7 Nov 2015

சகிப்புத்தன்மை Vs அ . சகிப்புத்தன்மை

கோவன், ஷாரூக்கான் & தலைவெட்டி ஆசை.
லெக்கானின் ’ வாழ்க்கைக் கோட்பாடு ‘ :  ‘ வாழ்க்கைக் கோட்பாடானது குறித்தல் சங்கிலியில் ( Signifying chain ) மகிழ்வுக் கோட்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது ’ என்கிறார்.
யதார்த்தத்தில் மகிழ்வு என்பது உடலின் விருப்பப் பொருள். ஆனால் , யதார்த்தத்தில் ?
நீங்கள் இன்று உங்கள் மதிய உணவாக புலால் ( கறியை ) உணவை தேர்ந்தெடுக்க உரிமையும் , விருப்பமும் கொண்டு அமுது செய்யலாம்.
ஆனால் , ‘ மாட்டுக் கறியை ‘  தேர்வு செய்ய யதார்த்த அரசியலில் இடமில்லை.
இந்த நிலையை அலென் மில்லர் , “ வாழ்க்கையானது மகிழ்வு மற்றும் யதார்த்த கோட்பாடு -களுக்கிடையில் நிரம்பி வழிகின்றது ” என்கிறார்.

லெக்கான் இதனை மேலும் வளர்த்து  “  வாழ்க்கையானது உண்மையுடன் இணைக்கப்பட- வில்லை ; மாறாக , அறிதலுடன் ( knowledge ) இணைக்கப்பட்டுள்ளது ”  என்கிறார்.
ஆனால் எப்படி ? வாழ்க்கை , அறிதலை எதிர்கொள்ளமுடியாது.
“ அறிதலை எதிர்கொள்ள முடியாத வாழ்க்கை குருடாகவும் , ஊமையாகவும் உள்ளது . மேலும் , அது தன்னளவில், ஏன் ? அல்லது  எப்பொழுது ? அல்லது எங்கு ? என்ற எந்தவொரு அறிதலும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறது ” .
“ வெந்ததைத் தின்று
விதி வந்தால் சாகலாம் ” என்னும் சொலவடை ( மற்றமை ) யுடன் தொடர்புடையதாய் இருக்கிறது வாழும் வாழ்க்கை.
        “  மாட்டிறைச்சி சாப்பிட்டால்
     சித்தராமையா தலையை வெட்டுவேன் “


