24 Jul 2019

சுற்றுச் சூழல் அல்லது சிக்கனம்.?

   Environment or economy. :  JULY 19 , 2019
      இப்படி கேட்பது போக்குவரத்து மந்திரி “ நித்தின் கட்காரி “
      “ 9 கிலோ மீட்டர் ரோடு போட ஆன செலவு ரூ.1300 கோடி.
      இடம் வயநாடு to மைசூர் ரோட்டில் உள்ள பன்திப்பூர் (BANDIPUR) வனவிலங்கு சரணாலாயத்தை காப்பதற்கா செலவான தொகைதான் அது. ஒரு ஏழை நாடு (இந்தியா) பொது மக்களின் (வரி) பணத்தை எப்படி செலவழிப்பது?
      சுற்றுச்சூழலை காப்பது அல்லது சிக்கனம் வேணுமா ?  நீங்களே முடிவெடுங்கள் என்று பாராளுமன்றத்தில் நம்ம ஊர் (இந்தியா) களை கேட்டுக்கொண்டுள்ளார்.
      தலைப்பு  THE HINDU  கொடுத்தது.


சிக்கனம் , பொருளாதாரம் , என்று குயிக்தியாக மந்திரி பேசியுள்ளார்.  இதில் தனக்கு ஓட்டு (ஆதரவு) வாங்க வேண்டும் என்பதற்காக திடீரென்று இந்தியா ஏழை நாடு (Poor Country  ) என்ற கண்டுபிடிப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
      சமீபகாலமாக இந்தியாவின் குறுக்கும் , நெடுக்குமாக 4 வழி , 8 வழி , 17 வழி சாலைகள் என்று கோடி , கோடிகளை செலவு செய்கிறார் , அள்ளி வீசுகிறார் , மக்கள் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமலே.
      இந்தியாவின் பொருளாதாரம் , தற்காப்பு , வான்வெளி ஆராய்ச்சி போன்றவைகளுக்கு , ஏழை நாட்டு அரசாங்கம் எத்தனை லட்சம் கோடி செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர் ?  ஏதேனும் பொது விவாதம் உண்டா ?
      நமது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முடிவுகள் , பொது விவாதங்கள் ஏதுமின்றி (பாராளுமன்றத்திற்கும் பட்டை நாமம்) மக்களுக்கு வெளியே ரகசியமாக எடுக்கப்பட்டு செயல்படுகிறது.
      இது பாராளுமன்ற ஆட்சியை புறக்கணித்து , மூலதன ஆட்சிக்கு நடைபாதை விரிக்கும் போக்குத் வெளிப்படுகிறது.
      கட்கரியின் பாராளுமன்றப் பேச்சு எந்த ஆய்வு முறையை அடிப்படையாய் கொண்டது ?
      இந்திய ஏகாதிபத்ய வல்லுனர்களின் கையில் , ஜனநாயகத்தை கொடுத்துள்ளனர். சுற்றுச் சூழலை கணக்கில் கொள்ளாமல் தான் தோன்றித்தனமா செயல்பட ஆதரவு திரட்ட கணக்கு காட்டுகிறார் மந்திரி .
      இந்திய விவசாயத்தையும் , விவசாயிகளையும் ஓட்டாண்டியாக்கி , தற்கொலைக்கு தள்ளப்பட்டு வருவதை மக்கள் மன்றத்தில் வைப்பதில்லை ,
      இது தேசிய வங்கிகளை சூறையாடிவிட்டு , இங்கிலாந்தில் ஜாலியான வாழ்க்கை நடத்தும் நிரவ் மோடி , விஜய் மல்லையா போன்றவர்களின் கோடி கோடிகள் அம்போ !  யார் பணம் அது ? மோடி ? நிதின் கட்காரி ? ?  இப்படி
      இந்திய விவசாயிகள் பாப்பராகி வீதியில் நிற்க்கும் பொழுது கூட அவர்களின் கடன்களை ரத்து செய்யவில்லை .  இது பற்றி மக்களின் கருத்து கேட்க யாரும் தயாரில்லை . இந்திய சுதந்திரமென்பது , பன்னாட்டு உற்பத்தி சூழலில் சுதந்திரமான சந்தை , சுதந்திரமான வர்த்தகம் , சுதந்திரமான விற்பனையும் கொள்முதலும் .
      எல்லாம் நிதின்கட்காரி கண்ணில் படாது , ஏனெனில் அவரின் ஆய்வு முறை பன்னாட்டு மூலதனதின் பால் பற்றுக் கொண்டதாகும் .  பார்ப்பதோ தரகு வேலை. உள் நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை சூழல் கண்ணுக்குத் தெரியாது.
