26 Nov 2014

முத்தமிட அனுமதியா? யாரிடமிருந்து?


நீங்கள் முத்தமிடும் உரிமைப் போராட்டத்தில் ஏன் குதிக்கிறீர்கள்.விரும்பினால் செய்து-
கொள்ள வேண்டிய ஒன்றை ஏன் அரசியலாக்குகிறீர்கள்?
பொதுவெளியில் விரும்பியபடி எல்லாம் விளையாடுவது நாகரீகமுமல்ல,சமூக ஆரோக்கியமுமல்ல.
எதனால் இத்தகைய உரிமை / போராட்டம் எல்லாம்... திடீரென்று?
நீங்கள் உலகளாவிய முதலாளியத்தின் பிடியிலும்,நுகர்வுக் கலாச்சாரம்,அதன் பகுதியான Virtual Reality (TV, Ad. )தூண்டலாலும்  (object petit a ) இந்த முத்தமிடும் ஆசையை அல்ல;பொதுவெளியில் முத்தமிடும் ஆசையை, virtual reality யை  reality யாக்கி மகிழ்வடைவதை உரிமை என்கிறீர்கள்.
தேர்வுசெய்த இடம் பொதுவெளி என்பதால்...கலாச்சாரப் போலீஸ் வந்து விடுகிறது; தண்டனைக் கணை அச்சுறுத்துகிறது.
கடந்துசெல்லும் பருவத்தை மடைமாற்றம் (sublimation)  செய்யப்படாததாலும் நுகர்வியக் கலாச்சாரத் தூண்டலுக்கு அடிமையானதாலும் எழுந்த இந்த உங்கள் ஆசையை நீங்களே நிராகரியுங்கள்.
கலாச்சாரப் போலீஸ்களுக்கு தளம் அமைக்க இடம் கொடுப்பது உங்கள் வருங்கால ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
[பொதுவெளி எல்லோருக்குமானது.அதில்...உங்கள் போராட்டம் அனைவரையும் பிரதிநிதித்துவம் பண்ணவேண்டும்.பிரச்சினை தனிமனித ஒழுக்கம் பற்றியதல்ல.சமூக ஒழுங்குபற்றியது-அது ETHICS]