சித்தராமையா குப்பனுமில்லை , சுப்பனும் இல்லை .கர்நாடகா மாநிலத்தின் முதன் மந்திரி ; அன்னை காவிரிக்குச் சொந்தக்காரர் . அவர் தலையே வெட்டுப்பாறையில் இருக்கும் அவலம்.
இந்தக் கொலைத் தண்டனையை விதித்தது சென்னபசப்பா மாவட்ட பா.ஜ.க. செயலாளர். துணைக்கு வந்தது விஸ்வ ஹிந்து பரிஷத் , ஸ்ரீராம் சேனா , சிவ சேனா, பஜ்ரங் தள் முதலிய அமைப்புகள்.
இத்துனைக்கும் கர்நாடக முதன் மந்திரி செய்த குற்றம் “  எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது “ என்று கருத்து தெரிவித்ததுதான் . [ ஏற்கனவே மாட்டிறைச்சி சாப்பிட்டதாக உ.பி.யில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கும் ] .
“ முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்ட முடியாததால் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவருக்கு பன்றிக் கறி பார்சல் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கி , முதல் கட்டமாக பன்றிக் கறி பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.” – தி இந்து 5-11-2015.
ஆக ,  இது தொடர் போராட்டமாக சமூகத்தின் அடிமட்டம்வரை (grass root level ) எல்லா விதிகளையும் , சட்டங்களையும் மீறி கலாச்சார , மத அரசியலுக்கு பாதை வகுத்துக் கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற அரசியலையும் தாண்டி பிரபலமான தனிநபர்கள் மீதும் தாக்குதலைத் தொடர்ந்துவிட்டனர் . இதில் சிக்கியவர் நடிகர் ஷாரூக்கான்.
பா.ஜ.க.வின் இந்தப்போக்கை ஷாரூக்கான் இப்படி விமர்சித்துள்ளார் ;
….“  நாட்டுப்பற்றுடைய ஒருவர் மதச் சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் , மதச் சார்பின்மை அற்றவராகவும் இருப்பது ( religious intolerance and not being secular ) மாபெரும் குற்றமாகும் “.- www.Indian Express.com.3 -11-2015.
இதற்கு ஆரவார பதிலடியாக ( rhetoric ) பா.ஜ.க.வினர் “ ஷாரூக்கான் இங்கே ; அவருடைய ஆத்மா பாகிஸ்தானில் ” ;  அதாவது , ஷாரூக்கானை பாகிஸ்தானின் ரகசிய உளவாளி என்று முத்திரை குத்த ஆரம்பித்துவிட்டனர்.
இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் நேரடியாகச் சென்று அதை எதிர்த்து ஒரு பிராது கொடுத்துள்ளது . அந்தப் பிராதில்….
 “ சமூக நல்லிணக்கத்தை உடைத்து இரு துருவங்களாக மாற்றும் தீய குறிகளை
 (  sinister ) கொள்கையாக்கி மக்களிடம் பரப்புகின்றனர் ” என்று கூறியுள்ளது.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி ,…. “ அமைதியும் நல்லிணக்கமும் இந்தியாவில் நிலவுகிறது . இந்த மாதிரி சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கக்  கூடாது . ஆனால், இதை இவ்வளவு பெரிய விசயமாக மாற்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. சகிப்புத் தன்மை எங்கே இல்லை ? என்று காங்கிரஸை கேட்டுள்ளார் ”.   - The Hindu 4-11-2015.
எதிர்க்கட்சிகள் , சிந்தனையாளர்களும், ஒரு சில பத்திரிக்கைகளும் , சின்னத்திரையின் உராய் வீச்சுகளிலும் , ‘ சகிப்புத்தன்மை ’ பா.ஜ.க. கம்பெனியில் இல்லை என கடுமையாக விமர்சிக்கும் போக்கு நடைபெறுகிறது.

