30 Mar 2012

“என்னைக் கொன்றவன் (perpetrator) என்னை அங்கீகரிக்காதபோது, நான் அதை மறப்பது எப்படி? அவனை மன்னிப்பது எப்படி?” ;-இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானமும் இந்திய அரசும். - ஒரு மன அலசல் (psychoanalysis).

மனித உரிமை மீறல்..!   அவ்வளவுதானே ?
அப்படியென்றால் ஜெர்மானிய வெள்ளை [ஆரிய இனம் (race)] இனவாதம், யூத இனமக்களை, இலட்சக்கணக்கில் கொன்றது, கொட்டடியில் அடைத்தது, Gas Chamber (விஷவாயு கூண்டுக்குள்) வைத்துக் கொன்றது, ரசாயன மருத்துவக் கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கு யூதர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்தியது கூட... மனித உரிமை மீறல் அப்படித்தானே!
இரண்டாம் உலக யுத்தத்தில், ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு வீசி, லட்சக்கணக்கில், நொடிப்பொழுதில் பொசுக்கியது, பாரம்பரிய கதிர்வீச்சை (Radiation) ஏற்படுத்தியது, மனித உரிமை மீறல் மட்டுமே அப்படித்தானே!

மீண்டும் சிறிது நேரம் கழித்துப் பேசலாம். இப்போது, மாநிலங்களவை நேரம்.  மார்ச் 13ல் எழுந்த சொல்லாடல்களில் சில.

இலங்கைப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது.  அது தொடர்பான தீர்மானத்தை ஆதரிப்பது நமது தார்மீகக் கடமையாகும் ”.

மத்திய அரசு இதுவரை இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாடும் எடுக்கப்படாமல் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த வேண்டும்”.[எவ்வளவு சாமர்த்தியமாய் தன் / கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைத் கூறாமல் எதிரியை மடக்க கூர் அரிவாளோடு பதுங்கியுள்ள சாமர்த்தியம் ]. 
Support the Resolutions on war crimes in SriLanka “. 

இலங்கையின் நட்பு நாடு என்ற முறையில், அந்நாட்டில் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கவேண்டும், என்ற தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரவேண்டிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது ”.
 
 “இலங்கைப் போர்க்குற்றம் தமிழக எம்.பி.க்கள் அமளி” – தினமணி – மார்ச் 13.
இலங்கையில் உள்நாட்டுப் போர் என்று முதலாளிய வலதுசாரிகளால் நாமகரணம் சூட்டப்பட்ட (இந்திய அரசியல்வானில் அது மேலாண்மைக் கருத்துணர்வு) பெரும் தேசிய இனவாதத்தால், சிறுபான்மை தேசிய இனம், கிட்டத்தட்ட முற்றாக அழிக்கப்பட்டு, எஞ்சியவர்களின் வாழ்வுரிமைக்கு வானம்பார்த்த விழிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 3-ம் ஆண்டு ஆயிற்று.

[நடந்த யுத்தம் யாரால் துவக்கப்பட்டு, யார் யாருக்கிடையில் நடந்து முடிந்தது?  நேரடி பங்கேற்பு-இல்லாதவர்களில் (மக்கள்) எத்தனை ஆயிரம் பேர் (லங்கர்கள், தமிழர்கள்) கொல்லப்பட்டனர்?  மீறியது யார்?  குண்டுமழை (சொந்த மக்களாக இருந்தால்?) பொழிந்தது யார்?  பிஞ்சுகளையும், மொட்டுகளையும் சுட்டுப் பொசுக்கியது இனவாதமா?  அல்லது இரு (பிரிவுகளுக்கு) party களுக்கிடையிலான யுத்தத்தாலா?  இதுவா மனித உரிமை மீறல்? ]
     
இப்போது மனித உரிமை மீறலுக்கான காட்சிகள், உண்மைகள் கிடைக்; அதிலும் ஒரு பிரதிக்கு (text) இன்றும் சந்தேகம்இலங்கை தமிழ் எம்.பி.க்கள்/ விசாரணை / மனித உரிமை மீறல் / மீறியவர்களை / அந்த நாட்டு அரசால் கண்டிக்க  வேண்டும்.
     
