17 Nov 2017

பேராசை எனும் BIG BOSS

பேராசையின் மூலாதாரங்கள் தெரியுமா? என்ரான்(Enran), வேர்ல்டு காம்(World com.), ஆண்டர்சன் (Anderson ) , அடல்பா(Adelpha) , ஹெல்த் சவுத் ( Health south ) ....இவைகள் பன்னாட்டு நிறுவனங்கள். சரி,  இது மறந்திருக்கலாம் .  கொங்கு நாட்டு ஈமு கோழிப் பண்ணைகள் , கொங்கு நாட்டு சீட்டுக்கம்பெனிகள், ஹர்ஷத் மேதா, கரூர் அன்புநாதன் , வேலூர் சேகர் ரெட்டி , ஜெயலலிதா , சசிகலா etc இவர்களெல்லாம் பொதுச் சொத்தை , மக்களின் பணத்தை தங்களின் பேராசைக்கு ஆகுதி ஆக்கிக்கொண்டனர்.
 முதல் பாராவில் சொன்ன பன்னாட்டுக் கம்பெனிகள் , குறிப்பாக அமெரிக்க வகை தொழில்நுட்ப சுரண்டலாம்.
கீழே கொடுக்கப்பட்டிருப்பது இந்திய கார்பரேட் கட்சிகளின் தலைவர்களின் ஊழல் பேராசையின் மொக்கை வடிவமாகும்.
லஞ்சம், திருட்டு, கறுப்பு பணம் என்பதெல்லாம் குறியீட்டுச் சொற்களாகும் . அடிப்படையில் வேசத்தைக் கலைத்துவிட்டால் பேராசை என்பது ஒளிவீசித் தெரியும்.
அரசாங்கம் இதற்கு குற்றத்தடுப்பு வழக்குப் ( criminal case ) போட்டு  ஏதோவொரு தண்டனையைக் கொடுக்கும். தனிமனித ரீதியில் மட்டுமே புரிதல் இருக்கும்.
பேராசையே அனைத்து சமூக அநீதிகளுக்குமான ஊற்றுக்கண்ணாகும். .இந்தக் கூற்றை கலாச்சார முன்னிருத்தலாக வெளிப்படுத்தியது நவீன உளவியல் அல்ல. அது யூத நெறியான 10 கட்டளைகளில் 10வது கட்டளையாகும்.
இங்கேயும் “ மண்பறீத்துண்ணேல் “; சொன்னது, பெண்ணியவாதி ஔவை .
யூத இலக்கியங்களும் பேராசையைக் கண்டிக்கிறதாம். மேலும் அதை தடை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் பேராசை என்பது பொருள்குவிப்புக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.
இங்கு 1951ல் நேரு காலத்திலேயே முந்த்ரா மோசடி 124 லட்சம்; 1960ல் தர்மதேஜாய் கப்பல் கம்பெனிக் கடன் ஊழல்; இந்திரா காலத்தில் நகர்வாலா ஊழல், ராஜீவ் ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி ஊழல்; 1992ல் நரசிம்மராவ் காலத்தில் ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் 8 லட்சம்  கோடிகள்; லாலு பிரசாத்தின் மாட்டுத்தீவன ஊழல் 900 கோடிகள்,
இவைபோன்ற இன்னபிறவைகள் பழைய ஊழலுக்கான மாதிரிகள்.
இன்றைய காலக்கட்டத்தில் ...
காமன்வெல்த் விளையாட்டு நிதி -7000 கோடிகள் -சுரேஷ் கல்மாடி
2013ல் சாரதா சீட்டுக் கம்பெனி மோசடி 40000 கோடிகள். ,இது வங்காளத்தில்.
தமிழ்நாட்டில் சேகர் ரெட்டி 500 கோடிகள் , கரூர் அன்புநாதன்... இன்னபிற.
(ஜெ,சசிகலாவின் பேராசை எத்தனை ஆயிரம் கோடிகள் என்று சரியாகத் தெரியவில்லை) இநத பேராசையே அதிகாரத்திற்கான மூலதனமாகவும் உள்ளது.
ஒரு எம்எல்ஏ , எம்பி சீட்டுக்கு கோடிக்கணக்கில் மக்களுக்கு ஓட்டுக்காக / அதிகார வெறிக்காக பணத்தை வீசி எறிகிறார்கள் . மொத்த எம்பி சீட்டுகள் , இந்தியாவின் அனைத்து எம்எல்ஏக்களுக்குமான ஓட்டுகளுக்காக எத்தனை லட்சம் கோடிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வீசப்பட்டிருக்கிறது . இதுவரை நடந்த தேர்தல்கள் எத்தனை என்று கணக்கிட்டால் அது கோடி கோடிகளாக இருக்கும்.
