29 Nov 2018

ஐயப்பனும் தீட்டும்



            ஐயப்பனும் / தீட்டும் அதாவது (10 வயது முதல் 50 வயதுவரை) பெண்களும்.
                ஒரு நிகழ்வு ஒருவருக்கு எவ்விதத்தில் அர்த்தமாகிறது. அதனோடு இவருக்குள்ள ஈடுபாடு என்ன?,  அது அவரை எப்படி பாதிக்கிறது என்பதை பொருத்தே ஒரு நிகழ்வு ஒருவருக்கு யதார்த்தமாகிறது
            
    பாஜக + ஐயப்ப பக்தர்கள் +  ஐயப்ப பக்தர்களின் குருசாமிகள் இவர்கள் அனைவருக்கும் அந்த தீர்ப்பு ஒரு காயடிப்பு ( castration fear ) அச்சத்தை கொடுத்திருக்கிறது.
                பெண்களை ஐயப்பனின் 18ம் படியை கூடப் பார்க்கவிடாமல் கலகம் செய்வதும், நடையை சாத்துவோம் என்று (கோவிலை மூடிவிடுவோம்) என்று மிரட்டுவதும், இன்றைய நனவிலி அரசியலாக ஆகியிருக்கிறது.  இவர்கள் மனப்பீடிப்பு  (obsession ) நோயில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
                இவர்கள் ஐயப்பனை கடவுளாக மட்டுமல்லாமல் தங்களின் லட்சிய அகனாகவும் ( ideal ego ) கொண்டுள்ளதால் இது நடக்கிறது.
வக்கிரம் ,காயடிப்பு பயத்தோடவே நனவிலி உந்தலாக ஐயப்பனின் திருப்தியின் ( jouissance ) காவலனாக தன்னை கற்பனையில் இருத்திக் கொள்கிறது.மற்றமை மகிழ்வுக்காக(ஐயப்பன்) (Other )செயல்படுவதாக எண்ணிக்கொள்கிறது.
ஆகவே, போலீஸ் படையை எதிர்க்கும் ஐயப்பன் படையாக சித்தரிப்பும் உள்ளது.உட்ச நீதிமன்றம்,மாநிலஅரசு அதிகாரம் ஆகிய அனைத்தையும் புறக்கணிக்கிறது. அதாவது, வக்கிரம் காயடிப்பை (சட்டத்தை,ஒழுங்கை) மறுக்கிறது;உத்திரவாதத்தை மறுக்கிறது
 ( the pervert disavows castration).
                நம்பிக்கையானது மறைமுகமாக செயல்படுகிறது, அதாவது  கருத்தியல் அடையாளத்திலிருந்து (ideological identity) சிந்தித்தலை நீக்கிவிடுகிறது .கருத்தியல் நம்மீது பிடிமானத்தைசெலுத்துவதற்கு இது வழிவகுக்கிறது”-சிசெக்  .
                நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்பது கருத்தியல் ரீதியானதொரு இயங்கு நுட்பம் அல்லது பிரதிநிதித்துவ அமைப்பாகும்.
       இது சமூக, அரசியல் ரீதியான சடங்குகள் மூலம் செயல்படுத்தப் படுகிறது.  இந்த சடங்குகள் ஒரு கருத்தியல் செயல்பாட்டினை
(ideological  functions) கருத்தியல் ரீதியான அரசு சாதனங்கள் மூலமாக அங்கீகாரம் பெற வழி வகுக்கிறது.  அரசு சாதனங்கள் என்பதில் குடும்பம், ஊடகங்கள், தொழில் நுட்பம், மதம், உற்பத்தி முறை முதலானவற்றின் செயல்பாடுகளும் அடங்கும்.  இச்சாதனங்கள் ஒரு தன்னிலையைக் கட்டமைத்து, இயக்குகின்ற சமூகச் சூழல்கள் மற்றும் செயல்பாடுகளின் தொகுதியாகும்”, அல்தூசர்.
      இப்பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து, தினசரி / ஊடகங்களின் அரசியல் வெளிப்படையாய், காத்திரமாகவே செயல்படுகின்றது.  ஐயப்ப பக்தர்கள், பல ஊர்களில் இருக்கும் குருசாமிகளை உசுப்பிவிட்டு, ஒரு நெட் ஒர்க் வேலையைக் கூட செய்கின்றன.