தினமணி வெளியிட்ட மேற்கூறிய பிரதிகளைக் (text) கொண்டு அவர்கள் யார் என்று  அடையாளம்  கண்டுவிட முடியுமா?
     
கட்சிகள் எழுப்பிய போர்க்குரல் (தினமணி அமளி என்கிறது) அந்தக் கட்சிகளின் சக தலைவர்களையும் தொண்டர்களையும் புதுக்க, மற்றொரு அடையாளத்தை அணிந்து கொள்ள உதவிற்று.
     
பொது வெளியில், பன்னாட்டுப் பார்வையில் அரசியல் திரட்சிக்கு ஒரு மூலதனம் திரட்டியாயிற்று,
     
இதில், இந்த அமளியில் வட இந்திய மாநிலக் கட்சிகளுக்கு எந்த நிலைப்பாடாவது இருந்திருக்கிறதா?  காஷ்மீர் பிரச்சினை கன்னியாகுமரியிலும் இன்றைக்கும் பேசும்பொருள்தான்.
     
தென்கோடித் தமிழ்-இனத்திற்கான பிரச்சினை வடக்கில், வடகோடியில் ஒரு செய்தியாக, ஒரு டீக்கடைப் பேச்சாக மாற்றப்பட்டுள்ளாதா?
     தமிழக மக்கள் தெற்கத்தியரை, தொப்புள் கொடியாகப் பாவித்தது.  அது ஒரு காலம், நிலாக்காலம்.  ராஜீவின் அரசியல் கொலைக்குப்பின், மத்திய அரசின் பெரும் கதையாடலின் மனப்போக்கில் (attitude) தாய்மை உள்ளதா?
      ஒரு சந்தேகம்தான்

      83 ஜீலைக் கலவரத்தை ஒட்டி..........
      தமிழர்கள் இன்றும் எழுந்தால்...........
      எழுப்பி விட்டால் ...............
எதற்கு இந்தியப் பாராளுமன்றத்தில் “அமளி“?  அந்த மேடையை வேறு நாடகம் / ஊடகக் காட்சிக்கு இடமளித்துவிடலாம்.
     
Mr.Clean-யும் வெளிநாட்டுப் பயணங்களுக்குச் செல்வதைத் தொந்திரவு பண்ணாமல் இருந்துவிடலாமில்லையா?
     
போதும்.  இனி மன அலசல் ஆய்வுப்பொருளை எடுக்கலாம்.
     
பிரணாப் முகாஜி, குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பதில்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு ”. 

இன்று புதன் 
Dr. மன்மோகன்சிங் அல்லது பிரதம மந்திரி,   

நமது நோக்கம் முன்னோக்குப் பார்வை கொண்டதாக (forward- looking ) இருக்க வேண்டும்.
“... பிரச்சினையில் சம்பந்தமுடைய குழுவினரிடம் பூசலையும் மனக் கசப்பையும் (confrontation and mistrust) ஆழப்படுத்திவிடுவதாக இருக்கக் கூடாது..... Accountability and confrontation போன்ற பிரச்சினைகளில் முன்னோக்குப் பார்வை வேண்டும்...
“இலங்கை வாழ் தமிழ் சமூகத்திற்கான எதிர்காலத்தை உத்திரவாதம் செய்வதே அரசின் குறிக்கோள்...
தமிழர்களுக்கான சமத்துவம், கௌரவம், நீதி, சுயமரியாதையைப் பெற்றுத் தருவதே நோக்கமாகும் ”... The Hindu 12-03-2012
வெளியுறவு மந்திரி கிருஷ்ணா, “ இலங்கையுடன் இந்தியாவின் உறவு, நட்பு உறவு.....“
ஏகபோக ஏகாதிபத்தியத்தின், இனியாகும் உலகளாவிய முதலாளியத்தின் மனித உரிமை மீறல் கோரிக்கை ஒரு நம் ஊர் கட்டப்பஞ்சாயத்துக்கு பஞ்சாயத்தார்களை திரட்டுவதுதான் நடந்து வருகிறது.
      நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு
     