அரசியல் பொதுவெளியில் , மக்களின் கலாச்சாரத்தில் சீரழிவு மனப்போக்கை வெகு தாராளமாக விதைத்து எங்கு பார்த்தாலும் விஷமுள்ளான சீமைக்கருவேலம்தான். மக்களின் ஆரோக்கியமற்ற மனபாவத்தால் தேர்தலின்போது விலையில்லா பொருட்களுக்காகவும் , இலவசத்திற்காகவும் கூச்சமில்லா எதிர்பார்ப்பிற்கு அடிமையாகிவிட்டனர் ; பேராசைக்கான விளைநிலமாகிவிட்டனர்.
பேராசையால் குவித்த கோடிகளை உடையவர்களை, மக்களில் பெரும்பாலோர் அம்மா என்றும், சின்னம்மா என்றும், ஐயா என்றும் பாதாரவிந்தங்களில் அடிபணியக் காத்திருக்கின்றனர் 1
ஆசை என்பது பேராசையாகவே ; பிறர்பொருளைக் கவர்வதற்கான பேராசையாகவே உள்ளது . தெருவில் போகும் பெண்களின் பொருளைக் கவர்வது ; வீட்டில் உள்ள மூத்த குடிமகன்/மகளைக் கொன்று கொள்ளையடிப்பது; செல்பி நாட்டம் பரவியது கல்லூரி மாணவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டிவிட்டிருக்கிறது.
அத்துடன் பட்டம் பதவிகளுக்கான லஞ்சக் கலாச்சாரத்தை ஊக்கிவிடுகிறது.
“பேராசையே அனைத்து சமூக அநீதிகளுக்குமான ஊற்றுக்கண்ணாக உள்ளது“ என்கின்றனர். பிறர் பொருளைக் கவர்வதற்கான பேராசையானது மனித உறவுகளைக் குலைத்துவிடுகிற்து . இதனால்தான் யூதநெறியானது ‘எனக்கே முதலில்‘( me- first) என்கிற கவர்ந்து கொள்ளும் ( grabbing ) தூண்டலை மட்டுப்படுத்துமாறு முன்மொழிகிறது என்கின்றனர் . இத்தோடு செல்வப்பெருக்கால் வரும் பெருமையை கடுமையாக மறுக்கிறது யூத மதம்.
பேராசை என்பது கற்பிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது ; அது பாரம்பரியமாகவே சுவீகரிக்கப்பட்டதாக ,  அல்லது பொதுவானதாகவோ இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பேராசை பற்றி மன அலசல் கூறுவது :
 “லிபிடோ ( libido) , குழந்தை வாயின் ஆதார ஆற்றலாக , உடலின் முக்கிய அங்கமாக உள்ளது . இயல்பான மன எழுச்சி வளர்ச்சிப் போக்கில் இந்த உந்தலானது சமூகரீதியாக ஒப்புக் கொள்ளத்தக்க , பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளாக , உதாரணமாக , இடப்பெயற்சி (displacement) , புனிதப்படுத்துதல் (sublimation), பதிலீடு செய்தல் (substitution) மற்றும் எதிர் நடவடிக்கை உருவாக்கம் (reaction formation) போன்றவைகளைச் செய்ய  உந்துகிறது  என்கின்றனர்.
      ஆதார ஆற்றலுக்கு மகிழ்வு கிட்டாதபோது அவன் / அவளுக்கு மனப்பதட்டம் ( anxiety ) மன இறுக்கம் (tension) , விரக்தி ( frustration ) போன்றவைகளாக அது வெளிப்படுகிறது “ என்கிறார் ஆப்ரஹாம் (1927)
      தேவைக்காக மட்டும் பொருள்குவிப்பு நடக்கவில்லை . மாறாக, பொருட்களைச் சேகரிப்பதில் , பிறர் அறியாமல் பதுக்கிவைப்பதில் ( hoarding ) கிடைக்கும் இன்பத்திற்காகவே பொருள்குவிப்பு நடைபெறுகிறது . அதாவது , பொருள்குவிப்பானது தனி அடையாளம் சார்ந்த ஒன்றாக , பாதுகாப்பு , நிம்மதி , அதிகாரத்தைப் பதிலீடு செய்கின்ற குறியீட்டு நடவடிக்கையாகவே உள்ளது . பணம் என்பது மரணமற்ற ( eternity ) வாழ்வை அடைவதற்கான மாய அதிகாரத்தின் ( illusive power) குறியீடாக உள்ளது என்கிறது மன அலசல்.

