3 Nov 2015

ஸ்டாலின்... ஆசைப்படுபொருளாக !? Object of Desire ?

"பிரதமர் மோடி" யாவதற்காக குஜராத் முதல்வர் மோடி ( கடந்த ) பாராளுமன்ற தேர்தலில் எத்தனை வகைத் தொப்பி ,ஆடை அணிகள் ;வகை வகையான உடல்மொழிகளில் பேசி ,சின்னத்திரையினரின் உதவியால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆனார். N R I கள் கூட கண்டு களித்து புகழாரம் சூட்டினர். ( இதற்கு உதவிக்கரம் நீட்டியது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி ,ஊழல் .)
       முடிவு , பா.ஜ.க வடமாநிலங்களில் பலமாக காலூன்றியது. மத்தியில் ஆட்சியை கைப்பற்றினர் ; மோடி பிரதமரானார் ; வெற்றிக் கொடியை உலக நாடுகளில் பதிக்க வலம்வந்து கொண்டிருக்கிறார்.
                அன்றைய தேர்தல் காலம், காட்சிக்குரியதாய் இருந்தது., மக்களும் கண்டுகளித்தனர். எல்லோருக்கும் திருப்தி.


 “ ‘ திருப்தி ( enjoyment   ) என்ற சொல்  jouissance    என்கிற லக்கானிய வார்த்தைக்குரிய ஒப்புக் கொள்ளப்பட்ட மொழியாக்கம் ஆகும்.  சமூக வாழ்வில் திருப்தியின் முக்கியமான பங்கை சிசாக் விளக்கியுள்ளார்.  ஆனால், திருப்தி என்பது  மகிழ்வல்ல  (  not pleasure ) என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.  சுசான்ஸ்  ( jouissance  ) என்பது மன உளைச்சலை (uneasiness or discomfort) உடன் கொண்ட (accompanied  ) புதிரான உவகையாக (strange fascination )  வெளிப்படும் உபரி திருப்தியாகும் ( surplus employment ).   (உதாரணமாக கார்விபத்தை ஆர்வமாக உற்றுப்பார்ப்பது ). திருப்தி (enjoyment) என்பது ஒருவகை கூடுதல் தூண்டலாகும் , தாஙகமுடியாத வலியில் மகிழ்வு ( unbearable pleasure in pain ) , கணக்கிடமுடியாத கூடுதலான ஏதோவொன்று (something more  ) ஆகும் ;  அது  மனிதர்களைத்  தூண்டுகிறது “.  -சிசாக்


                       இப்போது, தமிழகத்தில் அந்த யதார்த்தமற்ற யதார்த்தம் அக்டோபர் - 2015ல் தி.மு.க தளபதியால் தென்கோடியில் துவங்கி, மூன்றாம் கட்டத்தில் நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் முடிந்துள்ளது.
       இறுதியாக சென்னையில் முடிவு பெறும்.
       இனி, மிகச்சுருக்கமாக விடியல் மீட்புப் பயணத்தின் காட்சியை காட்டமுடியாது என்பதால் ;
       தளபதி ஆற்றிய காரியங்கள் சிலவற்றின் பட்டியல் இதோ....
      
