21 Oct 2018

“ நெறியின் அடித்தளம் மனித உரிமைகளாகும் ” -ALAIN BADIOU.


கேரளாவில், ஐய்யப்ப பக்தர் சங்கம் மனித குலத்துக்கு எது சிறந்ததுஎன்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலும் சுப்ரீம் கோர்ட்டுக்கு குட்டும் (தலையில்) வைத்துள்ளது.
      “ நூற்றாண்டு பாரம்பரியமான நடைமுறைக்கு முரண்பாடாகவும், லட்சக் கணக்கான பக்தர்களின் அடிப்படை உரிமையை பாதிப்பதாகவும், உள்ளது. எனவே இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும், ” என கூறப்பட்டுள்ளது
-          இந்து தமிழ். அக்டோபர் 9, 2018.
மேலும் ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்படும் நடைமுறைக்கு பெண் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. பகுத்தறிவு என்ற பெயரில் அத்தியாவசிய மத நடைமுறைகளில் தலையிட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.  -அதே தேதி இந்து
      ஐயப்ப பக்தர்களின் பிரதிநிதிகள்  (Spokes man) ஒன்றை , அன்றாட நடக்கும் ஒன்றை மறந்துவிட்டனர். “ கொத்தடிமைகளை, பல்வேறு வேலைப் பிரிவினையில் உள்ளவர்களை மீட்டெடுத்து அவர்களின் சுதந்திர வாழ்வுக்கு வழிகாட்டுவது இன்றும் கூட நடைபெறுகிறது.
      ஆகவே, மதச்சடங்குகளால் மட்டுமல்லாமல், ஆண் ஒடுக்கு முறையை வழமையாக ஏற்றுக்கொள்ளுமாறு கூறுகிற பரம்பரைச் சொல்லாடல் மொழியில் உள்ளவரை அவர்களுக்கு (பெண்கள்)  விடுதலைக் குரல் ஒலிக்காது
அதுவும்தீட்டுஎன்பது தீங்கானது, அசூசையானது என்ற வசியக்கட்டுக்கு உள்ளானவர்கள் அவர்கள்; நம்பூதிரிகளின் மாய மந்திரத்துக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த தன்னிலைகள் தானே அவர்கள்.
      அவர்கள் ஐயப்பன் அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்த விரும்புவார்களா?என்ன?
      ஐயப்பன் இருப்பிடம், வரலாறு, அவரைப் பார்க்க, அனுஷ்டிக்க வேண்டிய அனுஷ்டானங்கள், கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை என்று சொல்ல வேண்டிய அவசியம், இதெல்லாம் போக மலையாளிகளின் super star  ஆகவும் ஐயப்பன் இருக்கிறார்
மலையாளிகளின் /தமிழர்களின் ego ideal மற்றும் super ego- ஆகவும் உள்ளார்
கேரளாவின் எல்லைக்குள் முனுமுனுப்பு கூட ஓசையற்று எதிர்ப்பாகத்தான் இருக்கும்.
      பெண்கள் ஐயப்பனை சந்திக்க வருவார்களானால் கோவிலை (நடை) சாத்துவோம் என்ற அதிகாரக் குரலின் மிரட்டல் வெகு தொலைவுக்கு கேட்கிறது.
      சூப்ரீம் கோட்டின் தீர்ப்பு, ஐயப்ப பக்தர்களுக்கு காயடிப்பு அச்சத்தை ( castration fear ) கொடுத்துவிட்டது போல் தெரிகிறது.
      பதட்டம் குருத்தெலும்பிலிருந்து வருகிறது போல் இருக்கிறது.
      மலையாளத்தின் ஜனத் தொகையில் சரிபாதியினருக்கு உரிமை வழங்காமல் இருப்பதை நூற்றாண்டு காலமாய் மற்றொரு பாதியினர் அங்கீகரித்து வருகின்றனர், தங்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த உரிமையின் சுகம் போய்விடக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாய் உள்ளனர். இதில் எல்லா சாதி ஆண்களும் ஒரே  சாதியாய் ஆகியுள்ளனர்.
