15 Aug 2015

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு ’

மாரிக்கால பாராளுமன்ற கூட்டம் எதுவும் செய்யாமல் கூச்சல், குழப்பம், சகதியை மாறி மாறி  எறிதல் செயல்களை தொழுவத்தில் நடந்தேற்றி, மக்கள் வரிப்பணம் 25 கோடியை நாசமாக்கிவிட்டது . இந்த முதலாளிய ஜனநாயகத்திற்கு விரோதமான  EVIL  சக்திகள்.  மக்களின் வரிப்பணத்தை சூரையாடிய இந்த தீவினை சக்திகளை Media - க்கள் தங்களின் சார்புக்கேற்றார்போல் விமர்சிப்பதும், ஆதரிப்பதுமாகவும் உள்ளன.  இந்தத் தீ சக்திகள் முக்கியமாக வெளிப்படக் காரணம் சுஷ்மா.
அவரின் பேச்சு - இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் பேசியது,
.... லலித் மோடியின் மனைவி 17 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.  என்னுடைய இடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று நான் கேட்க விரும்புகின்றேன்.  லலித்மோடியின் மனைவி சாகட்டும் என்று விட்டுவிட்டிருப்பாரா?  லலித் மோடியின் மனைவி போன்ற பெண்ணுக்கு உதவி செய்வது குற்றம் என்றால், ஆமாம் நான் குற்றம் செய்தேன் என்று இந்த அவையில் ஒப்புக்கொள்கிறேன் நாடாளுமன்றம் எந்த தண்டனை வேண்டுமானாலும் எனக்கு வழங்கட்டும்
      .....இது முழுக்க முழுக்க மனிதாபிமான முறையில் எடுத்த நடவடிக்கைதான் .
                                                            -தி இந்து 7.8.15
எந்த நடவடிக்கையை மனிதாபிமான முறையில் எடுத்த நடவடிக்கை என்கிறார் அமைச்சர். 