 குழந்தை வளர்ப்பை ஆய்வு செய்யும் அட்லர் (Adler ) , Getting Type 
(விரும்புவதையெல்லாம் அடைகின்ற வகைமாதிரியினர்) என்ற கருத்தை
முன்வைக்கிறார்.
” குழந்தை வளர்ப்பின்போது குழந்தைகளிடம் செல்லம் காட்டுவது அல்லது சலுகை காட்டுவது , தாராளமாக அனுமதிப்பது ( permissiveness ) மூலம் விரும்புவதையெல்லாம் பெறுகின்ற வகைமாதிரியின ( getting type ) சித்த ஆளுமைப் பண்பு வளர்ச்சி அடைகிறது. குழந்தைகளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் அடைவதற்கு , விரும்புவதை யெல்லாம் பெறுவதற்கு , மற்றவர்களைவிட கூடுதலாகப் பெறுவதற்கு குழந்தைகள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக தனிமனித ஆளுமை ( personhood ) என்பது அவர்களுடைய பொருளாதார சொத்து மதிப்பிற்கு சமமானது என்றாகிவிடுகிறது.
      பாதுகாப்பற்றவர்களாக , அங்கீகரிப்பு தேடுபவர்களாக உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மனம் விரக்தி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் குழந்தைகளின் உடனடியான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று , இடம்கொடுப்பவர்களாகிவிடுகிறார்கள்” என்கிறார்  அட்லர்.
      குழந்தைகள் தங்களைத் தாங்களே சார்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன,பேராசைக்கு செல்வம் ஈட்டப்படும் வழிமுறைகள் ஒரு பொருட்டல்ல. பணம் பணத்திற்காகவே குவிக்கப்படுகிறது.
      வரைமுறையற்ற செல்வக்குவிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி கவலை இல்லை.இயற்கை ஆதாரங்கள் அழிப்பு , சமூகப் பிளவுகள் , இல்லாமையின் துன்பம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஈட்டிக்காரர்களாக உலாவுகின்றனர் .
பேராசைக்கு வழிவகுக்கின்றது சுயமோக ஊக்கிகள். இன்றைய தமிழகத்தில் பேராசையும் பொருள்குவிப்பும் நீக்கமற நிறைந்துள்ளது.
பொருள்குவிப்பை நுகர்வுக் கலாச்சாரம் மிகச் ‘சிறப்பாக‘ கையாளுகிறது. ஆடித் தள்ளுபடியை தமிழகத்தின் பண்டிகையாக ஆக்கிவிட்டார்கள்.
பேராசைக்கு தீனி போட்டு வளர்ப்பதில் குடும்பத்திற்கு கணிசமான பங்குள்ளது. கள்ளத்தனமான வர்த்தக நடவடிக்கை, அரசு ஊழிய உடம்புகளின் லஞ்ச லாவண்யங்கள் இன்னபிற.
இதனால் இவர்களின் பிள்ளைகள் பிறர் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். நண்பர்களின் தேர்வு கூட சொத்துக் குவிப்பில் பெரும் பங்குவகிக்கிறது. பிள்ளை, மனைவிக்கு செல்வம் ஈட்டப்படும் வழிமுறைகள் ஒரு பொருட்டே அல்ல.
தங்களின் பெருந்தீனிக்கு செல்வம் இருந்தால் போதும் என்கிற மனோபாவமே மேலோங்கியுள்ளது.
பேராசைக்குணம் பெருமளவில் கற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதற்கு நெய் ஊற்றி எரியும் தீபமாக நுகர்வுக் கலாச்சாரம் இருக்கிறது.
ஒரு மதத்தின் மறை நெறி கடின உழைப்பை புனிதமானதாகக் கூறுகிறது ( hard work as sacred ). பாவ மன்னிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சொத்துக்குவிப்பு என்பது மதரீதியான கடமை என்கிறது.
இப்போது சுயநலம் என்பது கேவலமான ஒன்று என்பது போய் சமூக இயல்பாக, கந்துவட்டிக் கலாச்சாரமாக உலாவி வருகிறது. இதனால் வரும் உயிர்ப் பலி கூட பரந்துபட்ட மக்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் வித்திடவில்லை என்பது ஆச்சரியமாகும். காரணம் மக்கள் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஈர்ப்பு,வசியம் ஆகியவற்றின் அடிமைகளாக இருக்கின்றனர்.
இந்த ஈர்ப்பு,வசியம் ஆண்டு முழுவதையும் ஆடி மாதமாக மாற்றிவருகிறது.
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் ( buy one ; get one free ).அதிரடி ஆஃபர்
( Offer ) பேராசையைப் புரிந்துகொள்வது என்பது மட்டுமே பேராசைக் குணத்தைப் போக்குவதில் பலனளிக்கப் போவதில்லை..

