திரு.
மோடி
or
Mr.
Prime Minister
இது சற்று தாமதப்பட்ட எதிர்வினைதான், என்ன செய்வது.
‘ஆசிரியர் தினம் ‘ என்பது ...... அது முதலில் தாய்மொழி என்ற அடையாளத்தின் குறி.
மேலும், அது ஒரு நினைவுநாள்.
20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கென்ற நினைவு கூறலுக்கான குறியீட்டுச் சொல்லாக
ஆசிரியர் தினம் மேலிருந்து புறப்பட்டு வந்தது.
இதுவரை
ஆங்கிலத்தில் Teachers day என்றும், மலையாளத்தில் அத்யாபகன் தினம் என்றும், தமிழில்
ஆசிரியர் தினம் என்றும், தெலுங்கில் ....?
‘உபாத்யாய தினம்’ (யூகம்தான்) என்றும் தென்மாநிலத்தவர் அவரவர் தாய் மொழியில் ‘ஆசிரியர் தினம்’
என்பதைச் சொல்லி அழைத்தனர். நினைவு
கூர்ந்தனர், கொண்டாடி வருகினறனர்.
திரு. மோடி அல்லது Mr. Prime Minister திடீரென, மக்கள் எதிர்பாராத
தருணத்தில் ஆசிரியர் தினத்தை ’குரு உத்சவ்’ தினமாகக் கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டார். திரு. மோடி கூறினால் அது அவர் விருப்பம்
என்றாகிறது. Mr. P.M (பிரதமர்) என்ற முறையில்
கூறப்பட்டிருந்தால் அது ஆணை / கட்டளை / அரசாங்க விருப்பம் கூட ஆணைதான்
என்றாகிறது. ஏனெனில் Mr. Prime minister என்பது The Phallus
. அதிகாரமையம் அது (மனஅலசல்படி). அந்தத் தளத்தில் அதற்குரியவர்/ள் தான் வரமுடியும்.
அதனால்தான் திரு. மோடி விருப்பமா அல்லது Mr. Prime Minister -ன் குரலா? என்ற வினா எழுகிறது. பதில் Mr. P M -ன் குரல் என்று அடையாளம்
கண்டு சொல்வார்களானால் ..... துக்கம் தொண்டையை அடைக்கிறது.
ஏனெனில் Mr. PM -மிடமிருந்து மக்கள்
எதிர்பார்ப்பது ஒரு வேளைக் கஞ்சியும், தொட்டுக்க முட்டைப் பொறியலும் அல்ல, அரசியல் ஆசை மக்களைக் கையேந்திகளாக கையேந்த வைப்பதுதான். ஆனாலும் மக்கள் மானமிகு தன்னிலையாய் இருக்கும்
போது விரும்புவது கஞ்சியைவிட, மக்களிடம் Mr. PM. ‘தயை ’ நிறைந்தவராய் இருக்க வேண்டும் என்பதுதான்.
Mr.
PM.-ன் விருப்பம்
ஆணையில் தயை எங்கே! ‘குரு உத்சவ்’ என்று உச்சரிக்ககூடத் தெரியாத அந்நிய
மொழியினரைப் பார்த்து நீ இனி இப்படித்தான் குரு உத்சவ் தினம் என்று கூறு என்று
கூறுவது, வேறு வேறு மொழியை தாய்மொழியாய்க் கொண்டவர்களை, இந்த ஒரு சொல் (ஒரே மொழி) லைத்தான்
கூற வேண்டும் என திரு..
PM ஆசைப்படுவாரானால்
அந்த ஆசைக்கடியில் பிற தாய்மொழிகளை அந்த Phallic மொழிக்கு காலனியாக்குவது என்ற நனவிலி ஆசையாய்த்
தெரிகிறது என்று வெளிப்படையாய் மன அலசல் கூறுகிறது.
புறப்பட்ட இடத்திற்கு வருவோம்.
ஏன்? திடீரென்று இந்தக் கூற்று
செய்தியாகி- யிருக்கிறது?
ஏன் திடீரென்ற பேச்சு என்பதைப் புரிய, மொழி எப்போது (பேச்சு) ஒரு
மனிதனிடம் பிறக்கிறது என்ற கேள்வி அவசியம்.
மன அலசல் கூறுவது “மொழி கலாச்சாரமல்ல, எஜமானனின் மொழியல்ல,
பொருளாதாரமல்ல, Trade அல்ல. மாறாக, அது Affects” –
லெக்கான்.
ஏதோ ஒரு பாதிப்பில், ஏதோ ஒரு பேச்சால் (மொழியால்)
பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, நனவிலி பேச்சாகி பிரக்ஞையுடன் குறிப்பிட்ட கால
இடைவெளியில் Mr.
P.M ‘குரு உத்சவ்’ என்று மொழிந்திருக்க
முடியும். அப்படியானால் Mr. PM -ஐ பாதித்த மொழி (பேச்சு) எது? மக்களுக்கு வெளிப்படுத்தலாமே!
பல மொழிகளின் கூடாரம்தானே இந்தியா?