முடிவில் கோழிவாங்கிக் கொள்வதற்கும் ஆஸ்பத்திரி செலவுக்கு, சாராயத்திற்கும் சேர்த்து, ஒரு ஆயிரம் கொடுத்திரு, [எங்களுக்கு (பஞ்சாயத்தாருக்கு) அப்புறமா 2000..... ஆயிரமா கொடுத்திரு] என்கிற மாதிரியிருக்கிறது.
     
இந்தக் கட்டப்பஞ்சாயத்திற்கே இந்தியா வரமறுத்துவிட்டது.
     
இது மன அலசலின்படி Disavowal (மறுத்தல்) ஆகும்.  அமெரிக்கா, தமிழகக் குரல் போன்றவற்றில் ஏதோ குறைபாடு, கைமீறிய கோரிக்கையால் ஏற்பட்டதல்ல.
     
இந்திய அரசின் சுயமோகப் பிணைப்பான (anaclytic relation) ஸ்ரீலங்காவுடனான பிணைப்பிற்கு உறவுக்கு ஊறு வந்து விடுமோ?  என்ற காயடிப்பு அச்சம். Anxiety.
     
மேற்கூறிய உறவைத் தக்க வைக்கும் முயற்சியாக எழுந்ததுதான் இந்த மறுப்பு.  அதாவது, தற்காப்பு.
     
பாரம்பரிய உறவில் பிளவு, காயம்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம்.
     
வெறும் நட்பு நாடல்ல.  இந்திய அரசு, வருங்கால வல்லரசுக் கனவின் பிணைப்பு உறவு (anaclysis).
     
தமிழ் எம்.பி.க்கள், அமெரிக்காவின் கோரிக்கை போன்ற அனைத்தும், இந்திய சுயமோகத்தில் ஏற்படுத்திய காயம் (trauma).
     
இந்திய அரசின் ஏகாதிபத்திய கனவின் நீக்க முடியாத பங்காளி உறவு.  என்ன பங்காளிஎன்ற குரலை நிறுத்த முடியாது.
     
மற்றும் ஒன்று உள்ளது.  LTTE-ன் அரசியல் கொலையை (பெரிய இடத்து இழவு) மறக்கவோ, மன்னிக்கவோ தயாராகயில்லாத காங்கிரஸ், அரசாங்கம் (government) இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி.
     
LTTE என்ற பகுதி (part) யாழ்பாணத் தமிழர்கள் (முழுமை) என்றாகி, நடந்தேறிய பேரின இனவாதத்தின் அழித்தொழிப்புச் செயல் Big Brother உடன் இணைந்து வெற்றிகரமாய் நடந்தேறியிருக்கிறது.
     
இந்த வெற்றிக் கூட்டணி தொடரத்தான் செய்யும் எப்போதும்.
     
ஆக, ஏகபோக (unipolar) நட்சத்திரமான அமெரிக்கா தன் உலகமயமாகிவரும் அரசியல் ஏகபோக பொருளாதாரத்திற்கான கோரிக்கைகளையே (demand) உள்ளூரிலும், வெளிநாட்டிலும் அரசியல், பொருளாதார கலாச்சாரம் என்று அறைகூவும்.

      ஏனெனில் தமிழர்களின் குரலுக்கு, தற்காப்பாக / மறுப்பு, எழுந்தது நான் உணர்விலிருந்து (Ego) அல்ல. மாறாக, பேரகனிலிலிருந்து (Super Ego) தற்காப்பு (defence) வெளிப்பட்டிருக்கிறது-அதாவது, பாரம்பரியம், நட்பு நாடு, என்ற விழுமியத்தை அவர்கள் மீறமுடியாது.
     