உளவியல்நுட்ப ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமலேயே  தன்முனைப்பு சுயத்தின் வளர்ச்சியில் ( ego development ) மட்டுமே கவனம் குவித்து , நனவிலித் தளத்தில் மாற்றங்களைத் தூண்டிவிட முடியும் என்றாகிறது. கல்வி அறிவார்ந்த அறிதிறனை ( intellectual curiosity ) வளர்க்க முடியும்; தனிமனித ஆற்றலை ஊக்கப்படுத்த முடியும்.. கலை , இலக்கியம் சார்ந்தவைகளைத் தேடுமாறு தூண்டமுடியும். விளையாட்டுத் தளத்தில் ஈடுபடுமாறு தூண்டலாம்.
மற்றொன்று கல்வியாளர்களுக்கு :
பேராசை, நுகர்வுக் கலாச்சார வசியத்தை எந்தெந்த முறைகளில் மறு உற்பத்தி செய்கின்றன, வலுப்படுத்துகின்றன என்பதை கல்வியாளர்கள் பொறுமையாக, பலவந்த மில்லாமல் கட்டுடைத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
அதைப்போலவே , நிலவுகின்ற பொருளாதார அமைப்பின் விழுமியங்களானது எவ்வாறு இந்த அமைப்பிற்கான பலிகடாக்களை உருவாக்குகின்றன என்பதையும் கல்வியாளர்கள் தெளிவாக விவரித்துவிடவும் முடியும்.
பேராசை நடத்தைகளின் ஊற்றுக் கண்கள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது , உளவியல்ரீதியாக ஒருங்கிணைப்பதில், சமூக விழுமியங்களை அகவயப்படுத்துதல் , சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், மன அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளிப்பது போன்றவை அடங்கும்.
குறிக்கோளாக, பிறர் நலன் பேணுதல், படைப்பாக்கத் திறனை வளர்த்தல் , மனித குலத்துடனும் பிற ஜீவராசிகளுடனும் உறவுகளை வளர்த்தல், இதரரை சமமாகப் பாவித்தல் , பரஸ்பரம் பிறர்மீது அக்கறை செலுத்துவது மூலம் பதிலியாகும்பொழுது தன்னிலையானது சுதந்திர உணர்வைப் பெறுவது சாத்தியமாகும்.
க.செ


