12 Dec 2018

ஆன்மீகத்தன்னகங்காரம் ( RELIGIOUS NARCISSISM )


இந்தியாவின் ’ஆன்மீகவாதிகள்,’ நம்பிக்கைவாதிகளின்- பக்தர்களின் – தன்னகங்காரம் ( NARCISSISM ) நீதிபரிபாலனத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
ஐயப்பனை வழிபட அனைத்து வயது பெண்களுக்கும் உரிமை உண்டு    என்கிற உட்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பும், அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்தை எதிர்த்தும், ஐயப்பன் வாசஸ்தலத்தில் 144 தடை உத்தரவு போட வேண்டிய அளவிற்கு பெண்களின் வழிபாட்டு உரிமையை எதிர்த்து கலகம் செய்வதும், சட்டத்திற்கு அடங்க மறுப்பதும் இன்றுவரை தொடர்கிறது.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆன்மீகச் சொற்பொழிவு நடத்த சென்னை உயர்நீமன்றம் தடைவிதித்துவிட்டது.
இதற்கு ஆன்மீகத்தின் ( ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ) எதிர்வினை: 
“ சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினால் பெரியகோவில் இடிந்துவிடுமா?”
 ( இந்து தமிழ் டிச.4 2018)
ஒருவரின் தன்னகங்காரத்தை எதிர்க்க / ஒழிக்க அதை முற்றிலுமாக அழிக்கச் சொல்கிறது இந்திய ஆன்மீகம்.
முற்றும் துறந்த ஆன்மீகவாதிகளோ, தன்னின் ஆசை சட்டத்தால் மறுக்கப்பட்டவுடன், மனம் கொந்தளித்து, தன்னகங்காரம் வெடித்து,                   “ தஞ்சைப் பெரிய கோவில் இடிந்துவிடுமா? ” என்ற தீச்சொல்லை               உமிழ்கிறார்கள்..
      உயர்நீதிமன்றத் தடை என்று தெரிந்தும் எத்தி விளையாடுகிறார்கள்.
அரசியல் ஆன்மீகம் :  ராமர் கோவிலுக்காக அவசரச் சட்டம் இயற்றச்சொல்லும் இந்து இயக்கத்தினர்.
இவர்களின் போக்கு இந்தியாவில் விரைவில் மதக்கலவரத்தை தூண்டிவிடுவார்கள் போல் தெரிகிறது. பயங்கரவாதம் காவி வண்ணத்தில் சூலாயுதத்தை தூக்கும் காலமாகிவிட்டது.
தன்னகங்காரத்தை ( NARCISSISM ) வெல்லாமல் ஆன்மீகச் சொற்பொழிவு என்ன செய்யும்?
            லட்சங்கள் செலவுசெய்து உடையலங்காரம் அம்பானியிசமாகாதா?
[ அம்பானி தன் மகள் மணவிழாவுக்காக விருந்தினரை அழைக்க 100 விமானங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறார் ]
இந்த மனப்போக்கின் வீச்சு எதுவரை? எதிர்காலத்தில்.
                                                              க.செ.

No comments:

Post a Comment