ஆகையால், இந்திய அரசும், இந்திரா காங்கிரசும் தங்கள் வெற்றிக் கூட்டணிக்கு எதிராக துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள்.
     
[ இதை எழுதிக் கொண்டிருந்த பொழுது, மற்றொரு முக்கிய நிகழ்வாக திடீர் மகிழ்ச்சி வெடித்தது.  அதாவது, இந்தியப் பாராளுமன்றம் அமெரிக்க அறிக்கையை ஆதரிக்க விருப்பம் தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது.]
      அது பற்றிய கருத்தைப் பார்க்கலாம்.  உண்மையில் யார் அறிக்கை?  ஸ்ரீலங்கா அல்லது அமெரிக்கா?
(இரண்டின் நனவிலி ஆசையும் எத்திசையில் செல்கிறது என்பதுவே அரசியல்)
      அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் குழுவிற்குச் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளுறைந்து இருப்பது இதுதான்:-
      இலங்கையின் உள்ளுர் கமிட்டி கண்டுபிடித்ததாகவும், எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கை என்றும் சிலவற்றைச் சொல்லியிருக்கிறது.  அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, இலங்கை பேரினவாத அரசின் அனைத்துக் கொடுஞ்செயலையும் மறைத்துவிட அமெரிக்கா முயற்சிக்கிறது. 
அமெரிக்கா, இலங்கை உள்ளுர் கமிட்டி கூறிய ஆலோசனைக்கு உலகளாவிய அந்தஸ்து பெற்றுத்தர உறுதுணையாகிறது.
      அமெரிக்கா, இலங்கையின் உள்ளுர் இராணுவ அரசியலில் தீவிரப் பங்கேற்பு எடுக்கப்பார்க்கிறது.
      அமெரிக்கா, பாதிக்கப்பட்ட, அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழர்களின் குரல் உலகத்திற்கு எட்டாத ஆழத்தில் அவர்களைத் தள்ள முயற்சிக்கிறது.  இலங்கை பேரினவாத அரசுடன் இணைந்து, அமெரிக்காவும், இந்திய அரசும் சேர்ந்து கூட்டாக நடத்தும் நாடகம்போல தெரிகிறது.
      இந்தியப் பாராளுமன்றம் முதல்நாள் மறுப்பு, மறுநாள் ஆமோதிப்பு !!
     
இந்திய பாராளுமன்ற கட்சிகள் (பெரியவைகள்) பெரும்பாலும், இச்சதியில் ரகசியப் பங்காளிகளோ என்று தோன்றுகிறது ].
      யாழ்தமிழர்களின் எதிர்காலம் தமிழக மக்கள் கையில்தான்.
     
இலங்கையின் 83 ஜூலைக் கலவரத்தின் எதிரொலி, தமிழகத்தின் கடலுக்கும், மேற்கு மலைக்குமிடையில் எதிரொலித்தது......மீண்டும் பேரொலியாக, அதிரவேண்டும், அதிரவைக்க வேண்டும்.  அது வெறும் உணர்ச்சி மேலீட்டால் எழுந்தால், லங்கன் தமிழுக்கு பேருதவியாய் இருக்காது.
     
இப்போது இன அழிப்பு முடிந்து 3 ஆண்டு, இனப்போராட்டம் ஆரம்பித்து பல பத்தாண்டுகளாயிற்று.
     
இலங்கை வாழ் தமிழ்ச் சமூகத்திற்கான எதிர்காலத்தை உத்திரவாதம் செய்வதே அரசின் குறிக்கோளாக உள்ளது பிரதமர்.
     
அரசு பஞ்சாயத்தாரராக மட்டும் செயல்படப்போவது தெரிகிறது.