உதவிய கட்டுரைகள்
The  pathogenesis  of  Greed  :causes  and  consequences –Arthur Nikelly
 ( international journal of applied psycho analytic studies -2006 )
Abraham  ( coblentz 1965 )
படங்கள்உதவி ww.google.co.in

நன்றி:
                                                        மற்றமை பற்றி.. ஜமாலன்

6 Nov 2017

தொட்டால் சிணுங்கி ( or )

டிசம்பர்-6

“ கமல் ஹாசன் சுட்டுக் கொல்லப்படவேண்டும் “ – இந்து மகாசபைத் தலைவர் பண்டிட் சுவோக் ஷர்மா.- INDIA TODAY –NOV.4,2017
ஐயா , பண்டிட் அவர்களே, நீவிர்  இவ்வளவு தொட்டால் சிணுங்கியாக இருந்துகொண்டு மகாசபையை எப்படி வழிநடத்துவீர் ?
இங்கு ஒன்றைக் கவனியுங்கள்.
“ மன எழுச்சியின்றி காண்பானும் இல்லை ; காட்சியும் இல்லை “
இந்தக் கூற்று மன அலசல் சார்ந்ததில்லை ; ஆன்மீகம் சார்ந்தது. அதாவது’ , எந்த மதமும் சார்ந்ததில்லை. எளிமையாகச் சொன்னால் சுயமோக வெறிக்கு எதிரானது .
இது நான் என்ற அகம்பாவத்தை அழிக்க / ஆசையின் மூலத்தை அறிந்து அதை அழிக்க வந்த ஆத்ம விசாரத்தின் ஒரு வரியாகும் . [ தன்னிலை என்று கூடப் புரிந்து- கொள்ளலாம் ]  .உங்கள் அக மனத்தைநோக்கி / உள்முகமாக பயணப்படுங்கள்.. காண்பானும் / காட்சியும் அகன்றுவிடும்..
கமல் ஹாசனை ( அவர் கருத்தை ) ஆதரித்து எழுதும் எழுத்தல்ல இது .ஒரு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் மனப்பாதிப்பினால் தீங்கான / தீய கட்டளையை அணிகளுக்கு அறைகூவல் விடுவதை எண்ணி வியப்பினால் எழுந்த எழுத்துதான் இது .
“ எங்கே ஒரு இந்துத் தீவிரவாதியை காட்டுங்கள் ? என்ற சவாலை இனி அவர்கள் விடமுடியாது “ . இதுதானே நடிகர் கமல் கூறியது .ஆனந்த விகடன் 8-11-77.
இந்தக் கணத்தில்கூட நடிகர்தான் அவர் ; அரசியல் பேசும் நடிகரே தவிர , பாராளுமன்றவாதக் கட்சியின் தலைவர் அல்ல .
அவர் சொன்ன கருத்து உண்மையா , பொய்யா ? என்ற அறிதல் கேள்விதானே முதலில் வரவேண்டும். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியின் கோபத்தைக் காட்டி கல்புர்க்கி ,கௌரி லங்கேஷ் போன்றவர்களுக்கு விதித்த மரண தண்டனையை ஏன் விதித்தீர் ?
“ கமல் ஹாசன் சுட்டுக் கொல்லப் பட வேண்டும் “ என்று தீர்ப்பளித்த நீங்கள் யார் ? இந்து மகாசபை என்ற பெயருள்ள முன்னணி அமைப்பு தானே அது . இந்தியாவின் அனைத்து இந்தியரும் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரல்லவே நீங்கள் ? [ மோடியே எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். நேரடியாக இந்திய மக்களால் அல்ல]
இந்தச் சூழலில் இல. கணேசன், எம்பி ( தமிழக பாஜக வைச் சேர்ந்தவர் )“ நடிகர் கமல் ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த கருத்து பற்றி விவாதம் நடத்த வேண்டும் “ என்று கூறியிருக்கிறார் . உங்களை மாதிரி ஆயிரம் தலை வாங்கப் புறப்படவில்லை
மரண தண்டனையை எந்த விசாரணையுமின்றி ஹிட்லர் பாணியில் நீங்கள் கொடுத்தது ஏன் என்று தெரியுமா? இந்து தீவிரவாதம் என்றவுடன் மனக் கொந்தளிப்பு ( affect ) வசப்பட்டுவிட்டது உங்கள் மனம் . இப்படி வார்த்தைகளைக் கேட்டாலே ஒரு குழு / மதம் பற்றிய கருத்து என்று முன்முடிவுக்கு வந்து பழகிய மனசு உங்கள் அமைப்பு .
இம்மாதிரி தடாலடி தண்டனைக்கான காரணம் உங்கள் உளவியல் அடையாளம்
( psychological identity ) முதிர்ச்சி பெற்று நிலையான சுயமாக கெட்டிதட்டி போயிருப்பதுதான். அதனால் எவ்வித ஆய்வுமின்றியே ,  ‘ நாராயணா ‘ என்ற பெயர் ஓசை கேட்டாலே , மகன் என்றும் பாராமல் மரணதண்டனை விதித்தானே இரண்யகசிபு , அவன் ஞாபகம் தான் வருகிறது உங்களை நினைத்தால் .
பயங்கரவாதம் / தீவிரவாதம் பற்றிய ஆய்வு  மொக்கையாக பூமியில் பலவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரான்சின் கார்ட்டூன் பத்திரிக்கையை விமர்சித்ததற்காக அந்த பத்திரிக்கை ஆசிரியர்களைக் கொன்றது ,கொலையாளியை போலீஸ் சுட்டுக் கொன்றது . ஒரு உலகப் பயங்கரவாதமாக எவ்வித விசாரணையுமின்றி லட்சக் கணக்கில் கூடி பயங்கரவாதத்தை எதிர்த்தது. இப்படியான கூத்து கூட கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது.
“ தீவிரவாதம் / பயங்கரவாதம்
“ பயங்கரவாதக் கருத்தியலின் அடிப்படையாக உள்ள நம்பிக்கைகளை சந்தேகிக்க அல்லது விமர்சிக்க முடியாது “.
கருத்தியல் செயல்பாடு
    “கருத்தியல் நடத்தைசார் கடமைகள் (behavioral mandate ) , வழிநடத்தி , நியாயப்படுத்தும் நம்பிக்கைகளை  அளிக்கவேண்டும் . அந்த நம்பிக்கைகள் புனிதமானவைகளாக , மீறக்கூடாதவைகளாக , கேள்விக்குட்படுத்த முடியாதவையாகவும் , முன்னெப்போதுமே சந்தேகத்திற்கு உட்படாதவையாகவும் இருக்கவேண்டும்.
       மத அடிப்படைவாதக் கருத்தியல்களில் பிளவுபட்ட, முற்றுமுழுதான ‘ நல்லது –கெட்டது ‘ என்று பிரிக்கிற சிந்தனைகளும் , நியாயம் குறித்துப் பேசும் சிந்தனைகளும் பொதுவாகக் காணக்கிடக்கின்றன “ – Kernberg.
                ஆகவே , இந்த ‘ புண்ணிய பூமியில் ‘ கமல் கொஞசநாள் வாழ்ந்து தீவிரவாதம் / பயங்கரவாதம் பற்றி மக்களையும் விவாதிக்க வைத்தபின் தீர்ப்பிடுங்கள்.- இப்போது மக்கள் கருத்துக்கு , விவாதம் எல்லா முனைகளிலும் நீங்கள் நினைத்தால் நடத்தலாம்…. நடத்த வேண்டும் .
நீங்கள் விதிவிலக்கு என்று முடிவுபண்ணிக்கொண்டு பாசிச குட்டையில் விழாதீர்கள் . மக்கள் ஜனநாயகம் எல்லாவற்றையும்விட முக்கியமானதாகும் ; அடிப்படையானதாகவும் இருக்கிறது ...
.இனி உங்கள் விருப்பம்
க.செ


உதவிய நூல் :