      மோடி ஆட்சியில் சுதந்திரம் என்பது சுதந்திரமான மூலதனத்திரட்டலே.
      பாராளுமன்றத்தையே ஒரு சடங்காக மாற்றிவிட்டனர் இரண்டாம் முறை , மோடி ஆட்சி கட்டிலில் ஏறியவுடன் , ஏகத்துவ அரசியலை பேச ஆரம்பித்துவிட்டனர் .  பாராளுமன்றத்தில் அதை விவாதமாக்குவதில்லை .  அதே மாதிரி புதிய கல்விக் கொள்கை எந்த ஜனநாயக அமைப்பிலும் விவாதிக்காமலே , சர்வாதிகாரப் போக்கையே ஜனநாயகமாக மாற்றிவிட்டனர்.
      நிதின் கட்காரி முதலில் தன் ஆய்வு முறையையே , ஆய்வு செய்தால் தான் , பிறரின் கூக்குரல் அவர் காதில் விழும் .  
      இந்திய பூமியை ரோடு மயமாக்கிவிட்டாலே , ( 4 வழி , 6 வழி , 8 வழி , 17 வழி ) பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு விடுமா ?
      சமீபத்ய தேர்தல் நடத்தவே கழுதை மேல் ஓட்டு இயந்திரத்தை ஏற்றி மலை கிராமங்களுக்கு அதிகாரிகள் நடந்து சென்றனரே ?  அந்த மாதிரி கிராமங்களை தமிழகரசின் தரணியில் குட்டி ரோடு போட வைக்க வேண்டியதுதானே !
      மக்களின் தூக்கம் . . . . எதுவரை
      சிறு , சிறு நன்மைகளுக்காக (இலவசத்திற்கா) லட்சியங்கள் ஏதுமின்றி ஆள்பவர்களிடம் , அதிகார வர்க்கத்திடமிருந்து சில சலுகைகள் பெற்றுக் கொண்ட காரணத்தினால் நெறியற்று தீய சக்திகளுக்கு ஆதரவளித்து வரும் வரை , மக்கள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய் இருக்கும் வரை ஆட்சியாளர்கள் காளை மாட்டில் பால் பீச்சலாம் என்று சொல்லத்தான் செய்வார்கள்.
      இறுதியாக நிதின் கட்காரியின் கேள்விக்கு பதிலாக 21-ம் நூற்றாண்டிலிருந்து எடுக்காமல் , அவர்கள் விரும்பும் ஆதாரம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கூறப்பட்ட “ ஞானிகளின் “ கூற்றையே நம் பதிலாக கூறலாம் .
                              தைத்திரீய உபநிஷதம்
      “ மனித வாழ்வு வளம் பெற வேண்டுமானால் இந்த இயற்கை சக்திகளை வளம்பெறச் செய்ய வேண்டும் .  அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் .  உலகில் எத்தனை கோடி எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்துனைக்கும், உணவும், வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கை அன்னை தயாராகவே இருக்கிறார்.  ஆனல் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது.
மேலே குறிக்கப்பட்ட உபநிஷதம் விளங்காவிடில், நவீன நீதிமன்ற வழக்கிலிருந்து இரு சொல்லாடல்:
The Courts have to strike a balance and, thus have to approach the issue of conservation and human development as not an either/or proposition. How to resolve the two? In a manner when both can be bettered has to be the key to settle the debate. In Vellore Citizens Welfare Forum (case) supra the Supreme Court held that ‘traditional concept that development and ecology are opposed to each other is no longer acceptable’ and that sustainable development is the answer.                                               
Judgment of the High Court of Bombay regarding construction of a coastal road, Mumbai, Maharashtra, 16/07/2019
. செ.

