ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒரு காலைப் பொழுதில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் , ஒரு பெண்ணை B.E படித்த வாலிபன் , கசாப்புக்கடைக்காரனாகி வெட்டி, சிதைத்து , கூறுபோட்டு விட்டான்.
முதலில் இதை கொலை வழக்காக ஊடகங்கள் பரைப்பு செய்தன.
பின்பு சாதி அரசியலை , அவர் சொன்னார் , இவர்
சொன்னார் என பரப்புரை செய்தன.
பின்பு குற்றவாளி பிடிபட்டார், தற்கொலைக்கு
முயன்றார் என்று பரப்பியது.
பின்பு ஒரு வக்கீலின் வக்காலத்து “ நான் அவனில்லை ” என்று.
அடுத்த நாள் அந்த வக்கீல் வாபஸ். வேறொரு வக்கீல் வந்து போலீஸ்
மேல் புகார். பின் இத்யாதி, பெங்களூர்,
வேறு தொடர்பு , என்று வதந்தி பரப்புதலும் நடந்தது
(எந்த நிரூபணமும் காட்டவில்லை).
[ EVENTS எல்லாமே
எழுச்சிப்படுத்தத்தான் ; எல்லாமே காட்சிப்பொருளே ; விற்பனைக்கானதுதான் ]
கொலை நடந்த பின் “ ஒரு தலைக் காதல் ” என்றது T.V
கலாச்சாரம்.
ஒருவன் தனக்கு பிடித்த பிம்பத்தை
( நபரை ) தானே காதலித்துக் கொண்டு ,அந்த நபர் ( பிம்பம் ) காதலிக்கவில்லை என்றால் அது ஒரு
தலைக்காதலா ? தன் விருப்பத்தை தானே காதலிப்பது – விருப்பப்பட்ட நபர் மறுத்தால்
காதல் தோல்வி என்று கொலை செய்வது.
கொலைகாரனைப் போலவே ,அந்தப்
பெண்ணிற்கும் உணர்ச்சி உண்டுதானே ! சுயமரியாதை உண்டு, சுய கனவுகள் , வாழ்வின் மீது
லட்சியம் உண்டு என்பதை சாதிய கலாச்சாரம்தான் உணரவில்லை என்றால், முதலாளிய ,ஜனநாயக,
பிந்தய கலாச்சாரமும் உணரவில்லை.
சுயமோக
வெறிக்கு மறுப்பு ( negation ) வந்தவுடன், மிருகஉணர்ச்சிக்கு அடிமையாகி, வலுத்தாக்குதலுக்கு வீச்சறுவாலைத் தூக்குகிறது. இது
காதல் நோயினால் மட்டுமல்ல; இது தன் சுயமோகம் அங்கிகரிக்கப்படாததால் ஏற்பட்ட
( affect ) / மனக்காயம் ( trauma ).
இந்த மனக்காயமானது சுய மதிப்பைக்
கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. இம் மனக்காயத்தை
(affect)
எப்படியாவது சரி செய்வதற்கான மார்க்கங்களில் ஒன்றாக Evil –ஆக (கொடியதாக) மாறி , காரியமாற்றி
தன் சுயமோகத்தை திருப்தி செய்வதாகும்.
இந்த மாதிரி
நபர்களுக்கு அவர்களின விருப்பப் பொருள் ( object love ) தன் நிபந்தனைக்குட்பட்டதாகவே
எப்பவும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடித்தளமாக கொண்டே காதலை , உறவைப் பார்ப்பது.
தன் காதலுக்குரிய அந்த
ஆசைப்படு பொருள் (object love) ஒரு தன்னிலை (subject ) ; உன் காதலை ஏற்கவோ / மறுக்கவோ அதற்கு முழுச்
சுதந்திரமுண்டு. அந்த சுதந்திரத்தின் மீது நீ உரிமை கோர முடியாது , அடிமைப்படுத்த
முடியாது. உனக்காக , உன் வீச்சறுவாலுக்காக
உன்னை ஏற்றால் அவள் சுயமரியாதை கேள்விக்குள்ளாகும். அந்தத் தன்னிலை தன்னை இழந்து விடும்.
ஆக , காதலை
இனியும் தனிமனிதப் பிரச்சினையாகப் பார்காமல் உயர்நிலைப் பள்ளியிலிருந்தே மனம் ,
வசியம் , சுயவசியம் , காதல் போன்றவற்றிற்கு கலந்தாய்வும் (counselling ) வேண்டும்.
அதில் sexuality பற்றிய அறிவும் மாணவர்களுடன் பகிர்ந்து
கொள்ளப்பட வேண்டும் .
இறுதியாக , மற்றொன்று . கொலை செய்யப்பட்ட நேரமும், கொலைக்களமும் இரவல்ல. கொலை ரகசியமாகவும் நடக்கவில்லை. மாறாக , நூற்றுக்கணக்கில் ஆணும் பெண்ணும் குழுமியிருந்த இடத்தில், நேரத்தில்
கொடூரம் நடந்தேறியிருக்கிறது.
உறை பனியில்
(தங்கள் உயிர் பயத்தில் ) உறைந்து கொடூரத்திற்கு மவுன சாட்சியாக மட்டுமே இருந்திருக்கிறனர்!
ஏய் ! ஏய் !!
விட்டுடா !! என்றாவது மொத்தமாக சப்தம் எழுப்பியிருந்தாலும், அது ஒரு
எதிர்ப்பாகவும் , மிருகத்திற்கு ஒரு அவசரத்தை கட்டாயப்படுத்தியிருக்கக் கூடும்.
பொதுப்புத்தியை ,
கொடூரன் உணர்ந்திருக்கின்றான். இதே மாதிரி
திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் கடைவீதியில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தில் தகராறு ; பேச்சு
முற்றி தள்ளுமுள்ளு. வந்தனர் சீருடைக்காவலர். லத்திக்கம்மால் மாட்டை அடிப்பது போல்
அடித்து , ஓட, ஓட, கத்த, கத்த, அங்கேயும் உறைபனி. கடைவீதி / அங்காடி அமைதியாக
கவனித்துக் கொண்டிருந்து . சீருடை லத்திக்கம்பு
சிலம்பு விளையாட்டை , பரப்புரை செய்தது T.V. உள்ளுர் ஆட்டோ சங்கம் மட்டும் ஒரு வேலை
நிறுத்தம் . தமிழ் அரசியல் கட்சிகளின்
கணக்கில் இது வரவு வைக்கப்படவில்லை.
க.செ.