‘ பயங்கரவாதம் ‘ ஓர் உளவியல் பார்வை - கார்முகில் பதிப்பகம்

3 Nov 2017

கருத்தியல் மாயை

தலித் என்பது ஒரு கருத்தியல் ( ideology )
முதலில் கருத்தியல் என்றால் என்ன என்பதை அறியலாம்.
“  கருத்தியல் ( ideology ) என்பது கருவியாகச் செயல்படுகிற ஒரு அறிவாகும் (  instrumental reasoning ) . கருத்தியல் ஒரு மனப்பாங்காகும் ( attitude ) . சமூக மேலாண்மையில் அது ஒரு செயல்பாடு மட்டுமல்ல ; கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகவே உள்ளது “ – சிசாக்.
தலித் என்பது தன்னளவில் தலித்தாக இல்லை. அது எப்போதும் பாராளுமன்றம் , சட்டசபை அரசியல் நடவடிக்கையுடன் ஒரு அதிகாரத்திற்கான சொல்லாடலாக இணைக்கப்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் தலித் கருத்தியல் பல குறுங்குழு அர்த்தத்துடன் அரசியல் தளத்தில் பலவாக ஊடாடுகிறது.
“ கருத்தியலின் உண்மைத் தன்மையை (  truth ) நாம் நம்பவேண்டும் என்பதற்காக , கருத்தியலானது  ஒரு கோட்பாடாக , கருத்துக்களின் தொகுதியாக , நம்பிக்கையாக , கருத்தாக்கங்களாக , இன்னபிறவாக உள்ளது என்கிற பரவலான கருத்து முன்வைக்கப்படுகிறது  ”  - சிசாக்
இவ்வளவு நீண்ட முன்தயாரிப்பு ஏன் என்றால் தமிழ் இந்து நாளிதழின் ‘ சமஸ் ‘ செப்டம்பர் 2017-ல் நடுப்பக்கக் கட்டுரையாக சாதி ,மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அடையாள அரசியலுக்கு இருக்கிறதா ? எனக் கேட்கிறார்.
தமிழ் சமூகம் தன்னையே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி ஒன்றையும் முன்வைக்கிறார்.
ரஜனி , கமல்ஹாசன் , இவர்களோடு திருமாவளவனை ஒப்பிட்டு , நடிகர்களுக்கு இருக்கும் நம்பிக்கை ( தமிழ்நாட்டின் முதல் மந்திரி பதவி ) திருமாவுக்கு ஏன் இல்லை  (தமிழகச் சூழல் இல்லையே) என்ற கேள்வியோடு நிற்காமல் “ எங்கும் தமிழ் , எதிலும் தமிழுக்காக முழக்கமிடும் தமிழ்ச் சமூகம் மிக ஆழமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி இது “ என்கிறார்.
தமிழை முன்னிலைப் படுத்தாமல் தமிழக அரசியல் சூழலைப் பற்றி விவாதிக்கலாம்.
முதலாவதாக மறத் தமிழனின் அரசன் அம்மணமாக ஊர்வலமாக வருவதை பலமுறை பார்த்திருக்கிறான் : பார்த்துக்கொண்டும் இருக்கிறான். ஆனால் , அரசன் அம்மணமாக உலா வருவதை / ஆட்சி செய்வதை அவனால் உணர முடியவில்லை. அவ்வளவு ஞானம் தமிழனுக்கு. தமிழனிடமிருந்து இதையே நீக்காமல் இருக்கும்போது , ஒரு விலை அவர்களும் கொடுத்துத்தானே ஆகவேண்டும்.
அடுத்ததாக ‘ சாதி ஒழிக , தமிழ் வாழ்க ‘ . இது திருமாவளவனின் அறைகூவல் என்கிறார். இதற்கு தலித் அல்லாதோர் கூறக்கூடிய பதில் என்ன?
சமஸ் உங்களுக்கு சாதியம் / சாதிய உணர்வு என்றால் என்ன என்று தெரியாமல் இருக்கலாம் . ஆனால் , அதன் நடைமுறை அரசியலில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
உறவு பற்றிய நெறிகள் எந்தக் குழுவில் , சாதிய ஒழிப்பிற்கான உறவு / ஒழுங்குடன் செயல்படுகிறது ?
“ உறவுமுறை என்பது மனிதத்  தன்னிலையின் மையமாகும் “ என்கிறார்  Stephen Frost.
சட்டசபைக்கு ஓட்டுச் சேகரிக்கும் நேரத்துடன் , சாதி ஒழிப்பிற்கான நேரத்தை ஒப்பிடுங்கள் சமஸ் . அப்பொழுதுதான் சாதி ஒழிப்பின் தீவிரம் பற்றி வெளிப்படையாகும்.
       “ மனக்காயம் , ஒடுக்குதல், துன்ப துயரங்கள் இவைகளுக்கு ஊடாக இதரத் -தன்மையுடன் ( otherness ) நல்லுறவை ஏற்படுத்துவதற்கான வேலையை சாதி ஒழிப்புச் சிந்தனை மேற்கொள்வது பற்றி வெளிச்சத்திற்கு வரும்.
விலக்குதலும் , மனிதாபிமானமற்ற தன்மையும் நிலவுகிற , தீவிரமான அரசியல் முரண்பாடுகளிலும் நாசகரமான வெறுப்பு மனப்பான்மை நிலவுகிற தளத்தில் உண்மை அறியும்’ ,  வேற்றுமை அகற்றி சமரசப்படுத்தும் குழுக்களிலாவது இத்தன்மைகள் என்ன வடிவில் செயல்படுகிறது ?
சாதியத்தை நீக்கிவிட்டு மனிதத் தன்னிலைகளைக் கட்டமைப்பவையாக எது உள்ளது ?
சாதிகளின் சமத்துவம் எதன்மேல் கட்டப்படுகிறது ?