      ஐயப்பன் கோவில் அருகே உள்ள பாஜக பக்தர்களின் கிளர்ச்சியை கண்டு போலீஸ் அச்சப்படுவதாகவும், சவால் என்றும் காட்டப்படுகிறது.
      அவர்கள் ஐயப்ப போராளிகள் என்ற நாமகரணம் சூட்டாதது ஒன்றுதான் பாக்கி.
      ஐயப்ப அரசியலில் முதன்மையாக உள்ளது ஐயப்பன் ஒரு பிரம்மசாரி, மற்றும் பெண்களின் தீட்டு.
      இதில் பிரம்மசாரியம் கேள்விக்குட்பட்டுவிடும் என்ற அச்சம் (காயடிப்பு) முதன்மையானது.
      அதாவது அது பால் உறவு, பால் கவர்ச்சி சம்பந்தப்பட்டது.  ஐயப்பன் இதெல்லாம் கடந்த நித்ய புருஷர்தானே! பின் ஏன் கவலை. மேலும் ஆண்டவன் படைப்பில், பெண் சுயாட்சிச் தன்மை, திறன் ஆகியவை இரண்டாம்பட்சமாகவா இருக்கும்!.
      பெண் மறுப்பாளர்களின் நனவிலி மனம் மனுதரும சாஸ்திரம் என்பதிலிருந்து புறப்படுகிறது.
      மாதர்களின் சுபாவமே மனிதர்கட்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தை உண்டுபண்ணும். -  மனு 2:213.
       மாதர்கள் கற்புநிலை இன்மையும் நிலையா மனமும் நன்பின்மையும் இயற்கையாக உடையவர்கள்- மனு 9:15 (1919 பதிப்பில் உள்ளபடி).
      இந்த மனுதர்ம சாஸ்திரம் இன்றும் உயிரோடுதான் உலாவுகிறது.  ஒவ்வொரு மனுசங்க தோளிலும் வேதாளமாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. 
பெண்களின் மாதவிடாய் பெண்களின் இயற்கை.                  இது இவர்களுக்கு புனிதம் கெட்டுவிடும்,  தீட்டு.
      பெண்களின் சுயாட்சித்திறனை ஏன் குறைத்து மதிப்பிட வேண்டும்.  வீடுகளில் அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, மகள் இவர்களோடு வாழ்பவர்கள்தானே பெண்கள்.  சரி எது, தவறு எது, என்று தெரியாதா இவர்களுக்கு. அவர்களுக்கு ஆரோக்கியம் என்றால் என்னவென்று தெரியும், எப்போது என்ன செய்வது என்றும் தெரிந்தவர்கள் தான் அவர்கள். 
அவர்களின் சுயாட்சித் திறனை மதித்து ஆணாதிக்கத்தையும் வக்கிரத்தையும் விட்டுவிட்டு அவர்களின் வழியை மறைக்காமல் இருப்பதே ஆண் பெண் உறவின் ஆரோக்கியத்தை, உறவை வளர்க்கும்.
  




புனிதம் காப்போரே

இந்தியாவின் நம்பர் 1 பண முதலையான முகேஸ் அம்பானிக்காக இராமேஸ்வரம் இராமர் ஆலயத்தின் ஆகமவிதி மீறப்பட்டுள்ளது.
கோவிலில் உச்சி காலம் முடிந்ததும் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மதியம் 3.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.  
முகேஸ் அம்பானி மதியம் 12.55க்கு கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் முடித்து திரும்பும் போது மணி 1.50.  அதாவது நடை அடைக்க வேண்டிய நேரத்தில் பணம், அதிகாரம் (மோடி நண்பர் இவர்) ஆகம மீறலை நடத்துகிறது. புனிதம் பணிந்துவிட்டதா?
- தகவல் தினமலர் 28.11.2018. 
இவர்களிடமிருந்து ஆண்டவனை காப்பாற்றுங்கள், பெண்களிடமிருந்து அல்ல.
               

                                                                        க.செ