       தமிழகத்தின் சமீபத்திய சுயமோக அரசியல் செயல்பாட்டிற்கான உதாரணமாக சாராயக் கடையை எதிர்த்து , தெருமுனைப் பாட்டு ஒலிக்கக் கூட உரிமையில்லை ; மேலும் , முதல்வரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் உரிமை இல்லை என்பதற்காக பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
                       Sexuation
       அரசு இயந்திரம் பன்முகச் செயல்பாட்டிற்கானது . ஒரு செயல்பாட்டுத் தன்மை எப்படி உள்ளது என்பதுதான் ஆய்விற்குரியது . முரட்டுத்தனமானது , எரிசாராயம் விற்பது  ஆண் தன்மையிலானது .  அதன் தலைமை ஆணா? / பெண்ணா ? என்ற உயிரியல் ( biology ) வரையறையை கணக்கில் கொள்வதில்லை லெக்கானியம் ; அது நவீனத்துவமான கோட்பாடும் கூட.
        Phallic  ( அதிகாரத்தளம் ) என்பது ஆணைக் குறிப்பதல்ல. ஆண் தன்மையைக் குறிப்பது.
       அதிகாரத் தளம் பெண்ணிடம் இருந்தாலும் , அந்த அதிகாரம் ஆண்தன்மையில் -தாக்குதல், கோபம், ஒடுக்குமுறை, ஜனநாயக மறுப்பு போன்றவைகள் - Phallic Power தான். ஆட்சி செலுத்துபவர் ஆணா? / பெண்ணா? என்ற உயிரியல் பார்வை முதலாளியத்திற்கு முந்தியதிலிருந்து , ஏகாதிபத்தியம் வரை நீடித்த பால் ( அடையாளம் ) பற்றிய வரைமுறை அது.
       லெக்கானியம் அதை மறுதலித்து , செயல்முறை , விளைவுகளுக்கேற்ற முரணியக்கத் தன்மையில் ஆண் / பெண் என்ற   Sexuation கருத்தியலை முன்வைத்தது. அதுதான் பிந்தைய முதலாளியத்தில் முன் நிற்கிறது.
       இந்தக் கோணத்தில் பார்த்தால் , ஜெ. என்ற பெண் முதல்வரைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமாக கோவன் பாடலை அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
       Moral law divides the Subjects  [ ஒழுக்கவிதி தன்னிலைகளை பிளவு படுத்து கிறது.,  வலியை உண்டாக்குகிறது ] .
       இனி, ‘  தலைவெட்டி ’ ஆசை கொண்ட தன்னிலைகளின் தன்னிலைகள் ; “ அவர்கள் பிறரைத் துன்புறுத்தி இன்புறுபவர்கள் ( sadist ) ;   தன்னைத்தானே  [ அதே  ஒழுக்க முகவர்களால் ( moral agent ) ]  துன்புறுத்தி இன்புறுபவர்கள் ( masochist ) ”.   -  ப்ராய்டின் கண்டுபிடிப்பு இது.
       இவர்களின்  நடைமுறைக்கான - பிறரைத் துன்புறுத்தி இன்புறுதல் ( sadist ) , தன்னைத்தானே துன்புறுத்தி இன்புறுதல் ( masochist ) -   காரணத்தை மனஅலசல் இப்படிப் பார்க்கிறது :
       “ பிறரைத் துன்புறுத்தி இன்புறுகிறவன் ( sadist ) வலிமையான பேரகனை ( Super Ego ) கொண்டுள்ளான் ; அவன் பேரகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான் ; அவன், அவனுடைய சொந்தப் பேரகனாகவே ஆகிவிடுகிறான் ( own super ego ) ”  - ப்ராய்டு.
       ஆக, இவர்கள் - பா.ஜ.க. , சிவ சேனா, பஜ்ரங் தள், etc ... - தங்களை பத்தாவது அவதாரமான கல்கி அவதாரமாக; அல்லது அரக்கர்களை ஒழித்துக் கட்டும் அவதாரமாக எண்ணி பூரிப்படைபவர்களோ? .
       கலாச்சாரத்தால் யார் ஆள்கிறார்கள்?
       இறுதியாக பா.ஜ.க. விற்கு சகிப்புத்தன்மை இல்லை / குறைந்துவிட்டது என்பது உண்மைதான். அது “ அரசியல் கலாச்சாரம் “ தான்’ .
       “ வித்தியாசங்கள், அரசியல் வித்தியாசங்கள், அரசியல் சமத்துவமின்மையால் கட்டப்பட்டுள்ள மதங்களும் கூட ; கலாச்சாரமே ( புனித ) காட்டுமிராண்டித் தனத்திற்கு வழி வகுக்கிறது “ என்கிறார் சிசாக்.
       சாதியையும் , வறுமையையும் , வேலையில்லாத் திண்டாட்டத்தையும்., நுகர்வு முதலாளிய கலாச்சாரத்தையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு சகித்துக் கொள்ள வேண்டும். (உதவியவர் சிசாக்).
       சிசாக் Joseph Goebbels  என்பவரின் சூத்திரத்தை இப்படிக் கூறுகிறார் , “  When I hear the word culture , I reach for my gun . But not when I hear the word civilization ” .
க.செ
5-11-2015

3 Nov 2015

ஸ்டாலின்... ஆசைப்படுபொருளாக !? Object of Desire ?

"பிரதமர் மோடி" யாவதற்காக குஜராத் முதல்வர் மோடி ( கடந்த ) பாராளுமன்ற தேர்தலில் எத்தனை வகைத் தொப்பி ,ஆடை அணிகள் ;வகை வகையான உடல்மொழிகளில் பேசி ,சின்னத்திரையினரின் உதவியால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆனார். N R I கள் கூட கண்டு களித்து புகழாரம் சூட்டினர். ( இதற்கு உதவிக்கரம் நீட்டியது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி ,ஊழல் .)
       முடிவு , பா.ஜ.க வடமாநிலங்களில் பலமாக காலூன்றியது. மத்தியில் ஆட்சியை கைப்பற்றினர் ; மோடி பிரதமரானார் ; வெற்றிக் கொடியை உலக நாடுகளில் பதிக்க வலம்வந்து கொண்டிருக்கிறார்.
                அன்றைய தேர்தல் காலம், காட்சிக்குரியதாய் இருந்தது., மக்களும் கண்டுகளித்தனர். எல்லோருக்கும் திருப்தி.