ஒருவரை  ஒருவர் , எப்போது , எப்படி அங்கீகரிப்பார் ?
ஒரு சாதி , பகை முரண்பாட்டை விட்டு , மற்றொரு சாதியை அங்கீகரிக்கும்பொழுது , லட்சிய , பரஸ்பர உறவு சாத்தியமாகும் . அப்போதுதான் இருவரும் சமமாவார்கள்.
“ அங்கீகரிப்பின் நெறி என்பது பிறரை வாழவிடுவதில் உள்ளது “ என்கிறார் Judith Butler.
ஜூலியா கிறிஸ்தவா “ நமக்குள் உள்ள நனவிலியானது பிறரை இதரராக, அன்னியமானவராக , புதிரானவராக ; விளக்கமுடியாத , சொல்ல முடியாதவராகவும் ( real ) பார்க்கிறது. அதாவது , புதிரானவராகவும் ( uncanny ) நமக்கு நாமே அன்னியர்களாகவும் , பிளவுபட்டவர்களாகவும் உள்ளோம் “ ( we are our own foreigner ; we are divided ) என்கிறார். 
                சித்தப்பிளவை ( சாதிகளின் ) நீக்க ,
       ஒருவரை ஒருவர் சமமாகப் பாவிக்க என்ன திட்டங்களைத் தன் அணியினரிடமும் , இதரரிடமும் முன்வைக்கின்றனர்.
       பாராளுமன்ற / சட்டமன்ற அரசியல் அதிகாரத்திற்காகத்தானே அணிதிரட்டல்
( mobilization ) நடத்தப்படுகிறது ? சாதியப் பகைமை கூர்மையடையத்தானே செய்யும்.
       தலித் அரசியல் என்று பொது வெளியில் பேசுபவர்களின் விசுவாசம் எதன் பக்கம் இருக்கிறது?
       விசுவாசம் சாதி ஒழிப்பில் இருக்கிறதா , அல்லது சாதி உட்பிரிவிற்கான அதிகாரம் தேடுதலாக இருக்கிறதா ? சாதியத் தீயை ஊதிப் பெருக்கத்தானே செய்கின்றனர் ?
       பகுதிக்கும் முழுமைக்கும் உறவு உண்டா , இல்லையா ? என்னவகை ?
       உறவை அரசியலாக்கியிருக்கின்றனர் இதுவரை.. நிச்சயமாக தாழ்த்தப்பட்டவர்கள் முன்புமாதிரி இல்லை. அடங்கமறுப்பது , தங்களுக்கான அரசியலில் வளர்க்கப் பட்டுள்ளனர் . ஆனால் , கிராமத்தில் பிறருடன் எப்படி அரசியல் உறவு கொள்வது ? தெரியவில்லை , குழப்பம் ; பிற்பட்ட சாதியின் நிலமற்ற கூலித்தொழிலாளி கூட பகையாய் தெரிகிறான் . எந்தவகையான நெறிகள் தலித் அரசியலுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன ?
       சமூகத்தில் ( கிராமம் , நகரம் ) மனிதர்களுக்கிடையில் உறவு பற்றிய நெறி (ethics)  எப்படியிருக்கவேண்டும்? நெறி என்பதை இங்கு ஒழுக்கம் என்ற பொருளில் கூறவில்லை.
       லெக்கானின் மன அலசலின் அடிப்படைக் கூறான நெறிகள் ( ethics ) பற்றி புதிய பரிமாணம் கட்டப்பட்டுள்ளது.
       லெக்கான் நெறியை கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.
       “  மனிதர்களாய் உள்ள நாம் , சரியான முறையில் செயல்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்  என்பதாகும்  “ .
நெறியின் செயல்பாடு பலவாகச் சொல்லப்படுகிறது .இங்கு அனைத்தையும் கொடுக்க இயலாது . போகப்போக அறிமுகமாக்கிக்கொள்ளலாம் “ நெறி “யை .
“  நெறி ”க் கோட்பாட்டைத் தத்துவவாதி “ஆலன் பேடோ ” –வும் ஒத்துப்போகிறார் ; அவர் அதை வளர்க்கவும் செய்கிறார்.
ஒழுக்க விதிகளைப்போல் மனிதனை பிளவுபடுத்தாது ( நல்லது / கெட்டது ) எப்போது நெறி இயக்கத்திற்கு வரும் என்பதை லெக்கான் இப்படிச் சொல்கிறார் ,
“ ஒரு தன்னிலையானது , சமூகக் கட்டமைப்பில் நனவிலியாகத் தேடுகிற நல்லது குறித்த பிரச்சினையை எழுப்புகின்ற அந்தத் தருணத்தில் “ நெறி “ துவங்குகிறது . இந்தக் கணத்தில் தீர்மானகரமான உறவைக் கண்டுபிடிக்க அவர் இட்டுச் செல்லப்படுகிறார் “.
இங்கு மொன்னையான அரசியல் பேசப்படவில்லை .ஆரோக்கியமான உறவு மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக நெறிகள் வருகின்றன. நெறிகள் ஆத்திசூடியல்ல மனப்பாடம் செய்ய . அவை நனவிலியாக வந்து திசைகாட்டும் வழிகாட்டியாகும் . இவை கட்டப்படவேண்டும்.
“ பிளவுபட்ட தன்னிலைகளுக்கிடையில் எவ்வகையான நெறி உறவு இருக்கமுடியும் ?
“ ஒருவரை ஒருவர் மதிக்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவும் “ – லெக்கான்
                                                                                                                       -Seminar- Ethics of Psychoanalysis


