20 May 2012

"உன் மதிப்பெண் அல்லது என் திருட்டு அத்துமீறல்"-- மன அலசல் ஆய்வு

இச்செய்தி உண்மையாயிருப்பின்.....
            மானாட, மயிலாடு-வதிலும் கிறங்கிக் கிடந்தவர்கள்தான்; சாதிச் சண்டைகளில் பங்கேற்றவர்கள்தான்; விடலைப் பருவத்தின் அடையாளத் தேடுதலில் நடிகை, நடிகர்களின் கவர்ச்சிக்குப் பலியானவர்கள்தான்; ஆனால் இன்று மீண்டும், ஒரு அதிகாரத்திற்கெதிரான சக தோழிகளின் மரியாதைக்காக களம் புகுந்துள்ளனர்.
            நெல்லை, ஏப்ரல் இறுதியில், பல்கலைக் கழகத்தில் 4 நாட்களாக, மாணவி, மாணவரின் காத்திரமான போராட்டம் நடந்திருக்கிறது.
     துறைத் தலைவர் அதிகாரச் செல்வாக்கை வைத்து மாணவிகளிடம் பலகாலமாக,

உபரிலாபம், திருட்டுத்தனமான பாலியல் இன்பம் என்ற பெயரால், மாணவியர்களின் மனக்காயத்திற்கு (Trauma) காரணமாயிருந்திருக்கிறார்.  அந்த நபர் மாணவியரின் மரியாதையையெல்லாம் மதிப்பெண்ணிற்காக அடமானம் பிடிப்பவராக இருந்துள்ளார்.


     இதையெதிர்த்துத்தான் போராட்டம், ஆனால் சாதிக் கலவரத்திற்குப் பேர் பெற்ற நெல்லையில், இப்போராட்டத்திற்கெதிராக நெல்லை வீதிகளில் நல்ல வேளையாக எந்த ரத்தமும் சிந்திவிடவில்லை.
செய்தி இதுதான்:
     “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துணைத் தலைவராக இருப்பவர் x.  இவர் வகுப்பறையில் மாணவிகள் தனிமையில் இருக்கும்போது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.  ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் இறுதியாண்டு முடித்துச் செல்லும் மாணவிகளிடம் இதுபோல ஈடுபட்டுள்ளார்.“....
     .....“மாணவிகள், செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்து விடுவாரோ எனப் பயந்து யாரிடமும் சொல்வதில்லையாம்“.
     .....“மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் x மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து 4-வது நாளாக, மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்”.....
                                                                        -தினமலர்,ஏப் 30, 2012. 

இதையெதிர்த்துத்தான், மாணவர்களின் ஒரு பகுதியினர் போராடியுள்ளனர்.
            பல்கலைக் கழகத்தின் அதிகாரப் பீடமும் அந்தப் பாலியல் வக்கிரப்புத்தி (Perverted) பேராசிரியருக்கு ஆதரவாயிருந்ததைக்  கண்டித்தும் அந்த x–ன் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் நிர்ப்பந்தித்து ஒருவகையான வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.  x-யைப் பொருத்தளவு தற்காலிக விலக்கம்; மாணவ, மாணவியருக்கு தங்கள் நியாயம் வென்ற திருப்தி (Jouissance).
            சமூகத்திற்கு, இனியாகும் மாணவிகளுக்கு இந்தப் பிரச்சினை இந்த x-ஆல் வராது.  ஆனால் வேறொரு X-ஆல் வரலாமில்லையா?
            ஆகவே,
           
பேராசிரியர் x-ன் பாலியல் தொந்தரவை ஒரு செயலாக மட்டும் கருதி (குற்றம்) தண்டனை வழங்க வைத்தது ஒரு அம்சம், மற்றொன்று பாலியல் தொந்தரவை முதலில் குறிப்பானாக, Signifier ஆக எடுத்துக் கொள்ளலாம்.