 “ ‘ திருப்தி ’ ( enjoyment   ) என்ற சொல்  jouissance    என்கிற லக்கானிய வார்த்தைக்குரிய ஒப்புக் கொள்ளப்பட்ட மொழியாக்கம் ஆகும்.  சமூக வாழ்வில் திருப்தியின் முக்கியமான பங்கை சிசாக் விளக்கியுள்ளார்.  ஆனால், ‘ திருப்தி ’ என்பது  ‘ மகிழ்வல்ல ’  (  not pleasure ) என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.  சுசான்ஸ்  ( jouissance  ) என்பது மன உளைச்சலை (uneasiness or discomfort) உடன் கொண்ட (accompanied  ) புதிரான உவகையாக (strange fascination )  வெளிப்படும் உபரி திருப்தியாகும் ( surplus employment ).   (உதாரணமாக கார்விபத்தை ஆர்வமாக உற்றுப்பார்ப்பது ). திருப்தி (enjoyment) என்பது ஒருவகை கூடுதல் தூண்டலாகும் , தாஙகமுடியாத வலியில் மகிழ்வு ( unbearable pleasure in pain ) , கணக்கிடமுடியாத “ கூடுதலான ஏதோவொன்று “ (something more  ) ஆகும் ;  அது  மனிதர்களைத்  தூண்டுகிறது … “.  -சிசாக்


                       இப்போது, தமிழகத்தில் அந்த யதார்த்தமற்ற யதார்த்தம் அக்டோபர் - 2015ல் தி.மு.க தளபதியால் தென்கோடியில் துவங்கி, மூன்றாம் கட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் முடிந்துள்ளது.
       இறுதியாக சென்னையில் முடிவு பெறும்.
       இனி, மிகச்சுருக்கமாக விடியல் மீட்புப் பயணத்தின் காட்சியை காட்டமுடியாது என்பதால் ;
       தளபதி ஆற்றிய காரியங்கள் சிலவற்றின் பட்டியல் இதோ....
      