      தமிழர்களின் தொப்புள் கொடி என இங்குள்ள அரசியல்வாதிகள் சொல்லிக் கொள்ளலாம்.  அது ஒரு அரசியல் கோஷம் என்றளவில்தான் நடுவண் அரசால் பார்க்கப்படுவது போல் தோன்றுகிறது.
     
நடுவண் அரசைப் பொருத்து, ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையில், லங்காத் தமிழர்களுக்கு பாதிப்பென்ன என்கிற அடிப்படையில், மனப்பாங்கில்தான் (attitude) ஆய்வும், தீர்வும் செல்லும்.
     
இப்பிரச்சினைக்கு சற்று முன்னே உள்ள வரலாறை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
மன அலசல் ஆய்வுக்கான களமாக முன்னாள் யுகோஸ்லாவியா, அருசா, ரவண்டா (Rwanda)-வில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிக்க குழு அமைக்கப்பட்டது.  அது பற்றி “ உண்மை அறியும் குழுவின் நோக்கம் சட்ட பூர்வமானதாக அதை நிலைநாட்டுவதாக மட்டும் இருக்கக்கூடாது “ என்கிறார் ஆய்வாளர் Nina K Thomas.
     
மேலும் அவர் கூறுகையில் பேரழிவிற்குப் பின்னர் நடத்தப்படும் ஆய்வில், தீர்வில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய, அடிப்படையானவைகள் என்று சிலவற்றைக் கூறுகின்றார்.  பாதிக்கப்பட்ட, காயம்பட்ட மனம் “என்னைக் கொன்றவன் (perpetrator) என்னை அங்கீகரிக்காதபோது / ஏற்காதபோது நான் அதை மறப்பது எப்படி?  அவனை மன்னிப்பது எப்படி?
     
ஆகவே, பேரழிவுக்கு முன் பேரினவாதிகளால் விலக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் / கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு “ மறுக்கப்பட்ட வரலாறு மீட்டெடுக்கப்பட்டாக வேண்டும் ”.  
     
இலங்கையின், இலங்கை அரசின் பேரினவாத மனப்போக்கின், குணத்தின் விளைவால் தொடர்ந்து அங்குள்ள தமிழர்கள் அழிக்கப்பட்டு,LTTE.-க்கு எதிரான யுத்தம் எனும் பெயரில் சாதாரண மக்களையும் ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது, ஆணையும், பெண்ணையும் நிர்வாணமாக்கி, கைகளைக் கட்டி கொன்றொழித்தது யுத்தத்திற்கு அவசியமா என்ன?
அது, அந்த இனத்தின் மீது, மாறாத, மீறாத, ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்ட பயங்கரவாதம்; பேரினவாதத்தின் பயங்கரவாதம்.
     
இதை, இதற்கான சாட்சியாக இருந்தது மற்றமைதான் (Other). அதாவது, உலக மக்கள்தான்,  ஊடகங்கள்தான், செய்திகள்தான்.  இந்த நேரத்தில் LTTE-ன் அரசியல் கொலையாலும், நுகர்வியல் கலாச்சாரத்தாலும், பிழைப்புவாத அரசியலின் பிற்போக்காலும் தமிழ் மனம், கூட்டுமனம் காயடிக்கப்பட்டிருந்ததால்.......,
     
.......பேரினவாத, பாசிச மகிந்த ராஜபக்சேக்கு தமிழகத்தில் எந்தவித எதிர்ப்புக் குரலும் இல்லாததும், நடுவண் அரசின், நேரடியான மறைமுக ஆதரவும் அவர்கள் குளிர்காய வசதியாக ஆயிற்று.

துன்பத்தை அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்.....
     
இறுதியாக, ஆய்வாளர் Nina k Thomas -ன் கூற்றின்படி, உண்மையை வெளிக்கொணரும் நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமில்லாமல், எதிர்காலம் எனும் பெயரால் உண்மையை அடகுவைக்காமல் இருக்கவேண்டும்.  அச்சமூகத்திற்கு, எதிர்காலச் சமூகத்திற்கு கசப்பான உண்மையை உணர்த்தவேண்டும்.
     