             
            “What is a signifier?  From linguistics, a signifier is an element that is marked as different from all other elements in a set, only gaining any significance by its relation to all of the other elements of the set.
            The signifier signifies no meaning of its own, being separated from the signified by an unbreachable bar.
            A signifier is used by convention and its connection to a signified is arbitrary.  It is ambiguous, polyvocal, and multiply determined.  But signifiers participate with other signifiers to produce an act of signification beyond any one signifier”
                                                                        -John Gasporoni, Ph.D.,
            முதலில் x-ன் பாலியல் வக்கிரம் பற்றிப் பார்க்கலாம்.
            பாலியல் வக்கிரம், x-க்கு அதிகாரம் கொடுக்கும் தளத்தால் (sphere) நடந்தேறியிருக்கிறது.
(இது, ஒரு பேருந்து நிலையத்தில் நடந்திருந்தால் விளைவுகள்.....? வாசகர்களின் யூகத்திற்கு விட்டுவிடலாம்).  அதிகார பால்வக்கிரம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு.
            இந்த வக்கிரம் ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கி, கல்லூரி வரை நிகழ்வாக வெளிவருகிறது.  சென்ற ஒன்றரை ஆண்டிற்கு முன்பு ஒரு கல்லூரியின் ஆய்வு வழிகாட்டுநர் (guide), பேராசிரிய மாணவியிடம் அத்துமீறி, அது போலீஸ் வழக்காயிற்று.  (இது போக ஆய்வு மாணவர்களிடம் லட்சக்கணக்கில் ஆய்வு வழிகாட்டுநர்களின் வழிப்பறிக்கொள்ளை).
(Y-என்ற ஆசிரியை மாணவனை Seduce செய்த, கதைகளும் வெளிவரத் துவங்கியுள்ளன இப்போது).
பேராசிரியர் x, ஆய்வு வழிகாட்டுநர் X-ன் வக்கிரம்.  மாணவிகளின் மேல் என்னவிதமான காயத்தை (trauma), மனப்பாதிப்பை (anxiety) உண்டாக்கும்?.
            அதிகார வக்கிரம் – வக்கிர அதிகாரம்.
            எதிர்பாராத பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் நிலையென்ன?
            தடுமாற்றம், பயம், அருவருப்பு, தடுக்கப்பட்டவைகள் உடைபட்டதால் ஏற்படும் Anxiety; மாணவி என்ற அடையாளம் திடீரென்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது.  நொடியில் பெண்ணானது (sexual object).
            ஆசிரியர் என்ற நம்பகம் சிதறடிக்கப்பட்டது, எதிர்காலம் பற்றிய பயம்.
            இப்போது மாணவியின் தன்னிலை (subject) பிளவுபட்டுவிட்டது.  இப்போது அந்தத் தன்னிலை பிளவுண்ட தன்னிலை (split subject / divided subject).  அதாவது, அப்பெண்ணின் தன்னிலை (subject S) என்பது $ என்றாகிவிட்டது.  அதாவது தன்னிலையில் பிரக்ஞை (ego), நனவிலி (unconscious) என்று பிளவுபட்டுவிட்டது.
            இப்போது, அந்தப் பேசும் being (இருப்பு) – ஆனது இரண்டு அவதாரமாக பகுதியாக மாற்றப்பட்டுவிட்டது (சித்தம்).
           
இப்போது நான் (I) என்பது பிளவுபட்டுவிட்டது.  ஒன்று Exposed; மற்றொன்று மறைவானது (hidden).


            இந்தப் பிளவின் பொழுது அந்நியமாதலும் (alienation) தனியாதலும் (separation) நடைபெறுகிறது.
            அதாவது, குழந்தை தாயிடமிருந்து பிரிவதுபோல், அப்பெண் (குழந்தை), மற்றமையிடமிருந்து (Other) / பேராசிரியரிடமிருந்து, சமமற்ற உறவில் (unevenly matched) இழப்பு அந்தப் பெண்ணிற்கு தவிர்க்க முடியாத்தாகிறது.
            இப்போது, அந்தப் பலிகடாக்கள் ஏன் எதிர்ச்செயலாற்ற முடியவில்லை என்பதை ஒருவாறு புரியமுடியும்.

                                   
மேலும், அப்போது, அந்தப் பெண் நான் (I) என்று உச்சரித்தால் பிரக்ஞையான நானல்ல.  அப்போது அந்த நான், இதர தன்மையிலான (other) நான், பிரக்ஞை பூர்வமானதல்ல.
            குழந்தை அமைதியாக இருந்தது என்பது தடைமீறலை ஏற்றுக் கொண்டது என்பதல்ல.  மாறாக, அது “Forced-choice’ (திணிக்கப்பட்ட தேர்வு).


   

‘Your money or your life’இது கொள்ளையனின் நிலைப்பாடு. (இது மிகப்பரவலாக, அரசியல் தளத்தில் பேசப்படும் ஒன்றாகும்)
வக்கிரப் பேராசிரியர்  "உன் மதிப்பெண் அல்லது என்    திருட்டு   அத்துமீறல்".
            தன்னிலையும் மற்றமையும் (Other):
            தன்னிலை இழக்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
            இந்த நிலை ஏற்படுவதற்கு எது?  யார்?  காரணம்.
            ஆய்வு வழிகாட்டுநரின், பேராசிரியரின் கடமை என்பது வழிகாட்டலும், மதிப்பெண்கள் தருவதும்தானே!
            இவர்களின் அதீத அதிகாரம், வக்கிரப் புத்தி உள்ளவர்களுக்கு, (பால்) வக்கிர அதிகாரத்திற்கு தளம் அமைத்துத் தரவில்லையா?
            மதிப்பெண்களா?  வக்கிரத்தை சகிப்பதா? என்பதில் மாணவிகளின் பலவீன நிலையைக் கொச்சையாகப் பார்ப்பது, ஒரு ரவுடியின் பாத்திரத்தை White collar வகிப்பது, அதன் மூலம் திருட்டு Phantasy சுகம் அடைவது.  இதற்கான மாணவியின் தற்காப்பு என்ன?
                                                           
வக்கிர அதிகார மீறலின் அதிகாரத்தை காயடிக்காமல்.  பேரானந்தத்தை (Jouissance), அதாவது திருட்டு மகிழ்வை, உபரியாகக் கிடைக்கும் திருப்தியை அடைய முயற்சிக்கும் x, X-களின் உந்தலைத் தடுக்க வேண்டும், என்பது ஒரு அரசியல் சிந்தனை, அரசியல் செயல்பாடாகும்.


ஆசிரியருக்கான தகுதியில் பட்டம், பட்டயம் மட்டும் போதுமா?  நெறிகள் போன்று எதுவும் வேண்டாமா?
            பொது வெளியில் விவாதிக்கலாமே.  முதலாளியத்திற்கு, நுகர்வியக் கலாச்சாரத்திற்கு அடிமையாய் இருந்துவிட்டால் தன்னொழுங்கு கூட தடை / கட்டுப்பாடாகத்தான் தெரியும். .