·         கல்லுரி மாணவர் / மாணவிகளிடம் கலந்துரையாடல்
§  பேருந்து பயணிகளிடம் கைகுலுக்கல்
·         பேருந்தில் பயணம்
·         சாலையோரக் கடையில் தேநீர் அருந்துதல்
·         மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடல்
·         டாஸ்மாக் பணியாளர்களுடன் கலந்துரையாடல்
·         லாரி பாடி கட்டும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் ஆலோசனை
·         தறியில் அமர்ந்து அதை இயக்கிப் பார்த்த தளபதி
·         செங்கல் சூளை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்
·         வெள்ளி ஆபரண உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை
·         அரிசிஆலை- ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்.
·         பனை மற்றும் பாக்குமரத் தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடல்.
·         பெண்கள் / ஆண்களுடன் கைகுலுக்கல்
·         மாட்டுவண்டி தவிர பிற வாகனங்களை ஓட்டி காட்சிப்படுத்தல்.
·         வயல், நெசவு தொழிலாளராக காட்சி அளித்தல்.
       மூன்றாம் கட்ட இறுதியிலேயே நடைபயணம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. முதல்வர் ஜெ-யும் மக்களைச் சந்திக்க தயாராகும் செய்தி கிடைத்ததும் ;……..
       ஸ்டாலின்,  “ என்னைப் போல் சைக்கிள், நடைபயணம், ஸ்கூட்டி, பைக், ஆட்டோ, மற்றும் திறந்தவெளியில் நின்று மக்களிடம் பேசுவதற்கு ஜெயலலிதா தயாரா? மக்களைச் சந்திக்க தயாரா?
       அவர் ஹெலிகாப்டரில் வருவரா? விமானத்தில் வருவாரா? மக்களைச் சந்திக்க .உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன் என சவால் விடுத்தார்  ”......   - முரசொலி .29.10.2015.
       ஆக, தேர்தல் தேதி ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும் ; மாதம், தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் களம் தயாராகிவிட்டது.
       தளபதி ஆற்றிய காரியம், தேர்தலுக்கானது என்பது எல்லோருக்கும் தெரியும். அவரும் வெளிப்படையாக ஆட்சிமாற்றத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார். இதுபோக, உளவியலாக, கருத்தியலாக, கட்டமைக்கப்பட்டது பற்றிய களஆய்விற்கு வரலாம்.
       ஸ்டாலினின் உடை, அவர் யார்யாருடன், எப்படி எல்லாம் கலந்துரையாடினார் ; அவர் உலாவலுக்கான நடைப்பயணம், வாகனங்கள் மூலம் அவர் தன்னையே ஒரு காட்சிப்பொருளாக  அவதாரம் எடுக்கிறார் . அப்போது , மக்கள் பார்ப்பதற்கான, ரசிப்பதற்கான, (திடீரென சாமானிய கடையில் டீ ; உருமாகட்டி, வேட்டியை மடித்துக் கட்டி , நாற்று நடுவதற்கான உதவியாளர் ; நெசவாளி , etc ....) காட்சிகள் கட்டமைக்கப்படுகிறது . அவர் தன்னையே மக்களுக்கான ஆசைப்படு பொருளாக்கி ( object ) விடுகிறார்.
       இதன் விளைவு மக்களுக்கு ஒரு உபரி திருப்தி  [ சுசான்ஸ் ( jouissance ) ] கிட்டுகிறது.
       இதுபற்றி மனஅலசல் ஆய்வாளர் சிசாக் கூறுகையில், “ தன்னிலைகள் ( subjects  ) பொதுவாக சுசான்ஸை ( jouissance ) விழிப்பாக உணரவில்லை ( not aware ) என்றபோதிலும் அனைத்து அரசியல்களும் திருப்தியின் (சுசான்ஸ்) பயன்பாட்டைச் சார்ந்துள்ளன. அதை சூழ்ச்சித் திறனுடன்(manipulate ) கையாளுகின்றன “ என்கிறார் சிசாக் . 
- The Sublime Objet of Ideology..
       இனி, கருத்துவம் எத்தனை உயரத்திற்கு கட்டப்படுகிறது என்று பார்க்கலாம்.
       கருணைமிகு தளபதி., விழுதுநிகர் தளபதி, கரும்புநிகர் தளபதி,.etc ...
       அதாவது, ஸ்டாலின் என்ற மனிதரை உன்னதமான ஆசைப்படுபொருளாக கட்டப்படுகிறது (  sublime object ) . 
“ பொதுவாக, உன்னதமானது ( sublime ) என்பது இயற்கையின் பிரதிநிதித்துவங்களை ,
 ( சிகரம், பள்ளத்தாக்கு, ஆறுகள் etc ) சொல்லுவது.
        இந்த இயற்கையின் கம்பீரத்தை - கருத்துகளின் கட்டமைப்பிற்கு சமமாக அதைக் கருதுமாறு மனதை வற்புறுத்துவதாகும் “ என்கிறார் சிசாக் .
       ( கட்டுரை நீள்கிறது ).இறுதியாக, எல்லா பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக, ( சாத்தியமற்றது என்பது ஏதுமில்லாதது மாதிரி ) ஸ்டாலினை ( தானும் ) அவர் குழுவினரும் முன்வைக்கின்றனர். அதாவது அதிகாரத்தின் Object-ஆக (Phallic object) முன்நிறுத்துகின்றனர். [ உதாரணம் : வேலையில்லாத் திண்டாட்டம், நிர்வாகப் பிரச்சனை அல்ல. அது இந்தியப் பிரச்சனையுடன், நுகர்வு முதலாளியத்துடன், இணைந்தது. இதை எப்படி தமிழ்நாடு சட்டசபைத் தீர்க்கும். காவிரியும், வைகையும் பிற மாநிலம், நடுவண் அரசு , உச்ச நீதிமன்றத்துடன்  இணைந்தது ஆகும் ] .
       தீர்வு என்பது ,நேரியலானது (Linear) இல்லை ; அது சிக்கலான , பலவகையானது . மக்களுக்கு , இப்பிரச்சனையெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனையுடன் கட்டப்பட்டது ; அதன் 
முரணியக்கம் சிக்கலானது என்று அதை தெளிபடுத்த எந்த முயற்சியும் நமக்கு நாமே- யில் இல்லை.

              இதன் மறுபக்கம் எப்படியோ ?
க.செ
2-11-2015