      இந்த அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு இங்கிலாந்திலிருந்து போர்ச்சுகலுக்கு செல்ல   Passport வழங்குவதில் அமைச்சர் அரசாங்கத்திற்கு தெரியாமல் உதவியிருக்கிறார்.  இச்செயலை மனிதாபிமானம் என்கிறார் சுஷ்மா?
      அவர் மனிதாபிமானம் என்று பேசி கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய எதிர்வினை இதுதான்  - மனிதாபிமான உதவிகள் பற்றி, நான் கேள்விப்பட்டுள்ளேன், ஆனால், சுஷ்மா சுவராஜ் செய்த மனிதாபிமான உதவி பற்றி நான் கேள்விப்படவே இல்லை.
      ஏனெனில், அந்த உதவி ரகசியமாக செய்யப்பட்டது
                                                      -தினமலர் 13.08.15.
      ராகுல் , சுஷ்மாவின் செயல் ரகசியமாக செய்யப்பட்டது .  ஆகையால் இது மனிதாபிமான செயல் என்பதை மறுக்கிறார் எனலாம்.
      ராகுல், சுஷ்மாவின் சொல்லாடலை விட்டு விலகிப்போய் ரகசியம் என்ற பெயரில், சுஷ்மாவின் மனிதாபிமானத்தை மறுக்கிறார்.  இது வழமையான அரசியல்வாதிகளின் அணுகுமுறைதான்.
      சுஷ்மாவின் சொல்லாடலை, தன் செயலை மனிதாபிமானம்   என்று ஏன் முன் வைக்கிறார்?  அதில் உறைந்துள்ள விசயங்கள் என்னென்ன?  என்று கேள்வி எழுப்பினால்...? வழமையான கருத்தியல் இதற்கு பதிலளிக்காது.
      ஆகவே இந்தச் சொல்லாடலை கட்டுடைக்க மொழியியலின் ஒரு அலகான Symbolism-த்தை தன்னகத்தே கொண்டுள்ள லெக்கானிய மனஅலசலை ஆய்வுக்கருவியாய் கொள்ளும் பொழுது அந்த ”  மனிதாபிமானம் கட்டுடையலாம்.
      இந்த குறியியலை கோட்பாடாக்கியவர் எர்னஸ்ட் ஜோன்ஸ் என்னும் புகழ்பெற்ற  பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர் ஆவார்.
      வாசகர்கள் மனிதாபிமானம் “ என்ற குறிப்பான் எந்த இடத்தில் நுழைகிறது என்பதை சற்று கூர்மையாகப் பார்க்க வேண்டும்.  இங்கு மனிதாபிமானத்திற்கு என்று சொன்னவுடன் /  குறிப்பிட்டவுடன் நமது நனவிலியில் ஒரு காட்சி வெளிப்பட்டுவிடுகிறது, அதாவது மனிதாபிமானமென்பது எந்த விதிகளாலும் அளவிடமுடியாது; எல்லா விதிகளையும் மீறியது, இது நியாயமானது என்பதுதான் அது. 
சுஷ்மாவின் சொல்லாடலில் செய்த செயல்களுக்கான விளக்கமாக, அது மனிதாபிமான முறையில் எடுத்த நடவடிக்கைதான் என்கிறார்.  அதாவது அவருடைய செயலுக்கான உருவகமாக மனிதாபிமானத்தை முன்வைக்கிறார்.
      இப்போது அச்செயல் அரூபமாக, மிகப் பொதுவானதாக, உலகு தழுவியதாக மாற்றப்பட்டுவிட்டது.  அவரின் செயலின் ( பாஸ்போர்ட் வழங்க ஒத்துழைத்தது ) ஒரு பகுதி தற்போது மனிதாபிமானம் என்ற முழுமைக்குள் ஒரு பகுதியாக அடக்கப்பட்டுவிடுகிறது. 
இதனை லெக்கானின் வார்த்தைகளில் சொல்வதானால்,
ஒரு குறித்தல் சங்கிலியில் வேறொரு குறிப்பானை பொருத்துவதை உருவகம் எனலாம்; அக்குறிப்பான் குறிப்பீடாக ஆகிறது; அந்த உள்ளார்ந்த குறிப்பான் ஒரு இடைவெளியைத் தோற்றுவிக்கிறது.  இதன் மூலம் வேறொரு குறித்தல் சங்கிலியை உருவாக்க முடியும் -  Ecrits
ஆக, சுஷ்மாவின் நனவிலியில் மனிதாபிமானம் என்பது பிறரால் வழங்கப்பெற்று அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது ; அந்த மனிதாபிமானத்தின் வழியாக பிற இந்திய மக்கள் பார்க்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ( Desire  ) .  இங்கு மன அலசல் மொழியில் சொன்னால் “ The Unconscious thought process  interpreted as linguistic process ” - Lacan (அதே நூல்).  இன்னும் செறிவாக சொல்வதானால், “ Man’s  desire finds its meaning and sense in the desire of the Other ” (Ecrits, P.268). மேலும், மனிதாபிமானம் என்பது சுஷ்மாவைப் பொறுத்தவரை நோய்க் குறியாக இருக்கிறது.  அதாவது  ‘ a symptom is structured as language ’.   ஏனெனில் லலித் மோடியின் கடந்தகாலத்தைப் பற்றி இவர் எந்தவிதத்திலும் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் ,  So called  பின் நவீன உலகில், வெளியுறவு அமைச்சுக்கு தெரியாமல் செய்த பாஸ்போர்ட்டுக்கான உதவியானது , மனைவியின் கொடுந்துன்பம் ஆற்றுதலுக்கான மனிதாபிமான செயலாகிவிடுமா என்ன?
இறுதியாக, அவருடைய கூற்றில் மனிதாபிமானத்திற்கான தடம் ஏதும் தெரியவில்லை.  இது ஒருபுறம் இருக்க இந்த பிரச்சனைக்கு ‘ Ethical approach   என்பது அவரிடம் துளியும் இல்லை என்றே சொல்லலாம்.

பின்குறிப்பு.:-
நெறி ( Ethics ) என்பது அறம், ஒழுக்கம் போன்றவைகள் அல்ல ; மாறாக, பேசப்படும் Issue -ஐ “  நோக்கும் முறைமை ( attitude )   சார்ந்ததாகும்.
                                                                     -க.செ.
14-8-2015

No comments:

Post a Comment