ஐயப்பன் கோவில் சாமி கும்பிடும் உரிமையை மறுக்கும் இந்த அகந்தை மனம் இந்தியாவின் தலித் விடுதலைக்கு குரல் கொடுக்குமா?அதற்கு,சாதியத்தை ஒழித்து கட்டவேண்டும் என்ற எண்ணம், ஆசை வருமா என்ன?
      ஐயப்பன் தளத்தின் பால் தன்மை, நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கிறது
பெண் உரிமை என்பது தீட்டு என்ற கருத்தமைவையும் சேர்த்துதான், அவர்களை ஒதுக்குகின்றனர்.அப்போது ஐயப்பன் என்பது நம்பிக்கை , பாரம்பரியம் என்று முன் வைக்கிறார்கள். ஆகையால் தீட்டு ஒவ்வாமையாகிறது.
      ஒழுக்க முறைமை என்பது எவ்வித விதிவிலக்கும் இன்றி ஒவ்வொரு தன்னிலையையும் நோக்கி விடுக்கப்பட்ட உள்ளார்ந்த நேரடி கோரிக்கையாகும்.
      இவர்கள் பார்க்கும் ஒழுக்கவிதி சரிபாதி ஜனத்தொகையை, (இந்தியா முழுக்க கோடிகளில் . . . ) கட்டுப்படுத்துகிறது, ஒழுக்க விதி கட்டளையாகிறது. 
ஒழுக்க விதியை மீறுவதற்கான நம் மனப்பாங்கை அங்கீகரிக்க வேண்டியுள்ளது.
      இந்தப்போராட்டத்தில் ஊழல் அரசியல் புகுந்து விளையாடுகிறது. மாறி மாறி துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
      சுப்ரீம் கோர்ட்டு இதை உரிமைப் பிரச்சினையாய் பார்த்து உரிமை வழங்கிவிட்டது.
      ஆனால், ஒழுக்க முறைமை என்று வாதிட்டால் அது மௌனமாகிவிடும்.  
      “ சட்டம் என்பதும் ஆசையை ஒடுக்குதல் என்பதைத் தவிர வேறல்ல ”,
      இந்த இடத்தில் லெக்கானின் மன அலசல் ஒரு தீர்வை முன் வைக்கிறது.
      லெக்கான் நெறியை (Ethics) முன் வைக்கிறார். இங்கு நெறி என்பது வழக்கமாக குறிப்பிடப்படும் ஒழுக்க விதிகளை அல்ல(விழுமியம் அல்ல). வேறு வேறு தளத்திலிருந்தும், குறிப்பாக தத்துவத்தளத்திலிருந்து இங்கு கொண்டு வருகிறார்.(இதுபற்றி விரிவாக இங்கு பேசமுடியாது).
      லெக்கான், நானுணர்விலிருந்தும் (ego) , மகிழ்வு அல்லது பரிவு கோட்பாட்டிலிருந்தும் தன்னிலையை (subject) வேறுபடுத்துகிறார்.
      இந்த நிலைப்பாடே நெறியாக (ethics) இருக்கிறது.மனித இயல்பு (human nature) அல்லது சிறந்தவை குறித்த முற்கோள்கள் நெறிகளின் அடிப்படையாய் தொடர்கிறது.
      தனியன்களின் சுயநலனை அல்லது நானுணர்வை மையப்படுத்தும் போக்கை (egoism) அனைவருக்குமான நல்லதுடன் எப்படி இணக்கப்படுத்துவது என்ற பெரும் கேள்வி எழுகிறது.
      இறுதியாக, நெறியை இப்படி வரையறுக்கலாம்.நெறி என்பது மனிதர்களாகிய நாம் சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதாகும் என்கிறார் லெக்கான்.
      நல்லது குறித்த பிரச்சினையை எழுப்புகின்ற அந்தத் தருணத்தில் நெறி துவங்குகிறது- லெக்கான்
      ஆகவே பெண்களுக்கான கோரிக்கையாக இது பார்க்கப்பட வேண்டும்.
      எது நல்லது? எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் எது நல்லது என்ற தேடலை ஆரம்பிக்கட்டும்(பெண்கள்),அனைவருக்குமான நெறி வெளிப்படட்டும்.
      விரும்புபவர்கள் பங்கேற்கலாம்.
                                                                        .செ.
           

       இந்த நிகழ்வு(event)
ஒரு புதிய சாத்தியத்தின் (creation)
துவக்கமாக உள்ளது.
 இது அதே மாதிரியானதல்ல.-Alain Badiou