இது எங்கள்
நண்பன் மணி;இவருடன் சேர்ந்துவாழ்ந்து வந்த இவரின் நண்பர்கள் ‘சிக்கு’, ‘டாமி’மே மாதத்தில்
ஒருநாள் கொல்லப்பட்டிருந்தனர் இருகால் மிருகங்களால்.சிலர் இழவு விசாரித்தனர்;பலர் நாய்கள்தானே என்று சமாதானப்படுத்தினர்;’சிக்கு’வின் உடல்
கிடைக்கவில்லை.’டாமி’யின் உடல் அடையாளம் தெரியாத வகையில்
சிதைக்கப்பட்டிருந்தது.
இந்த
வலியுடன் போராடிக்கொண்டிருந்த நாளில் ராஜபக்ஷே பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு
வருகை என்றவுடன் வலிகளும்,மனப்பதட்டமும் கூடிற்று. ஆயிரக்கணக்கில் உருத்தெரியாமல்
நாய் நரிகளுக்கு யாழ் தமிழர்களை இரையாக்கிய ராஜபக்ஷேவுக்கு கம்பள வரவேற்பா!
யாழ்
தமிழர்கள் முதலில் மனிதர்கள்;பின்பு மொழியால் தமிழர்கள்.யாழில் கொல்லப்பட்டது
சூறையாடப்பட்டது மனிதம்.
சூறையாடப்பட்டது மனிதம்.
ஏன்?எதற்காக
இவர் அழைக்கப்பட்டார் என்ற கேள்விக்கு தமிழகத்தின் மதுரை மாவட்டம்,முள்ளிப்பள்ளம்
டாக்டர் சுப்பிரமணியசாமி உதிர்த்தவைகள் சில-
......’ இந்தியாவைச்
சுற்றிலும் பாகிஸ்தான்,இலங்கை, சீனா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன.அந்த நாடுகளோடு
நாம் என்றைக்கும் நட்புணர்வோடு இருந்தால்தான் இந்தியாவில் நாம் பிரச்சினைகள் ஏதுமின்றி
நிம்மதியாக இருக்கமுடியும். அதனால்தான் ‘சார்க்’ என்ற
கூட்டமைப்பை ஏற்படுத்தி தெற்காசியாவில் இருக்கும் நாடுகளையெல்லாம் அதில்
உறுப்பினர்களாக்கி வைத்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட
நாடுகளைச் சேர்ந்த அதிபர்களுக்கு இந்தியாவின் புதிய பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு
அழைப்புவிடுப்பது என்பது மரபு.அந்த மரபின் அடிப்படையில்தான் ‘சார்க்’ கூட்டமைப்பில்
உறுப்பு நாடாக இருக்கும் இலங்கைக்கும், விழாவுக்கு வர அழைப்பு
விடுக்கப்பட்டது.ஆனால் உடனே அதற்கு எதிராக தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்
பலரும் கருத்துச் சொல்கின்றனர்.இதற்கு நாம் காது கொடுக்கவேண்டிய அவசியமில்லை”...
ஓணான் இனம்
ஓரளவு இன்றும் கிராமங்களில் காணப்படுகிறது;’பச்சோந்தி’தான் காணாமல்
போய்விட்டது.இப்போது கவலையில்லை.இனம் மீண்டுவிடும்.
மேலும்
இப்படி உதிர்க்கிறார்-
.....”ராஜ்ய
உறவுகளை பேணுவதற்காக இந்திய நாட்டின் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே
வரும்போது அதற்கு மாநில முதல்வராக இருப்பவர் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது.தனக்கு
அதில் உடன்பாடு இல்லை என்றால் அவர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல்
இருந்து,தன் சார்பில் தன் அமைச்சரவை பிரதிநிதி யாரையாவது அனுப்பிவைக்கலாம்.
அதைச்
செய்யவில்லையென்றால் சம்பந்தப்பட்ட முதல்வர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.அவருடைய
அமைச்சரவையையும் கலைக்கவேண்டும்......”
-சுப்பிரமணியசாமி
-தினமலர்.23-5-2014.
எப்படியிருக்கிறது?
பதவியேற்காததற்கு முன்னரே இப்படிப்பட்ட சொல்லாடல்கள் எந்தத்திசையைச்
சுட்டிக்காட்டுகிறது.
(கவனிக்க).
போர் என்னும்
பெயரில் கொல்லப்பட்டவர்களுக்கு அந்திம கிரியை செய்யும் உரிமைகூட வழங்காத ஒரு பாசிச
மாஸ்டருக்கு, மோடி சொந்த பிறந்தநாள் விழாவுக்கு அழைத்தால்,’புண்ணாக்கு’ என்று கூறி
விட்டுவிடலாம்.
ஆனால்
அழைக்கப்பட்டிருப்பது நாட்டை ஆளுவதற்கான பிரதிநிதி பதவியேற்பில் எனும்போது
தலைசுற்றுகிறது.
இனி மனித
உரிமை பற்றிய சொல்லாடல்களுக்கு இந்தியப் பாராளுமன்றத்தில் இடம்
இருக்குமா..?அச்சமாக உள்ளது.
இறந்த
உடலுக்கு இறுதி மரியாதை செய்யத் தெரியாத நெறிகெட்டவைகளுக்கு சட்டபூர்வ, Diplomatic சொல்லாடல்கள்.அப்படித்தானே!
சட்டம்
சரி. அது போதுமா??.அப்படியானால் ‘ETHICS’ ’நெறி’.
நேரமாகிவிட்டது.
உங்கள் வேதநூல்களை எடுத்துச் செல்லுங்கள்.
பிரிவினையை.....”மனவலியைக்
கையாளக்கூடிய தாய்வழித் தன்னிலைத் தன்மையால் மட்டுமே(maternal subjectivity) எதிர்கொள்ள/கையாளமுடியும்.”
இப்படி இங்கு
யாரும் இருக்கிறார்களா(அதிகாரத்தில்) ?” (Froshand
Baritser) .
நண்பர்கள்
நினைவாக
“நாய்கள் தெருவோரம்..
EVIL-கள் ரத்ன கம்பளத்தில்
நடக்கட்டும்”....
க.செ.
25-5-2014