ஒரு குறிப்பிட்ட ஒரு மொழியை, பிறமொழிகளைக்
காலனியாக்கிவிட்டு உயர்த்திப் பிடிப்பது இந்திய ஐக்கியத்திற்கு ஆரோக்கியத்தைக்
கொடுக்குமா? அல்லது வைரஸ்யை
பரப்புமா? (காலம் சொல்லும் பதிலை)
’ குரு உத்சவ்’ என்ற ஓசைகூட
அங்கீகரிக்கப்பட்ட அரசு மொழியான ஹிந்தி இல்லையாமே!
ஆசிரியர் தின வாரத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஒருவரிடம்
மாணவர்களாகி அவரிடம் “குரு உத்சவ்“ பற்றி கைபேசியில் கேட்டதை
அப்படியே வாசகர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.
“ ’ குரு உத்சவ் ’ என்பது சமஸ்கிருதத்திலிருந்து
இந்திக்கு வந்த சொல்லாகும்.
’ குரு உத்சவம்’ என்பது சமஸ்கிருதம் ஆகும்.
’ உத்சவம்’ என்பதன் பொருள் திருவிழா
ஆகும்.
’ குரு உத்சவ்’ என்பது ஆசிரியர் திருவிழா
என்று பொருள்படும்.
’ ஆசிரியர் தினம்’ என்பது ஆசிரியர் நினைவு நாள்
என்று பொருள்படும்.
’ குரு உத்சவ்’ என்பது ஆசிரியர் நினைவு நாள்
கொண்டாட்டம் ஆகும்.
’ குரு’ என்பதற்கு ஆசிரியர் என்பது
ஒரு பொருள்.
’ குரு’ என்ற வார்த்தை ஆன்மீகத்தில்
பயன்படும் சொல். இதன்பொருள் அறியாமையை
நீக்குபவர். முன்னோடி என்றும் கூறலாம்.
ஆசிரியர் என்பது ஒரு நபர் -
person ’ குரு’ என்பது மனிதராக இருக்கலாம்,
இல்லாமலும் இருக்கலாம். மனிதராக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. ( need not be a person ) ’ குரு’ ஒரு பறவையாகக் கூட,
கடவுளராகக் கூட இருக்கலாம். பாகவதத்தில்
24 வகை ’ குரு’ க்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
”
’ குரு உத்சவ்’ என்ற structured ஆக அர்த்தம் கொடுக்கும் ஒரு குறிப்பானை
வேகமாகப் பிடுங்கி ஹிந்தியில் ஒட்டவைப்பானேன்.
ஒரு குறும்புக்கார மதிப்பிற்குரிய பெண்ணியவாதி ஹிந்தியைப் பற்றிக் கூறியது
ஞாபகத்திற்கு வருகிறது. அப்படியே கூற
முடியாவிட்டாலும் அதன் சாரம் இதுதான்.
ஹிந்தி என்பது பலமொழிகளால் ஆன ஒரு ’ கொலஜ்’ (ஒரு வகை collage ). இருக்கட்டும்.
பெரும்பான்மை ஹிந்தி என்பதால் சிறுபான்மை மேல் சவாரி என்ற கருத்தாக்கத்தால்
வழிநடத்தப்பட்டால் அகண்ட பாரதத்திற்கு பதில் பழைய
’ குறுநில மன்னராட்சி’ என்ற திசையை அரசியல் நோக்கப் போகிறது.
Mr. PM -ன் பேச்சு சமூகரீதியாக, சமூக ஆரோக்கியத்தை மையமாக
வைத்துப் பேசிய பேச்சல்ல.
பிற மொழியுடன் உறவுகொள்ள வேண்டிய உறவு, கொள்ளவேண்டிய
பண்புகுறித்துப் போதுமான விளக்கமளிக்கவேண்டிய பொறுப்பு,அக்கறை அங்கு இல்லை......யோ
என்று தோன்றுகிற்து.
மாறாக, சுயமோகக் கலாச்சாரம் ( grandiose ) / கருத்தாக்கம், ஆரோக்கியமற்ற சுயநலம்.
இதுதான் Mr. PM -ன் மேலாண்மை அரசியல் சொல்லாடலாகத் தெரிகிறது. அப்படியா?
இந்தியத் தன்னிலை (subject) என்ற அடிப்படையையே ’ குரு உத்சவ் ’ கேள்விக்குள்ளாக்குகிறது ?
க.செ
பி.கு: இப்படி பேசியதற்காக Mr.Prime minister க்கு நன்றி.
இங்குள்ள மாணவர்கள் எத்தனை பேர் சூரியன் உதிப்பு மற்றும் மறைவை பார்த்திருக்கிறீர்கள் என்று பிரதமர் மோடி கேள்வி கேட்டார். சில மாணவர்கள் தங்களின் கரங்களை உயர்த்தினார்.தொடர்ந்து மோடி கூறுகையில், நாம் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்றார்.
செப் 05,2014,தினமலர்
I recently met Nagpur's Mayor. He told me they shut off street lights on full-moon nights and ask people to come out and enjoy the moon lit night. People actually do that and in the process, we save a lot of electricity. So, small things like these help us save our environment. How many of you have witnessed the sunset, or a full moon? These habits have gone.
NDTV.com | Sep 05, 2014