11 Jul 2019

தேவை -- நச்சு முறிப்பான்கள்


தொடரும் ஆனவக் கொலைகளின் போக்கு தினசரி வாடிக்கையாய் உள்ளது.  பரவளான பேச்சுப் பொருளாய் சமூக வெளியில் இடம் பிடித்தமாய் தெரியவில்லை.

மீடியாக்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும், அமைப்பற்ற தலைவர்களுக்கு ஒரு பேச்சுப் பொருளாய் உள்ளது.
ஜல்லிகட்டுத்தடையை எதிர்க்கக் கூடியனத்திரளாகவோ அல்லது தண்ணீருக்காக காலிக்குடங்களோடு பெண்கள் திரண்டு பெருவழிச்சாலை, சாலை மறியலைப் போல எதுவும் நடந்திடவில்லை.
இதற்கு முக்கிய காரணியாய் இருப்பது சாதியம்.  இந்திய மக்கள் திரள் மனத்தில் சாதியம் நனவிலியாய் கோல்லோச்சுவதுதான்.

சாதியம் அகமண முறையாக, சடங்காக, குல தெய்வங்களாக, வளைகாப்பாக இழவாகவும், அதன் கருத்தியல் மற்றமையாக மொழியாகவும், மூச்சாகவும், பெரும்மூச்சாகவும் காத்திரமாக, கருவியாய் நிரந்தர இட ஒதுக்கீடாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

      இதனை கண்டிப்பவர்கள், எதிரிப்பவர்கள், தனித்தனி குழுக்களாய் கண்டண குரலாய் மட்டும் ஒலிக்கிறார்கள்.
      ஆனவக் கொலைக்கெதிராக கடுமையான புதிய கிரிமினல் சட்டங்கள் இயற்ற அரசாங்கங்களுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.  வரட்டும்.

      ஆனால் ஆனவக்கொலை தனிமனிதர்களின் வாழ்வில் தலையிடுகிறது, இனியாகும் வாலிபர்களுக்கு, - ஆண் / பெண்அச்சுறுத்துகிறது , மனித உறவுகளுக்குக்கிடையில் நச்சாக இயங்குகிறது .  அத்தோடு தனிமனிதர்களின் அடிப்படைச் சுதந்திரத்தை அச்சுறுத்தி, பறிக்கிறது.
      1947ல் நாடு சுதந்திரம் பெற்றது உண்மைதான்.  பெற்றது அரசியல் சுதந்திரமே.  சமூக சுதந்திரம் தனி மனிதர்களுக்கு கிடைக்கவில்லை.  இதற்கு மிகச்சமிபத்ய உதாரணம் பார்க்கலாம்.

      ஜூன் 30 – 2019யில் கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் ஒரு அண்ணன் (வயது – 25) தம்பியை ( வயது – 22) கொலை செய்கிறான்.  காரணம் தன் தம்பி சாதிவிட்டு அடுத்த சாதிப் பெண்னை காதலித்தால், தங்கள் சாதிக் கௌரவம் பாதிக்கப்பட்டுவிட்டதால், தம்பியையும், அவரின் காதலியையும் (வயது – 16) கொலை செய்து விடுகிறார்.
      அண்ணனும் தம்பியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள்.  இதிலிருந்து எந்த வர்க்க உணர்வும் கிடைக்கவில்லை போலும்.  ஆனால் சாதியத்தின் கௌரவமே அண்ணனை ஆட்டிப்படைத்து கொலைகாரனாக மாற்றிவிடுகிறது.  சாதியம் அண்ணனுக்கு உயிர் மூச்சாக தொழில் புரிகிறது.
      கொலையுண்ட இருவருக்கும் (ஆண் / பெண்) என்ன சுதந்திரம் இருக்கிறது கிடைக்கும் சுதந்திரம் பற்றி சிசாக் கூறுவதை சிறிது பார்க்கலாம்.  தனி மனிதனிடம் – தன்னிலையிடம் – எந்த சமூகத்தை சார்ந்ததோ அந்த சமூகத்துடன் தனியனுக்குள்ள – தன்னிலைத் – உறவில் அச்சமும் அவனிடம் பின்வருமாறு கூறுகிறது.   
      சரியானதை நீ தேர்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் உனக்கு தேர்வு சுதந்திரம் உண்டு உதாரணமாக, நீ சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும் அதாவது சூளுரையில் (Oath) நீ கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் , சூளுரையில் கையொப்பமிடுவதற்கு அல்லது கையொப்பமிடாமல் இருப்பதற்கான தேர்வு சுதந்திரம் உண்டு, நீ தப்பான தேர்வை மேற்கொண்டால் நீ தேர்வுச் சுதந்திரத்தையே இழந்துவிடுவாய் ” , என்கிறது சமூகம் . “ சிசாக் ”
      தம்பி தப்பான சுதந்திரத்தை ( வேறு சாதியில் திருமணம் ) தேர்வு செய்ததால் , தேர்வு சுதந்திரத்தையும் , உயிரையும் இழந்துவிட்டார்.  ஆக சாதி சமூகத்தின் தனி மனிதனுக்குரிய சுதந்திரம் அவனுக்கானதல்ல, அந்தந்த சாதி மனிதனாக வாழ மட்டுமே சுதந்திரம்.  இவர்களுக்கு வர்க்க சுதந்திரம் உண்டு  தன் சாதிவிட்டு திருமணத்திற்கான உரிமை கிடையாது. சாதியில் பிறந்த நீ அந்த சாதியின் மனிதானகத்தான் சாக வேண்டும் என்பது சாதியத்தின் ஆனையாக உள்ளது.  இப்போது கௌரவக் கொலை என்பது தனி மனிதப்பிரச்சினை இல்லை.  மாறாக அது சமூக அரசியல் பிரச்சினை என்ற பேருண்மை உணர்ந்தால் மட்டுமே சரியான சமூக அரசியல் தீர்வுக்கான காத்திரமான பாதை தெரியும்.
                                           க.செ