உண்மையையும், மனநலப்படுத்துவதையும் (truth and healing) மன்னிப்பதையும் சமாதானப்படுத்துவதையும் (forgiving and reconciliation) ஒன்றாக்கிவிடக்கூடாது ”.
     
இரு குழுவினரையும், ஒருவரையொருவர் மனிதர்களாக மதிப்பதும் அங்கீகரிப்பதுமாக மாற்றப்பட வேண்டும் ”.
     
இந்திய அரசு அல்லது வேறு முன்வரைவுகள் அரசியல், சட்டம் கலந்த முன்வரைவுகளை மட்டும் முன்னிறுத்தி, ஆதரிக்கக்கூடாது.
     
உயிர்பிழைத்துள்ளவர்களுக்கு தேவைப்படுவது என்னென்ன என்பது அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஒருவரையொருவர் மேலாண்மை (அடக்கியாள்வதற்கு) செலுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.
தாமஸ் கூறியபடி, சிங்கள இனத்தவரும் தமிழரும் ஒருவரையொருவர் மனிதர்களாக அங்கீகரிப்பதை சாத்தியப்படுத்த வேண்டும்.
பெரும் தேசிய இனவாதத்தின் சொல்லாடல்கள் முற்றிலும், சமூக, அரசியல் வெளியிலிருந்து அகற்றப்பட வேண்டும். 
இது ஒரு விவாதத்திற்கானது தான், பொது வெளியில் முன்வரைவுகள் பற்றிய ஆய்வு நடந்தால் ஆரோக்கியம் தான்.
     
எந்த முன்வரைவானாலும்,                                  
             சமூக உளவியல்தன்மை அல்லாது
            இருந்தால் எதிர்காலம்  கேள்விக்குறிதான்.
இன்றைய நிலையில் ஸ்ரீலங்கன் தமிழர்கள் அகதிகளாக இல்லாத ஐரோப்பிய நாடே இருக்காது போல் உள்ளது.  இவர்கள் தாயகம் திரும்பவும் வேண்டுமல்லவா?  அதற்கான சூழலும் கணக்கில் கொள்ள வேண்டும்.
இது ஒரு நீண்ட பயணம்தான்.
ஊடகங்களின் (media) பங்களிப்பு மிக மிக முக்கியம்.  பக்கச் சாய்வு (அரசியல்) துன்பப்பட்டவர்களுக்கு உதவாது.

கவனம் கடந்த காலத்திலிருந்து பெறப்பட..............
     
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் யூத இனத்தின் மீதான வெறுப்பும், அடக்கு முறையும், யூதர்களை ஐரோப்பா முழுவதும் நாடோடிகளாய் திரியவைத்தது.
     
பின்னர் பாசிச ஹிட்லர் லட்சக்கணக்கில் பயங்கரவாதத்தை (உலகயுத்தம் என்னும் சாக்கில்) அவர்கள் மேல் நிலைநாட்டினான்.
     
இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின், மா ரஷ்யாவின் பிளவிற்குப் பின் நடந்த மதபயங்கரவாதம் மற்றும் ரவண்டா (Rwanda) போன்ற இனவாத அழிப்பும், இன்னும் ரத்தமும் சதையுமான சாட்சியாக உள்ளது. 
 மேற்கூறிய உதாரணங்களிலிருந்து படிப்பினை அவசியமாக உள்ளது. 

இறுதியாக, பேரினவாதம் லங்கன் தமிழ் இனத்தின் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான அழித்தொழிப்புச் செயல், மற்றும் செயல்முறையானது தமிழினத்தை dehumanizing பண்ணியதாகும். இதைக் குறிப்பாக உணரவேண்டிய தருணமிது.


******* 


ஜனவரி 2012 தமிழில் வெளியான 'மற்றமை' (Other) பயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் - 1 பற்றிய மு. சிவகுருநாதனின் அறிமுக பதிவு இங்கே.