16 Dec 2018

இறை ஞானத்தை காசுக்காக விற்பவர்கள்


இப்போது ஒரு ஜூஃபியின் கதை….

 ‘’ ஜுனைத் பாக்தாதி எனும் ஒரு சூஃபி மகான்.அவரிடம் ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர் வந்து ஐநூறு பொற்காசுகள் கொண்ட ஒரு பணமுடிச்சை கொடுத்து ” இதை தங்கள் தேவைகளுக்காக வைத்துக் கொள்ளுங்கள் “ என்றார்.
பணமுடிச்சையும் அந்த செல்வந்தரையும் பார்வையிட்ட ஜுனைத் அவர்கள் “ தங்களிடம் இன்னும் பொற்காசுகள் நிறைய இருக்கின்றதா?” என்று கேட்டார்.
அதற்கு அந்த செல்வந்தர் மிகவும் பெருமையாக நிறைய இருக்கின்றது” என்று பதிலளித்தார்.
 “ தங்களுக்கு மேலும் மேலும் பணம் பெருக வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் மனதில் இருக்குமே? ” என்று மீண்டும் மகான் கேட்டார்.
     “ ஏனில்லை? நிறைய பணம் சேரவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்குமா? “ என்றார் அந்த செல்வந்தர்.
அவர் கொண்டுவந்து கொடுத்த பொற்காசுகள் அடங்கிய பணமுடிச்சை அவரிடமே திருப்பிக் கொடுத்தவாறு ஜுனைத் அவர்கள் கூறலானார்கள் : ”அப்படி என்றால் இந்தப் பொற்காசுகள் உங்களுக்குத்தான் மிக அதிகமாகத் தேவையாக உள்ளது . பணத்தின் ஆர்வம் என்னிடம் இல்லை. அந்த ஆசை உங்களிடம் நிறைய இருக்கின்றது.ஆகவே இது உங்களிடம்தான் இருக்கவேண்டும் “.

” நான் ” எனும் தன்னகங்காரம் தம்மிடமிருந்து அகற்றப்பட்டிருந்தால் பணத்தாசையோ / அதிகார ஆசையோ / புகழாசையோ அந்தத் தன்னிலையை அண்டாது.

இதனால்தான் ஜுனைத் பாக்தாத் என்ற அந்த ஜூஃபிக்கு ( ஞானி ) இதரர் வழங்கும் பொற்காசுகளை கொடுப்பவருக்கே திருப்பிவிடுகிறார்..     ( பொற்காசுகளின் ஒலி,ஒளி அவரை மயக்கமுடியவில்லை )
அப்துல்லாஹ் பின் முபாரக் எனும் ஜூஃபியின் ஆன்மீகம் இப்படிச் சொல்கிறது:
. “ உலகத்தை அனுபவிப்பதற்காக தம்முடைய இறை ஞானத்தை சொற்பக் காசுக்காக விற்பவன் இழிவானவன்

இந்தியத் துணைக்கண்ட வெளியில் எத்துனை ஆன்மீக மடங்கள் ! , எத்தனைவிதமான ஆன்மீக வியாபாரங்கள் !. ஆனால் ஜூஃபி ஞானத்திற்கு சுய ஒழுங்கு, கண்ணியம் , சுயமோகத்தை கட்டறுத்தல் ஆகியவை   ஞான வெற்றிக்கு பாதையாக உள்ளது.
ஜூஃபிகளின் தன்னிலை சுயமோகத்தின் பல அடுக்குகளை அறிந்துள்ளது. ஞானத்தின் லட்சணங்களில் ஒன்றாக சுயமோகப் பற்றறுத்தல் உள்ளது. அது ஜூஃபிகளின் சமூகச் சொல்லாடலாகவும் உள்ளது.
-    முள்ளிப்பள்ளம் பிட்சு

3 comments:

  1. ஆன்மீகம் எனும் பெயரில் சொத்து சேர்த்தல், சுகம் அனுபவித்தல் செய்துக்கொண்டே அதற்கு எதிரான மனநிலையைக் கற்பிதமாக்கி மதங்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்பவர்களின் மனநிலையைக் குறித்து சரியான கேள்வி எழுப்புகிறது கட்டுரை .

    ReplyDelete
  2. மதவெறி அல்லது இறையாண்மை:

    சொற்கள் பயன்பாடு சிந்தித்தற்குரியது. நன்று.

    ஆனால், ஆய்வு பன்முகப்படுத்தப்பட்டு சிதறிவிடுகின்றது.

    ReplyDelete
  3. சூ·பி என்றே எழுதலாம். ஜூ·பி என்பது சற்று சிக்கலாக இருக்கின்றது.

    ReplyDelete