7 Jan 2020

வெறித்தனமான நிரோசிஸ்



சென்ற மற்றமையின் கட்டுரை தீவிர தேசிய வாதத்தின் புயல், அதில் மோடியும், அமித்ஷாவும் சூப்பர் ஈகோவின் அடிமைகள் என்றும் , அது இடும் கட்டளைக்கு பணியாவிட்டால், கோழை என்று ஏசும், இதனால்தான் தான் அதீத தேசியவாதம் நிகழ்கிறது என்று அதில் குறிக்கப்பட்டிருந்தது .
       மோடி , அமித்ஷா தலைவர்கள்தான் ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஆட்டி வைக்கப்படும் தன்னிளைகள்.  இவர்களில் மனத்தின் இருப்பு அகண்ட பாரதம் அடையும் மார்க்கம் பாசிசம் நாசிசம்தான்.
       2020ன் முதல் வாரம் ஈரானுக்கும், இந்தியாவின் ஜே.என்.யு பல்கலை கழகத்திற்கும் கறுப்பு நாள்.
       சகல குடியுரிமை, சுதந்திரம் உலகத்துக்கு எண்ணை வழங்குவதில் முன்னனி நாடுகளில் ஒன்று.
       இந்த சுதந்திர நாட்டை டிரம்ப் என்ற அமெரிக்க அதிபர் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அச்சுறுத்துகிறார்.
       குடியுரிமை, தனி நாடு என்பதன் பொருள் இங்கு கேள்விக்குரியதாகிறது இல்லையா?
       இந்த அச்சுறுத்தல் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானை ஈராக்கில் ஆளில்லாத விமானத்தாக்குதல் மூலம் கொன்றுவிட்டது டிரம்பின் கொலைகார ராணுவம்.
       டிரம்பின் இந்த சுயமோக திமிற்று பேச்சு அவருடைய சொந்தத் தேவையாய் உள்ளது தற்போதைய சூழலில்.
       அவர் தலைமீது தொங்கும் கண்டனத் தீர்மானம் ( impeachment  ) என்ற கத்தி அதிபர் என்ற மா அதிகாரத்தை வெட்டி வீழ்த்தலாம் ;  அத்தோடு வரவிருக்கும் தேர்தலில் அவர் வெற்றி கேள்விக் குறியாயிருக்கும் சூழல்.
       இந்தச் சூழலை எதிர்கொள்ள டிரம்ப் எந்த வகையிலாவது தவரை சரி செய்யதன் சொந்த (உண்மையில் பொய்யான )
சுயமதிப்பு குறித்த உணர்வை மறு கட்டமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் டிரம்ப் எனலாம்.  அதாவது ஈரானுடன் முட்டி மோதுவது , போர் முஸ்திபு பண்ணுவதன் மூலம் , ஆரவார வாய்சவடால் மூலமும் சுயமதிப்பை மறுகட்டமைப்பதற்கான முயற்சி அது
       அத்துடன் அதிகாரம் குறித்த உணர்வை மீட்டெடுத்தல் மூலம் தன் சுய பாதுகாப்பையும் சாத்யமாக்களுக்கான முயற்சி.
       டிரம்ப் முழுக்க , முழுக்க மூலதன அதிகாரத்தை கொடி கட்டி பறக்க விடுகிறார் , முதலாளி பாராளுமன்றம் கூட அவர்களை அச்சுறுத்துகிறது போலும்.
       டெல்லியில் ஜே.என்.யு வளாகத்தில் முகமூடி கொள்ளையர்கள் , போராட்டத்தில் இருக்கும் இடதுசாரி மாணவர் , மாணவிகளை வெறித்தனமாக தாக்கி வெளிறேறியிருக்கிறார்கள்.
       சுய அடையாளத்தை மறைக்க முகமூடி , யார் இவர்கள் என்றால் ? ஏபிவிபி மாணவர் அமைப்பினரும் அவர்களுடன் இரண்ட்டற கலந்த அடையாள மற்றதுகளும்.
       ஏபிவிபி யார் மாணவர் அமைப்பு என்றால் அது பழைய கதைக்கு மோடி , அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் என்று வரும்.
       இடது சாரி மாணவர்களின் போராட்டாத்தால் அச்சுறுத்தப்பட்ட பாசிச கும்பல் அச்சுறுத்திய ஒன்றை ( மாணவர்கள் , ஆசிரியர்கள் ) அழிக்தொழித்து அதிகாரம் குறித்த உணர்வை மீட்டெடுப்பதற்கான முயற்சி அது . மறுபுறம் சுயமோக வெறி என்பது சமீபத்திய தோல்வியை சந்தித்ததில் ( குடியுரிமை உட்பட ) உருவான அவமானத்தின் விளைவு எனலாம்
       டிரம்பின் நண்பர்கள் தான் மோடியும் பாசிச கும்பலும் , பூமி வலது சாரிகளின் பாசிசத்தையும் . பயங்கரவாதத்தையும் எதிர்கொள்கிறது.
       பாரளுமன்றம் கேள்விக்குரியதாகிவிட்ட பின்னும் பதவி , அதிகார மோகம் , பாரளுமன்ற வாதமாகவே பாசிசத்தை எதிர்கொள்ளும் போக்குதான் மேலோங்கி உள்ளது.
                                                                                .செ.