·         கல்லுரி மாணவர் / மாணவிகளிடம் கலந்துரையாடல்
§  பேருந்து பயணிகளிடம் கைகுலுக்கல்
·         பேருந்தில் பயணம்
·         சாலையோரக் கடையில் தேநீர் அருந்துதல்
·         மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடல்
·         டாஸ்மாக் பணியாளர்களுடன் கலந்துரையாடல்
·         லாரி பாடி கட்டும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் ஆலோசனை
·         தறியில் அமர்ந்து அதை இயக்கிப் பார்த்த தளபதி
·         செங்கல் சூளை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்
·         வெள்ளி ஆபரண உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை
·         அரிசிஆலை- ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்.
·         பனை மற்றும் பாக்குமரத் தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடல்.
·         பெண்கள் / ஆண்களுடன் கைகுலுக்கல்
·         மாட்டுவண்டி தவிர பிற வாகனங்களை ஓட்டி காட்சிப்படுத்தல்.
·         வயல், நெசவு தொழிலாளராக காட்சி அளித்தல்.
       மூன்றாம் கட்ட இறுதியிலேயே நடைபயணம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. முதல்வர் ஜெ-யும் மக்களைச் சந்திக்க தயாராகும் செய்தி கிடைத்ததும் ;……..
       ஸ்டாலின்,  என்னைப் போல் சைக்கிள், நடைபயணம், ஸ்கூட்டி, பைக், ஆட்டோ, மற்றும் திறந்தவெளியில் நின்று மக்களிடம் பேசுவதற்கு ஜெயலலிதா தயாரா? மக்களைச் சந்திக்க தயாரா?
       அவர் ஹெலிகாப்டரில் வருவரா? விமானத்தில் வருவாரா? மக்களைச் சந்திக்க .உங்கள் வருகையை எதிர்பார்த்திருக்கிறேன் என சவால் விடுத்தார்  ......   - முரசொலி .29.10.2015.
       ஆக, தேர்தல் தேதி ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும் ; மாதம், தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் தேர்தல் களம் தயாராகிவிட்டது.
       தளபதி ஆற்றிய காரியம், தேர்தலுக்கானது என்பது எல்லோருக்கும் தெரியும். அவரும் வெளிப்படையாக ஆட்சிமாற்றத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார். இதுபோக, உளவியலாக, கருத்தியலாக, கட்டமைக்கப்பட்டது பற்றிய களஆய்விற்கு வரலாம்.
       ஸ்டாலினின் உடை, அவர் யார்யாருடன், எப்படி எல்லாம் கலந்துரையாடினார் ; அவர் உலாவலுக்கான நடைப்பயணம், வாகனங்கள் மூலம் அவர் தன்னையே ஒரு காட்சிப்பொருளாக  அவதாரம் எடுக்கிறார் . அப்போது , மக்கள் பார்ப்பதற்கான, ரசிப்பதற்கான, (திடீரென சாமானிய கடையில் டீ ; உருமாகட்டி, வேட்டியை மடித்துக் கட்டி , நாற்று நடுவதற்கான உதவியாளர் ; நெசவாளி , etc ....) காட்சிகள் கட்டமைக்கப்படுகிறது . அவர் தன்னையே மக்களுக்கான ஆசைப்படு பொருளாக்கி ( object ) விடுகிறார்.
       இதன் விளைவு மக்களுக்கு ஒரு உபரி திருப்தி  [ சுசான்ஸ் ( jouissance ) ] கிட்டுகிறது.
       இதுபற்றி மனஅலசல் ஆய்வாளர் சிசாக் கூறுகையில், தன்னிலைகள் ( subjects  ) பொதுவாக சுசான்ஸை ( jouissance ) விழிப்பாக உணரவில்லை ( not aware ) என்றபோதிலும் அனைத்து அரசியல்களும் திருப்தியின் (சுசான்ஸ்) பயன்பாட்டைச் சார்ந்துள்ளன. அதை சூழ்ச்சித் திறனுடன்(manipulate ) கையாளுகின்றன என்கிறார் சிசாக் . 
- The Sublime Objet of Ideology..
       இனி, கருத்துவம் எத்தனை உயரத்திற்கு கட்டப்படுகிறது என்று பார்க்கலாம்.
       கருணைமிகு தளபதி., விழுதுநிகர் தளபதி, கரும்புநிகர் தளபதி,.etc ...
       அதாவது, ஸ்டாலின் என்ற மனிதரை உன்னதமான ஆசைப்படுபொருளாக கட்டப்படுகிறது (  sublime object ) . 
“ பொதுவாக, உன்னதமானது ( sublime ) என்பது இயற்கையின் பிரதிநிதித்துவங்களை ,
 ( சிகரம், பள்ளத்தாக்கு, ஆறுகள் etc ) சொல்லுவது.
        இந்த இயற்கையின் கம்பீரத்தை - கருத்துகளின் கட்டமைப்பிற்கு சமமாக அதைக் கருதுமாறு மனதை வற்புறுத்துவதாகும் “ என்கிறார் சிசாக் .
       ( கட்டுரை நீள்கிறது ).இறுதியாக, எல்லா பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக, ( சாத்தியமற்றது என்பது ஏதுமில்லாதது மாதிரி ) ஸ்டாலினை ( தானும் ) அவர் குழுவினரும் முன்வைக்கின்றனர். அதாவது அதிகாரத்தின் Object-ஆக (Phallic object) முன்நிறுத்துகின்றனர். [ உதாரணம் : வேலையில்லாத் திண்டாட்டம், நிர்வாகப் பிரச்சனை அல்ல. அது இந்தியப் பிரச்சனையுடன், நுகர்வு முதலாளியத்துடன், இணைந்தது. இதை எப்படி தமிழ்நாடு சட்டசபைத் தீர்க்கும். காவிரியும், வைகையும் பிற மாநிலம், நடுவண் அரசு , உச்ச நீதிமன்றத்துடன்  இணைந்தது ஆகும் ] .
       தீர்வு என்பது ,நேரியலானது (Linear) இல்லை ; அது சிக்கலான , பலவகையானது . மக்களுக்கு , இப்பிரச்சனையெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனையுடன் கட்டப்பட்டது ; அதன் 
முரணியக்கம் சிக்கலானது என்று அதை தெளிபடுத்த எந்த முயற்சியும் நமக்கு நாமே- யில் இல்லை.

              இதன் மறுபக்கம் எப்படியோ ?
க.செ
2-11-2015

1 comment:

  1. For Stalin Article I think these poems by mu.Suyambulingam are suitable
    தளபதி
    என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
    எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

    மக்கள் கடல்
    தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
    வலை போட்டும் பிடிக்கிறார்கள்

    ReplyDelete