுதந்திரமான தேர்வு என்பது (real ) சாத்யமற்றதாக உள்ளது ” .                                                - லெக்கான் 1970
       தனிமனித சுதந்திரம் சாத்யமற்றதாக இருக்கிறது என்பதற்கான சிறந்த எடுத்துக் காட்டுதான் ‘ கல்புர்கியின் ‘  கொலை.
       ஆக, இப்போது தனிமனிதர்களுக்கிடையிலான கிரிமினல் வழக்கல்ல இது. அடிப்படை உரிமை பற்றியது - மனித மாண்பு பற்றியது,
       ஆக , இது ஜனநாயகத்திற்கு எதிரான , அமைப்பு ரீதியான , மதவாத , தீய வெறிச் செயல் என்று புலனாகிறது.
       இப்போக்கை ஜனநாயகப் பாதையிலிருந்து அகற்றுவதுதான் உண்மையான ஜனநாயக அரசியல் போராட்டமாகும். இதை பகுத்தறிவாதத்திற்கு எதிரானது என்று குறுக்கிவிட முடியாது.
       லெக்கான் மொழியில் சொன்னால் :
       ( அந்த பெரியவர் ) “  நீ  தப்பான தேர்வை மேற்கொண்டால் ( தால்) நீ தேர்வு சுதந்திரத்தையே இழந்துவிடுவாய் ” என்கின்றனர். இங்கு கல்புர்கி தன் சுதந்திரத்திற்காக தன் உயிரையும் கொடுத்துவிட்டார்,
                              (  அவர் இனியாகும் சமூகத்திற்கு Ego Ideal )
       இப்போக்கு இந்தியா முழுவதும் ( உலகம் முழுவதும் கூட ) ஏதோ ஒருவகையில், மத அரசியல் போலீஸ் , சாதி அரசியல் போலீஸ் , இப்படி பலரகம். இதன் விளைவு , “  ஒரு தன்னிலையானது தன் சொந்த தேர்வுமுறையைச் சாராமல், அத்தன்னிலை அந்த சமூகம் அங்கீகரிக்கும் சுதந்திரத்தையே சுதந்திரமாக தேர்வு செய்ய வேண்டும் என்கிற உண்மையில் தான் ( formal freedom)  திணிக்கப்பட்ட சுதந்திரத்திற்கான சூழல் உள்ளது. அதாவது , அவள் , அவனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டதையே தேர்வு செய்ய வேண்டும் “ என்கிறார் லெக்கான்.
       ( மேற்கண்ட லெக்கானிய கோட்பாடு எவ்வளவு பாந்தமாக, அணிகலனாக இந்திய மாதாவிற்கு பொருந்துகிறது பாருங்கள் )
       கல்புர்கி போன்றவர்கள் ஏன் பகுத்தறிவாளர்களாக, மூடநம்பிக்கைக்கு எதிராக இருக்கிறார்கள் ? மூட நம்பிக்கை சமூகத்தின் ஆரோக்கியத்தைக் குலைக்கிறது ; மக்களை மதரீதியாக / சாதிரீதியாக பிளவுபடுத்துகிறது . அது சமூகத்தின் கொள்ளை நோய் என்று பகுத்தறிவாளர்கள் கருதுகின்றனர். ஆகவே, நோயற்ற சமூகத்திற்கான முன்னணியினர்தான் கல்புர்கி போன்றோர்.
       ஆனால் கொள்ளை பரப்பாளர்கள் , தேசீயம் என்றும், ‘ ஆதி ’  எல்லாம் பூரணத்துவம் என்றும், அவைகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்ற கற்பனை பிம்பத்தால் (  imaginary image ) கட்டப்பட்டுள்ளனர். கவர்ச்சியின் மூலம் தடம் புரண்டதாக ‘ அது ‘ உள்ளது.
       இந்துத்துவா / சாதீயம் போன்றவைகளின் தன்நோக்கு சிந்தனை ( subjectivity ) பற்றி அறிய லெக்கானின் துணை வேண்டும்.
   அதாவது ,  ‘ ஆதி ’ , தங்களின் சொந்த கருதுகோளை / பார்வையை இவர்கள் “ thing -ன்  (impossible – real )  ‘  மேன்மையான ‘ பிற என்ற தரத்திற்கு உயர்த்திக் கொண்ட பிறவாகும்”  (அவர்களின் கோட்பாடு / லட்சியம் )
   இந்த மேன்மையான பிற என்பது லெக்கானின் படி, “  மேன்மையானது ( sublime ) , (inner- ideology ) அகஉலகம் சார்ந்தது . புலனுணர்வு ( sensuous ) சார்ந்த பிறவைக்கும் , தத்துவம் கடந்த ( transcendent ) நிகழ்வியல் ( phenomenal ) கடந்த , அடைய முடியாத
( unattainable ) ஒன்றாக உள்ள  Thing-in-itself -  க்கும் உள்ள உறவை குறிப்பதாகும்  ” என்கிறார்.
   சுருக்கமாகக் கூறினால், எந்தக் கேள்விக்கும் , அறியலுக்கும் , அறிவுக்கும் அப்பாற்பட்டது அது , என்பதாகும்.
   அதை நோக்கினாலே - கேள்வி கேட்டாலே - வலுத்தாக்கலுக்கான Metro Goldwyn Meyer    சிங்கத்தின் உறுமல் செவிப்பறையை அடைக்கும்.
   ஆக, இம்மாதிரியான மேன்மைக் கவர்ச்சிக்கு உட்பட்டவர்களும்  மேன்மையானவர்கள்தான் என்ற அடையாளத்தால் கட்டுண்டவர்கள் ; சுயசிந்தனை  ‘ பாவம் ’ என்று கட்டப்பட்டவர்கள். அவர்கள் உணர்ந்தது , தெரிந்தது வழிபாடு மட்டுமே.
        ஆகையால் பகுத்தறிவுக் குரல் அவர்களின் எலும்பு மஜ்ஜயை உருக்கிவிடுகிறது. காயடிப்பு அச்சத்தால் , இந்துத்துவாவை காப்பாற்ற ( மக்களுக்கான என்ற சுய மயக்கத்துடன் ) வக்கிரம் எந்த சிந்திப்பிற்கும் இடமில்லாமல், Evil ஆக மாறி அழித்தொழிப்பு செயலை கருமமாக எண்ணி செயலாற்றுகிறது.
   இறுதியாக, இவர்கள் அநியாயத்தின் பின்புலமாக இருப்பது மற்றமையே ! அதாவது கலாச்சாரம் / மக்களின் மறைமுக ஆதரவும் இத்தீச்செயலுக்கு உரம் போடுகிறது. இந்நிலை தொடரும்வரை போராட்டம் ஓயாது......கல்புர்கிகள் ஓயமாட்டார்கள்.   அவர்கள் சமூகத்தின்               நல்வித்துக்கள்.
க.செ
4-8-2015