நெறியின் ( Ethics ) நடைமுறை வெளிப்பாடு பற்றி ஒரு சின்ன உதாரணம்.

திப்பு ஜெயந்தி
....”  மைசூருவை ஆண்ட மன்னனும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவருமான திப்பு சுல்தானின் பிறந்த நாள் ஆண்டுதோறும் நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது . கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக அரசு இந்நாளை ‘ திப்பு ஜெயந்தி ‘ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது . இதற்கு பாஜக , ஆர் எஸ் எஸ் , விஹெச்பி உள்ளிட்ட இந்துத்வா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு திப்பு ஜெயந்தியை முன்னிட்டு , மாநிலத்தில் உள்ள அனைத்து எம்பி , எம் எல் ஏ , மத்திய அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாநில சிறுபான்மையினர் நலத்துறை அழைப்பிதழ் அனுப்பி வருகிறது . அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு பாஜக மூத்த தலைவர்களுக்கும் எம்பி , எம் எல் ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்களுக்கு எதிராக போரிட்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை (திப்பு ஜெயந்தி ) கர்நாடக அரசு சார்பில் கொண்டாட மத்திய இணை அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் (பாஜக)”.... – தி இந்து 22-10-2017.
காங்கிரஸின் திப்பு ஜெயந்தி என்பது பிஜேபி-க்குஎதிரான அரசியல் நடவடிக்கை . ஆனால் ஏற்கனவே சியா / சன்னி முஸ்லீம் என்ற பிளவும் ; இந்து / முஸ்லீம் என்ற பிளவும் உள்ளது.
ஜெயந்தி கொண்டாடுவது எந்த அடிப்படையில் என்பதெல்லாம்  இங்கு ஆய்வுக் கில்லை.  மொட்டை அரசியல் சதுராட்டம்.
முஸ்லீம்களுக்கு அதிகாரம் (Phallic Power) இல்லை என்று காங்கிரஸ் எண்ணிக்கொண்டு முஸ்லீம்களுக்கு பதிலான அதிகாரமாக ( Phallic Power ) நிலைப்பாடு எடுக்கிறது .இதன் மூலம் முஸ்லீம்களின் ஆசைப்படுபொருளாக (object petit a ) தன்னைத்தானே அந்த இடத்தில் வைத்து , தன்னை முஸ்லீம்களின் ஆசை நாயகனாகக் காட்டிக் கொள்ள ஜெயந்தி கொண்டாடுகிறது.
முஸலீம்கள் இந்தவகை கோரிக்கையை ( demand ) காங்கிரஸிடம் வைத்தார்களா என்ன ?
ஆதரவு , வக்கிரமாக ( perversion ) தன்னைத்தானே முஸ்லீம்களின் அதிகார நாயகனாகப் பாவித்து , முஸ்லீம்களின் ஆசைப்படுபொருளாக தன்னைத்தானே ஆக்கிக்கொள்வதுதான் வக்கிர மனம் என்பது .
நெறிகளற்ற ஒரு உறவு முறையை தனக்குத்தானே கட்டிக்கொள்வது , முஸ்லீம் களிடையே பலாத்காரமான போக்கை ( violent move ) திணிப்பது காங்கிரஸின் அரசியல் வக்கிரச் செயலாகும்.
[ அரசியல் தளத்தில் நிறைய உலாவும் வக்கிரத்தை ( perversion ) , கட்டுடைப்பு செய்யவேண்டியுள்ளது. இனி வரும் ]
க.செ