5 Jul 2018

வேலியே பயிரை அழித்தால் ..........?

து விவசாய நேரம்..நெல் போன்ற நஞ்சைகளுக்கும் வேலை தொடங்கும் நேரம்;       மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு விவசாயத்திற்கான தண்ணீரைப் பார்க்க முடிகிறது.
ஆனால்,இப்போது வளர்ச்சி என்னும் பேரில் விவசாய நிலங்களை பறிக்க கழுகுகள்       வட்டமடித்து வருகின்றன. மகா ட்ரக்காரர்கள், தொழில் அதிபர்கள் /
விஜய் மல்லையா, தூத்துக்குடி ஸ்டெர்லைட் அனில் அகர்வால் போன்றவர்களின்         ஆவலாதிக்கு வேரோடு பிடுங்கி பாலைவனமாக்குவதை வளர்ச்சி என்கிறார்கள்.
யார் என்று கேட்டால்?...நமது பயிர் பச்சைகளை காக்கவேண்டிய வேலிகள்!?

வேலியே பயிரை அழித்தால்
            விளைவு என்னவாக இருக்கும்.

இன்னும் ஒரு சில காலம் கழித்து மோடியின் சந்ததிகள் அவரைப் பார்த்து 
நெல்லு மரம் எப்படியிருக்கும் என்பர்.
பிறரை நேசிக்க, யோகா பழகுங்கள்.
யோகாவைச் சொல்லிக்கொண்டே விவசாயத்தை அழித்து விடலாம்.
ஸ்ரீராமன் மன்னிப்பார் உங்களை.


ன்மீக அரசியல்
     போராளிகளை போலீஸ் சுட்டு இறந்தால் 10 லட்சம்,
      விவசாயி கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டால்
10 லட்சம்,
பசுமை வழிச் சாலைகளாக 8 பாதை , 6 பாதை ரோட்டிற்காக அழிக்கப்படும்    நிலத்திற்கு ஏக்கருக்கு சுமார் 8 லட்சம்.
(இந்த அரசு கொடுக்கும் 8 லட்சம் எதற்கு?புரோட்டா திங்கவா)
வாழும் நிலம் தானாக ஒருபோதும் அழியாது.எத்தனையோ பரம்பரைகளை அது வாழவைக்கிறது;வாழவைக்கும்.
இந்த ஜனநாயக அரசில்,இந்த விவசாயிகளுக்கு அரசு இப்போது தரப்போவதாகச் சொல்வது ஏக்கருக்கு 8 லட்சம்.

அண்டை அயலானை நேசி என்று சொல்லி ,பின் அழிக்கப்பட்டது பல லட்சம்        போர் வீரர்கள்- மகா யுத்தத்தில்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அன்பு                 வள்ளலாரிடமிருந்து ஓடிவருகிறது;அதைக் கவனிக்கவும்.
க.செ