ஜூன் 2-ம் தேதி மட்டும் தண்டனைக் குறைப்பு 4 பேருக்கு.
கருணை பெற்றவர்களின் அந்தஸ்து,
(1) ஒருவன் 16 வயது பள்ளி மாணவியைக் கடத்தி, வல்லுறவுக்குட்படுத்தி கொடூரமாகக் கொன்றவன்.
|
(2) உ.பி.யில் 2008-ல் 5 வயது பெண் குழந்தையை வல்லுறவு கொண்டு கொன்றுவிட்டான்.
|
(3,4) ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர்.
பெண்களை வல்லுறவு கொண்டு கொடூரமாகக்
கொன்றவர்கள்.
|
இந்தக் கொடிய, ஈவு இரக்கமற்ற சமூக விரோதிகளுக்கு தூக்குத் தண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது ஏன்?
”இந்த தண்டனைக் குறைப்புகள் அரசின் பரிந்துரையின் பேரிலேயே
செய்யப்படுகிறது” – அர்ச்சனா தத்
(குடியரசுத் தலைவர் மாளிகையைச் சேர்ந்த அதிகாரி)
- ஆதாரம் – சுதேசி ஜூலை 16-2012.
பகத்சிங்கிற்கான தூக்குத் தண்டனையை குறைக்கச் சொல்லி யாரும் சிபாரிசு பண்ணவில்லை அன்று – காந்தி உட்பட.
பெண் / சிறுமி / பள்ளிச் சிறுமியுடன் ஈவு இரக்கமற்ற வல்லுறவும், கொலையும் புரிந்தவர்களுக்கு அந்த மகான் மன்னிப்பு வழங்கி ஆயுள் தண்டனைக்குப் பரிந்துரைப்பாரா?
பகத்சிங் போன்றே தமிழகத்தின் அரசியல் கொலைக்காக தண்டனையாகத் தூக்கு பெற்றிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு யாரும் பரிந்துரைக்கவில்லையே ஏன்?
ஆக, அரசு அதிகாரம், ஆளும் அரசியல் கட்சியின் சுயமோகக் காயமானால், குற்றவாளிகள் மன்னிக்கப்படமாட்டார்கள் !
சிறுமி முதல் பெண்கள் வரை ஈவு இரக்கமற்ற வல்லுறவுக்கும் கொலைக்கும் காரணமானவர்களுக்கு மன்னிப்பும், தண்டனைக் குறைப்பும் உண்டு.
இது நெறியற்ற ஆட்சி அதிகாரமாகப் பரந்துபட்ட மக்களுக்குப்படவில்லையா? உறுத்தவில்லையா?
சமூக நெறியை விட, ஆட்சி நெறியைவிட, சுயமோக வெறியே இங்கு இந்த விசயத்தில் ஆட்சி புரிந்திருக்கிறது.
மக்களுக்கு, தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனைக்கு என்ற செய்தி வெறும் செய்தியல்ல.
தண்டனைக் குறைப்பு என்பது குறி
“ஒரு குறி (sign) அல்லது பிரதிநிதி, நபரை, ஏதோவொன்றை ஒரு குறிப்பிட்ட உறவில் அல்லதுsss Capacity-ல் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்றாகும்” C.S. Peirce.
குடியரசுத் தலைவரின் சிறப்பு அந்தஸ்து, சிறுமியைக் கொன்றவன், வல்லுறவு கொண்டவனுக்குக் கூட கருணை வழங்குகிறது, அதே நேரத்தில் அரசியல் கொலைக்கான குற்றவாளிகளுக்குக் கருணை மனு ஏற்கப்படவில்லை.
ஆக, பெண்களும், சிறுமிகளும் இச்சமூகத்தில் பாதிக்கப்பட்டால், கொல்லப்பட்டால், கொன்றவர்கள், குற்றவாளிகள் ஜனாதிபதியின் கருணைக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்பதைத்தான் இந்தக் கருணை மனு பிரதிநிதித்துவம் (sign) பண்ணுகிறது.
ஜனாதிபதி என்ற capacity-க்கு இந்த நெறிப் பிறழ்வு, சட்ட ரீதியான சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்ன சொல்வது? குற்றமனப்பான்மை கலாச்சாரத்தில் இனி எந்த இடத்தில் இருக்கும்.
[ மரண தண்டனை வேண்டாமே! என்பது மட்டும் காதில் விழுவதில்லை ]. ஆக, மரணதணடனை என்பது குடியுரிமை! சமூக உரிமை காப்பதற்காக, அதை மீறும் கொடியவர்களுக்காக என்பது பாமரத்தனமாக புரிதல். மாறாக,
அது ஆளும் கட்சியைத் தொட்டால்.... என்ற அச்சுறுத்தலுக்கான குறிப்பீடு மட்டுமே என்று இனிச் சொல்லலாமா....?
மரியாதையும் Guilt-ம் இல்லாமல் ஒரு சட்டம் இருக்க முடியுமா?
பெற்றோரின் Super ego சமூகத்தை அங்கீகரித்து பிரதிநிதித்துவம்செய்கிறது. அதைத்தான் குறியீட்டு மற்றமை, Name – of – the - Father (தந்தை அதிகாரம்) என்கிறோம், தலைவணங்குகிறோம்.
சிறப்பதிகாரம் வழங்கிய கருணையை – 5 வயதுச் சிறுமியை வல்லுறவு கொண்டு, கொன்றவனுக்கு – சட்ட பூர்வமானது என்றோ; நெறி சார்ந்தது என்றோ; அது மதிக்கப்படவேண்டுமென்றோ; இந்த அரசு அதிகாரத்திற்குக் குடிமகளாய் / குடிமகனாய் இருக்கவேண்டுமென்ற அவசியம் அல்லது ஆவலோ இருக்குமா? இருக்க வேண்டுமா?
இந்த அதிகாரம் நெறிகளற்ற சுயமோகத்திற்கானது.
சுயமோக அதிகாரமே பரிந்துரைக்கும்
அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.
நெறிகளற்ற ஆட்சி ! நெறிகளற்ற ஆட்சியாளர்கள் !!
விதிவந்தால் சாகலாம் என்றிருப்பவர்கள் !!
அதிகாரத்திற்காக காத்திருக்கும்
புரிந்துணாவு ஒப்பந்தமுள்ள அரசியல் கட்சிகள்
இனியாகும் சமூகத்தினர்க்காக
இந்தியா காத்திருக்கிறது போலும்
காதில் கலகக் குரல் கேட்கிறது
கட்டமைப்பு...?
[ பெண்களின் மாண்பை, உடைமையை, உரிமையை, இருத்தல் உணர்வைக் காப்பதற்கான சட்டம்; அதைத் தகர்க்கும் தனி உரிமை பெற்ற ( Discrete powers ) அதிகாரிகளின் உரிமையைச் சட்டபூர்வமாக நீக்க / கேள்விக்குட்படுத்த, பாராளுமன்றத்தைச் சட்டமியற்ற வைக்கப் போராடவேண்டிய மக்கள் திரள் பற்றி விவாதிக்க வேண்டிய தருணமிது, ]